ஒருமகிழ்வுந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைபொறியாளர் ஒருவர் புதிய வகை மகிழ்வுந்து ஒன்றினை வடிவமைத்து தொழிலகத்திலிருந்து நுழைவுவாயில் வழியாக வெளியில் காட்சி கூடத்திற்கு அந்தபுதிய வகை மகிழ்வுந்தினை கொண்டு செல்ல முயன்றார்
ஆனால் நுழைவுவாயிலின் வாயிற்படியானது மகிழ்வுந்தின் கூரை மோதிக்கொண்டு வெளியேகொண்டுவரமுடியாமல் நின்றுகொண்டது அதனால் அந்த நிறுவனத்தின் தலைமைபொறியாளருக்கு "முதன்முதல் புதியவகை மகிழ்வுந்து ஒன்றினை வடிவமைத்தோம் அதனை தொழிலகத்திலிருந்து காட்சி கூடத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லையே" என மனவருத்தமாகிவிட்டது
இந்நிலையில் வர்ணம் பூசம் தொழிலாளி "ஐயா மகிழ்வுந்தின் கூரையின் மேல் பூசிய வர்ணத்தை சுரண்டிவிட்டால் வண்டியை சுலபமாக வெளியே கொண்டுவரமுடியும்" என ஆலோசனை கூறினார் மேலும் இவ்வாறு ஒவ்வொருதொழிலாளியும் ஒவ்வொரு ஆலோசனை கூறியதை கேட்டதலைமைபொறியாளர் கோபம் அதிகமாகி யாரும் எனக்கு ஆலோசனை கூறத்தேவையில்லை நான் உத்திரவிடுவதை செயற்படுத்து-வதுதான் உங்களுடைய பணி எல்லோரும் பேசாமல் கலைந்து போய்விடுங்கள் " எனக்கூறியபின்னர் சிறிதுநேரம் தமக்குள் ஆலோசித்து தம்கீழ் பணிபுரியும் தொழிலாளர்களை அழைத்து "இந்த நுழைவுவாயிலின் மேற்பகுதியை மட்டும் வெட்டியெடுங்கள் போதும் என உத்திரவிட்டார்
அப்போது அந்த நுழைவாயிலின் காவலுக்கு நின்றிருந்த காவலாளி "ஐயா நான் இந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்கான வழியொன்று கூறுகின்றேன் சற்று காதுகொடுத்து கேட்கின்றீர்களா" என மிகமெதுவாக கோரினார் தற்போது அந்த தலைமை-பொறியாளர் கோபமில்லாமல் அமைதியாக இருந்ததால் "சரி சொல்" என உத்திரவிட்டார்
உடன் அந்த நுழைவாயிலின் "காவலாளி பெரியதாக ஒன்றுமில்லை ஐயா வண்டியின் உயரம் குறைந்துவிடும் அளவிற்கு வண்டியின் நான்கு சக்கரத்திலும் உள்ள காற்றினைதிறந்துவிட்டபின்னர் வண்டியை நுழைவு வாயிலிற்கு வெளியில் கொண்டுவந்து அதன்பின்னர் நான்கு சக்கரத்திலும் போதுமான காற்றினை பிடித்து கொள்ளலாம் இதற்காக நுழைவாயிலின் மேற்கூரையை வெட்டிடத் தேவையில்லை" என கூறினார் உடன் அவ்வாறே செயல்படுத்த பட்டது.
தகுதி குறைவானவர்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து மிகச்சரியான பொருத்தமான எளிய ஆலோசனை கிடைத்தால் அதனை ஏற்றுகொள்ளும் மனப்பாங்கு தலைமையாளருக்கு இருக்கவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக