திங்கள், 20 ஜூன், 2016

அனைவரையும் சமமாக மதித்து நடத்துவதே சரியான செயலாகும்


. என்னுடைய நண்பர் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருந்தார் அவருடைய அலுவலகத்தில் வரவேற்பறையில் பணிபுரிபவர் அந்த நிறுவனத்தின் சாதாரன ஊழியர் ஆவார் ஒருசமயம் அந்த நண்பர் வரவேற்பு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தார் அந்த ஊழியர் எழுந்து நின்று தேவையான ஆவணங்களை எடுத்து காண்பித்து கொண்டும் தேவையான விவரங்களையும் விளக்கங்களையும் கூறிக்கொண்டுமிருந்தார்

அப்போது வெளியிலிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது அந்த அழைப்பை அந்த வரவேற்பறை ஊழியர் ஏற்று பேசஆரம்பித்தார் உடன் எதிர்முனையில் இருப்பவர் இந்த நிறுவனத்திடமிருந்த பெறப்பட்ட பொருட்களில் குறைபாடு ஏதோ இருந்தது அதனால் இவர் சாதாரண ஊழியர் என்பதால் அவர்களுடைய நிறுவனத்தை பற்றியும் அவர்கள் உற்பத்தி செய்திடும் பொருட்களை பற்றியும் மிகவும் தரக்குறைவாகவும் அந்த ஊழியரையும் தரக்குறைவான சொற்களால் திட்டிகொண்டிருந்தார்

அதனை தொடர்ந்து நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அந்த தொலை பேசியை வாங்கி தான் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் என்றும் எதிர்முனையில் இருப்பவரின் குறை என்னவென கூறினால் உடன் அதனை சரிசெய்வதாகவும் கூறியவுடன் எதிர்முனையில் இதுவரை கோபமாக திட்டிகொண்டிருந்தவர் அமைதியாக அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா உங்கள் நிறுவனத்தில் இருந்து அனுப்பட்ட பொருளில் சிறிய குறைபாடு உள்ள து அதனை சரிசெய்து கொடுத்தால் போதும் என கூறினார் உடன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும் சரிசெய்துவிடுவதாக பதில் கூறி தொலைபேசியை வைத்தார்

நீதி நம்முடைய சமூக அமைப்பில் நாம் கீழ்நிலையில் உள்ளவர்கள் எனில் அவர்களை தரக்குறைவாக பேசவும் நடத்தவும் செய்கின்றோம் அதே உயர்நிலையில் இருப்பவர்கள் எனில் தவறு அவர்மீது இருந்தாலும் அதனை அப்படியே தவறே இல்லை என்றவாறு விட்டுவிடுகின்றோம் இது தவறான முன்னுதாரணமாகும் இந்த உலகில் பிறந்த நாம் அனைவரும் சமமே அதனால் நாம் அனைவரையும் சமமாக மதித்து நடத்துவதே சரியான செயலாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...