வியாழன், 8 ஆகஸ்ட், 2013

எந்த நிகழ்வு நடந்தாலும் அதனை ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகின்றோம்


ஒருநாள் இரண்டாவது தளத்தில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கொத்தனாரை மூன்றாவது தளத்திலிருந்து மேற்பார்வையாளர் உடனடியாக அவரை நேரில் அழைத்து ஒருசில ஆலோசனைகளை செயற்படுத்துமாறு கூறுவதற்காக அந்த கொத்தனாரின் பெயரிட்டுஅழைத்தபோது அந்த கொத்தனார் திரும்பி பார்க்காததால் அந்த கொத்தனாரின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டு ஒரு பத்து ரூபாய் தாளை வீசி ஏறிந்தார் உடன் கொத்தனாரும் ஏதோ காற்றில் ரூபாய் தாள் தவறி வந்துவிட்டது போலும் நம்முடைய அதிருஷ்டம்தான் என எண்ணி அந்த பத்து ரூபாய் தாளை எடுத்து சட்டைபயில் வைத்து கொண்டு தன்னுடைய பணியை தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்

பின்னர் மேற்பார்வையாளர் நூறு ரூபாய் தாளையும் அதன்பின்னர் ஐந்நூறு ரூபாய் தாளையும் வீசி எறிந்தபோதும் அதே நிலைமை தொடர்ந்தது

அதனால் எரிச்சலுற்ற மேற்பார்வையாளர் சிறு கல் ஒன்றை எடுத்து கொத்தனாரை நோக்கி வீசிஎறிந்தபோது மிகச்சரியாக அந்த சிறு கல்லானது கொத்தனாரின் தலையில் விழுந்தவுடனே வலிபொறுக்கமுடியாமல் தலையை தடவிகொண்டே மேல்தளத்தை நோக்கி திரும்பினார் அங்கு அவருடைய மேற்பார்வையாளர் அவரை மேலே வருமாறு அழைத்ததை தொடர்ந்து அங்கு சென்றார்

இவ்வாறே நாமும் நம்முடைய வாழ்வில் ஏதேனும் சிறு நல்ல நிகழ்வு நடந்தால் அதனை நம்முடைய அதிருஷ்டம் என எண்ணி மகிழ்கின்றோம் அது ஏன் நடந்தது என ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகின்றோம் ஆனால் துன்ப நிகழ்வு ஏற்படும்போது மட்டும் நாம் உடனே எனக்குமட்டும் ஏன் இவ்வாறான துன்பம் ஏற்படுகின்றதுஎன அதை தீர்வு செய்வதற்கான நடவடிக்கை எதுவும் செய்திடாமல் மனச்சோர்வு அடைந்துவிடுகின்றோம்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...