ஞாயிறு, 17 ஜனவரி, 2016

அந்தந்த மனிதர்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு செயலும் நடைபெறும்


ரபி எனும் முஸ்லிம் சாமியார், ராமன் எனும் இந்துசாமியார் ரகு எனும் வழக்குரைஞர் ஆகிய மூன்று நபர்களும் தூரத்திலிருந்த நகரத்திற்கு மகிழுந்து ஒன்றில் ஒன்றாக பயனம் செய்தனர் இரவாகிவிட்டதால் நெடுஞ்சாலையின் இடையில் ஒருகுக்கிராமத்தில் தங்கவேண்டிய நிலையாகிவிட்டது

அங்கு ஒருவிவசாயினுடயை வீட்டில் இரவு தங்குவதற்காக வேண்டியபோது தன்னுடைய வீட்டின் அறையில் இருவர் மட்டுமே தங்கி ஓய்வெடுக்க முடியும். என்றும் அருகில் தானியங்களை சேமித்துவைக்கும் களஞ்சியத்தில் மேலும் ஒருவர் தங்கலாம் ஆனால் படுத்து ஓய்வெடுக்கும் அளவிற்கு வசதியில்லை என அந்த விவசாயி கூறினார் அதெல்லாம் பரவாயில்லை ஐயா, எங்களில் ஒருவர் தானிய களஞ்சியத்தில் அமர்ந்து கொண்டு இரவை கழித்துகாலையில் புறப்பட்டுவிடுவோம் என உறுதிகூறினார்கள்

முதலில் ரபி எனும் முஸ்லிம் சாமியார் தானியகளஞ்சியத்திலும் மற்றஇருவரும் வீட்டின் அறையிலும் தங்குவதாக முடிவுசெய்து இரவு அனைவரும் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் போது அந்த விவசாயினுடைய வீட்டின் முன்வாயில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது உடன் அந்த விவசாயியானவர் இன்று ஒரே தொந்திரவாக போய்விட்டதே என முனுமுனுத்து கொண்டே கதவை திறந்தார் வெளியில் ரபி எனும் முஸ்லிம் சாமியார், மன்னிக்கவேண்டும் ஐயா தானியகளஞ்சியத்திற்கு அருகில் குதிரை ஒன்று அசுத்தமாக இருந்ததால் என்னால் அமர்ந்து ஓய்வெடுக்க முடியவில்லை என கூறினார்

அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக ராமன் எனும் இந்துசாமியார் தானிய களஞ்சியத்தில் தான் ஓய்வெடுத்துகொள்வதாக கூறி சென்றார் பின்னர் இரண்டாவது முறையும் அந்த விவசாயினுடைய வீட்டின் முன்வாயில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது உடன் அந்த விவசாயி என்னடாஇது மிகவும் தொந்திரவாக போய்விட்டதே என முனுமுனுத்து கொண்டே கதவை திறந்தார்

தற்போது ராமன் எனும் இந்துசாமியார் மன்னிக்கவேண்டும் ஐயா தானியகளஞ்சியத்திற்கு அருகில் பசு ஒன்று அசுத்தமாக இருந்ததால் என்னால் அமர்ந்து ஓய்வெடுக்க முடியவில்லை என கூறினார் அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக ரகு எனும் வழக்குரைஞர் தானிய களஞ்சியத்தில் ஓய்வெடுத்து கொள்வதாக கூறி சென்றார் அதன்பின்னர் மூன்றாவது முறையும் அந்த விவசாயினுடைய வீட்டின் முன்வாயில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது உடன் அந்த விவசாயி சேச்சே இது போன்ற தொந்திரவை நான் சந்தித்ததேஇல்லை என மிகுந்த மனவருத்தத்துடன் கதவை திறந்தார் வெளியில் அவருடைய குதிரையும் பசுவும் நின்றுகொண்டிருந்தன .

