புதன், 15 ஜூன், 2016

உடைமையை பொருத்தே நம்முடைய மனம் அந்த பொருளிற்கான பதில் செயல்களை உருவாக்குகின்றது


ஒரு ஊரில் வாழும் மனிதன் ஒருவன் சிறிதுகாலம் வெளியூர் சென்று வந்தான் அவனுடைய ஊரை நெருங்கும்போது வீடு ஒன்று பயங்கரமாக தீபிடித்து எரிவதை பார்த்தான் அந்த ஊர் மக்கள் அனைவரும் கும்பலாக அங்குவந்து தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்

அந்த மனிதன் எரியும் வீட்டின் அருகில் சென்று சேரும்போதுதான்அது தன்னுடைய வீடு என தெரியவந்தது. அதனால் பதைபதைப்புடன் அந்தவீட்டில் பிடித்திருந்த தீயை அணைக்கலாம் எனஓடினான் ஆயினும் யாரும் அருகிலேயே நெருங்கமுடியவில்லை அந்த அளவிற்கு தீயானது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது அந்த வீட்டிலிருந்து ஒரு பொருள்கூட மீட்க முடியாத நிலையில் தீஎரிந்து கொண்டிருந்தது

அவனுடைய முன்னோர்கள் அந்த மனிதனுக்காக உருவாக்கிய அருமையான வீடாகும் அதனால் ஐயோ வீடு வீட்டில்உள்ள பொருள் அனைத்தும் வீணாகி போய்விட்டதே என அழுதுபுரண்டு தலையில் கைவைத்துகொண்டு தரையில் அப்படியே அமர்ந்து விட்டான்

அந்த நேரத்தில் அவனுடைய மகன்ஒருவன் ஒடிவந்து அப்பா கவலைபடாதீர்கள் நீங்கள் ஊருக்கு போனபோது உங்களை எதிர்பார்த்திடாமல் நாம் எதிர்பார்த்ததைவிட நான்கு மடங்கு விலைக்கு நம்முடைய வீட்டினை விற்றேன் என க்கூறினான் இந்த செய்தியை கேட்டவுடன் அந்த மனிதன் அழுது புலம்புவதை விட்டிட்டு யாருடைய வீடோ எரிகின்றது என சிரித்து கொண்டு வேடிக்கை பார்த்திட ஆரம்பித்தான்

சிறிதுநேரம் கழித்து அந்த மனிதனுடைய இரண்டாவது மகன் வந்து அப்பா அண்ணன் நம்முடைய வீட்டினை விற்பதற்கு ஒப்பந்தம் மட்டும் செய்துகொண்டு முன்பணம் பெற்று கொண்டிருந்தார் அதனை தொடர்ந்து நாம் விற்பனையை செய்தால் மட்டுமே வீடு பெறுபவருக்கு சொந்தமாகும் இந்த வீடு தற்போது நம்முடைய உடைமைதான் எனக்கூறினான்

இதைக்கேட்டவுடன் அந்த மனிதனுக்கு இதயவலி ஏற்பட்டுது அதனால் அப்படியே நின்றிருந்த வாரே கீழே சாய ஆரம்பித்தான் உடனிருந்தவர்களும் அந்த மனிதனுடைய மகன்களும் அவரை கைதாங்கலாக பிடித்து அமரவைத்து குடிப்பதற்கு சிறிது குடிநீர் அந்த மனிதனுக்கு கொடுத்து குடிக்கசெய்து சமநிலை படுத்திகொண்டிருந்தனர்

வீட்டின் தீ மிகவும் அதிகஅளவு கொழுந்து விட்டுதொடர்ந்து எரிந்து் கொண்டிருந்தது ஊர் பொதுமக்கள் யாருடைய வீடோ எரிகின்றது என தூரத்தில் இருந்தனர்

அதன்பின்னர் சிறிதுநேரம் கழித்து அந்த மனிதனுடைய மூன்றாவது மகன் வந்து அப்பா வீடு எரிந்த சாம்பல் ஆனாலும் பரவாயில்லை ஒப்பந்தம் செய்தவாறு முன்பணம் போக மிகுதி தொகையை கண்டிப்பாக வழங்குவதாக ஒப்பந்ததாரர் கூறுகின்றார் என க்கூறியதும் உடன் தெம்புடன் தரையில் அமர்ந்திருந்த நிலையிலிருந்து எழுந்து யாருடைய வீடோ யாருடைய பொருட்களோ முழுவதும் எரிந்து சாம்பலாகின்றன என சிரித்துகொண்டே பொதுமக்களோடு சேர்ந்து வீடு எரிந்து சாம்பலாவதை வேடிக்க பார்த்திட ஆரம்பித்தான்

நீதி.எந்த வொரு பொருளும் நம்முடைய உடைமை யெனில் அதனை நாம் மிகஅதிக அக்கறையோடு கவணிப்போம் மற்றர்களின் உடைமையெனில் அலட்சியமாக கவணிப்போம் ஆயினும் இரண்டு நிலையிலும் பொருளும் அதன் தன்மையும் மாறாதது ஆகும் அதன் உடைமையை பொருத்தே நம்முடைய மனம் அந்த பொருளிற்கான பதில் செயல்களை உருவாக்குகின்றது

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: