சனி, 12 டிசம்பர், 2015

போதுமென்ற மனமே பொன்செயும் மருந்தாகும்


பெண்கள் தங்களுக்கு தேவையான கணவனை தேர்வுசெய்து கொள்முதல் செய்வதற்கான பெரிய கடைஒன்றை நியூயார்க் நகரில் துவங்கியிருந்தனர் அவ்வாறான கடையை தம்முடைய வாழ்நாளிலேயே கண்டதில்லையென பெண்களின் கூட்டம் அந்த கடையில் அலைகடலென குவிந்தனர் என்னதான் அந்த கடையில் இருக்கின்றதென காணலாமே என அந்த கடைக்கு ஒருபெண் சென்றார்

அந்தக்கடையின் ஒவ்வொரு மாடிக்கும் ஒருமுறை மட்டமே போகமுடியும் திருப்தியாக இல்லையெனில் அடுத்தமாடிக்கத்தான் செல்லவேண்டுமே தவிர மீண்டும் முந்தை தளத்திற்கு செல்லமுடியாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது

பரவாயில்லையே ஐந்துமாடி இருக்கின்றது எதிலாவது நமக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைக்காமலா போய்விடுவார் பார்க்கலாம் என முதல்மாடியில் முகப்பில் இந்த தளத்தில் இருக்கும் மாப்பிள்ளைகள் அனைவரும் வேலைவெட்டியில்லாதவர்கள் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு சீச்சீ இந்த தளம் வேண்டாம் என இரண்டாவது தளத்திற்கு சென்றார்

இரண்டாவதுதளத்தில் இங்கு உள்ள மாப்பிள்ளைகள் நல்லசம்பளத்துடன் கூடிய பணியில் உள்ளனர் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு பரவாயில்லை மேலும் கூடுதலான தகுதியிருந்தால் நன்றாகஇருக்கும் என எண்ணிக்கொண்டு அதற்கடுத்த தளத்தில் என்னஇருக்கின்றது என காண்போமென மூன்றாவது தளத்திற்கு சென்றார்

மூன்றாவது தளத்தில் இங்கு இருக்கும் மாப்பிள்ளைகள் அனைவரும் நல்லசம்பளத்துடன் கூடிய பணியோடு நல்ல அன்பாக பழகக்கூடியவர்கள் என்ற அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு அதைவிட இந்த தளத்தில் பரவாயில்லை சரி நான்காவது தளத்தில் என்னதான் இருக்கின்றது என காண்போம் என நான்காவதுதளத்திற்கு சென்றார்

அங்கு நான்காவது தளத்தில் இங்கு உள்ள மாப்பிள்ளைகள் நல்லசம்பளத்துடன் கூடிய பணியோடு நல்ல அன்பாக பழகுவதுடன் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்பவர்கள் என அறிவிப்பு பலகையிருந்ததை கண்டு மிகமிக பரவாயில்லை இதைவிட கூடுதல் தகுதியிருந்தால் நன்றாக இருக்குமே என ஐந்தாவது தளத்திற்கு சென்றார்

அங்கு மிக்க நன்றி நான்கு தளத்திலும் உங்களுக்கு பிடித்தமானமாப்பிள்ளை இருந்தபோதிலும் உங்களுக்கு பொருத்தமான மாப்பிள்ளை கண்டிப்பாக கிடைப்பார் மின்தூக்கி வழியாக சென்றுவாருங்கள் என வெளியே அனுப்பிவிட்டனர் .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...