உறுதியளித்தவாறு பொருளை திரும்ப ஒப்படைக்கும் பண்பு மிகவும் அரிதான செயலாகும்


எங்களுடைய நிறுவனத்தின் மிகமுக்கியமான குழுவின் கூட்டம் நடைபெற்றுகொண்டிருந்தது குழுவின் தலைவர் எழுதுவதற்காக பேனா ஒன்று கோரினார் கைவசம் இல்லாததால் வெளியில் அருகிலிருந்த அலுவலகத்தில் முன்பின் பழக்கமில்லாத ஒருவரவரிடம் அவருடைய பேனாவை வழங்கும்படி கோரியபோது ரொம்ப நல்லது நண்பரே இந்த பேனாவை எப்போது திரும்ப எனக்கு கொண்டுவந்து தருவீர்கள் என வினவியபோது குழுக்கூட்டம் முடிந்தவுடன் உங்களுடைய பேனாவை கண்டிப்பாக திரும்ப கொண்டுவந்து ஒப்படைக்கின்றேன் ஐயா என உறுதியளித்து அவருடைய பேனாவை வாங்கிசென்று நிறுவனத்தின் குழுத்தலைவரிடம் வழங்கினேன்

குழுக்கூட்டம் ஒருவழியாக முடிந்தபின்னர் உறுதியளித்தவாறு பேனாவை திரும்ப ஒப்படைக்க அருகிலிருந்த அலுவலகத்திற்கு சென்றபோது அந்த இருக்கையில் யாரும் இல்லாததிருந்தது இருந்தபோதிலும் பேனாவை திருப்பிடவேண்டும் என்பதால் என்னுடைய மடிக்கணினியில் பேனாவை குழுக்கூட்டத்திற்காக வழங்கியதற்கு மிகவும் நன்றிகலந்த வணக்கத்தை தெரிவித்துகொள்வதாகவும் இந்த உதவியை என்றென்றும் மறக்கமாட்டேன் மிகவும் நன்றி என சிறுகுறிப்பு ஒன்றினை தட்டச்சு செய்து அச்சிட்டு அதனோடு அந்த பேனாவையும் சேர்த்து இருக்கையில் வைத்து புறப்படதயாராக இருந்தபோது பேனா வழங்கிய நண்பர் வந்துசேர்ந்தார் என்னுடைய குறிப்புதாளையும் பேனாவையும் பார்த்து மிகமகிழ்ச்சியுற்றார் இந்த காலத்திலும் உறுதியளித்தவாறு பொருளை திரும்ப ஒப்படைக்கும் பண்பு மிகவும் அரிதான செயலாகும் என மனமுருகி நன்றி பாராட்டினார்

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

ஒருவர் இறந்தபின்னரும் அவர் செய்த நற்செயல்களால் விளையம் பெயரும்புகழும் என்றென்றும் நிலைத்து நிற்கும்


மிகப்பெரிய தொழில் அதிபர் ஒருவர் இருந்தார் அவருக்கு அன்று மிக முக்கியமான வியாபார கூட்டம் ஒன்றில கலந்து கொண்டிருந்தார் அப்போது அவருடைய சொந்த வாகண ஓட்டுனர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது உடன் தன்னுடைய வியாபார கூட்டத்தை அப்படியே இடையில் நிறுத்தும் செய்துவிட்டு ஓட்டுனரின் குடும்பத்தாரை தான் வந்தபின் இறுதிசடங்கு நிகழ்வுகளை நடத்துமாறு கோரியபின் அதிகவேக வண்டியை பிடித்து அவருடையவாகண ஓட்டுனரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள திரும்பினார்.

பிறகு அவருடைய சொந்த வாகண ஓட்டுனரின் ஊருக்கு வந்துசேர்ந்தபின் அவ்வோட்டுனருடைய உடலை தன்னுடைய வாகணத்திலேயே வைத்து ஊர்வலமாக இடுகாடுவரை அந்த தொழில் அதிபரேவாகணத்தை ஓட்டி சென்று சேர்த்தார்

அனைவரும் அந்த தொழில் அதிபரிடம் எதற்காக அவ்வாறு தன்னுடைய வாகணஓட்டுனரின் இறுதி பயனத்தின் வாகணத்தினை அந்த தொழில் அதிபரே ஓட்டிசென்றார் என்று வினவியபோது

அந்த வாகணஓட்டுனர் அல்லுபகலும் அயராது அந்த தொழில் அதிபருடனே இருந்து பணிபுரிந்துவந்தார் எப்போதும் அந்த தொழில் அதிபரை கண்ணும்கருத்துமாக பாதுகாத்துவந்தார் அதற்கு நன்றிகடனாக அவ்வாறு செய்ததாகவும் நம்முடைய வாழ்வில் நாம் எவ்வளவுதான் பணத்தையும் சொத்துகளையும் சம்பாதித்தாலும் அவையனைத்தும் நாம் இறந்தபின்னர் நம்மோடு எடுத்து செல்லமுடியாது ஆனால் ஒருவர் இறந்தபின்னரும் அவர் செய்த நற்செயல்களால் விளையம் பெயரும்புகழும் என்றென்றும் நிலைத்து நிற்கும்

அதனால் நம்முடைய வாழ்நாளில் ஏதாவது நற்செயல்களை செய்திடவேண்டும் என அறிவுரை கூறினார் அதைபோன்று நம் வாழும் நாளில் நம்மால் முடிந்த செயல்களை உதவிகளை நாமும் செய்திடுவோம்

நாம் அனைவரும் நம்முடைய சகோதர்கள் மட்டுமல்லாது சமூகத்தில் உள்ள அனைவருடனும் நட்புறவுடன் சுமுகமாக பழகி வாழுவோம் என உறுதி எடுத்துகொள்வோம்


ஓருமாணவன் தன்னுடைய சகோதரர்களுடன் சுமுகமாக அன்புடன் உறவாடவும் பழகவும் முடியவில்லை என்றும் இதற்கு நல்ல தீர்வு ஒன்றை கூறுமாறு தன்னுடைய ஆசிரியரிடம் வேண்டினார் உடன் அந்த ஆசிரியர் அம்மாணவன் கைவசம் வைத்துள்ள விலைமதிப்புள்ள செல்லிடத்து பேசியை வாங்கி பார்த்துவிட்டு அந்தமாணவனிடம் கொடுத்து அதனை அருகிலிருந்த சாக்கடை சேற்றில் வீசியெறிமாறு கூறினார் உடன் அந்த மாணவன் அதுஎப்படி ஐயா முடியும் இப்போதுதான் இதனை என்னுடைய பெற்றோர்கள் அதிக செலவில் புத்தம்புதியதாக வாங்கி எனக்கு வழங்கினார்கள் அதனால் நான் எவ்வாறு இதனை தூக்கி சாக்கடை சேற்றில் வீசிஎறிவேன் என மறுத்து கூறினான் பார்த்தாயா ஒரு உயிரற்ற உனக்கு உடைமையான பொருளையே உன்னால் அது அதிகவிலைமிக்கது மதிப்புமிக்கதுஎன தூக்கிஎறியாமல் பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளாய் ஆனால் உன்னோடு உயிருள்ள உன்னுடைய சொந்த சகோதரர்களை மட்டும் அவர்களுடன் அன்புடன்அனுசரித்து நட்பு பாராட்டி பழகமுடியாது இருக்கின்றாய் இதுமட்டும் சரியா என உன்னுடைய நெஞ்சினை தொட்டு உணர்ந்து கூறு என அறிவுரையாக வினவியதும் ஆம் ஐயா நீங்கள் கூறுவது சரியானதுதான் நான் இனிமுதற்கொண்டு என்னுடைய சகோதரர்களுடன் சுமுகமாக பழகி அன்புடனும் நட்பறவுடனும் நடந்துகொள்வேன் என உறுதியளித்தான்

ஆம் நாம் அனைவரும் நம்முடைய சகோதர்கள் மட்டுமல்லாது சமூகத்தில் உள்ள அனைவருடனும் நட்புறவுடன் சுமுகமாக பழகி வாழுவோம் என உறுதி எடுத்துகொள்வோம்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...