வெள்ளி, 2 செப்டம்பர், 2016

எதையெதை எதனோடு மிகச்சரியாக கலந்தால் அமைதியாகிவிடும் என பக்குவமாக கையாளச்செய்தால் அமைதியான வாழ்க்கை அமையும்


ஒரு சிறுவன் தன்னுடைய பாட்டியிடம் ஏன் பாட்டி தற்போதெல்லாம் பள்ளிக்கு போனாலும் பிரச்சினை ,நண்பர்களுடன் விளையாடச்சென்றாலும் பிரச்சினை, வீட்டிற்கு ஓய்வெடுக்க வந்தால் இங்கு வீட்டிலும் பிரச்சினை வீட்டிற்கு வெளியில்தான் செல்வோமே என வெளியில் சென்றால் அங்கு பக்கத்து வீட்டு பிள்ளைகளுடன் பிரச்சினை, அதைவிட தலைவலி உடல்வலி என நம்முடைய உடலிலும் பிரச்சினை என எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சினையாகவே உள்ளன இதற்கு என்னதான் காரணம் என வினவினான்

"பேராண்டி அவைகளுக்கான காரணத்தை அப்புறமாக விளக்கமாக கூறுகின்றேன் முதலில் இப்போது மாலை நேரமாகின்றது உனக்கு தின்பண்டம் எதுவும் இல்லை என்ன வேண்டும்" என பாட்டி வினவினாள் உடன் அந்த சிறுவன் "பாட்டி எனக்கு பஜ்ஜி செய்து கொடு பட்டி" என கோரினான்

உடன் பாட்டி "அப்படியா இது என்ன" சிறுவன் "எண்ணெய் பாட்டி". பாட்டி"இதை குடி பார்க்கலாம்" சிறுவன் "ஐய்யய்யோ வயிற்றுப்போக்கு ஆகிவிடும் பாட்டி" பாட்டி "சரி இது என்ன" சிறுவன் "பஜ்ஜி மாவு" பாட்டி"இதை தின்னு பார்க்கலாம்" சிறுவன் "ஐய்யய்யோ வயிறு செரிக்காது பாட்டி" பாட்டி "சரி இது என்ன" சிறுவன் "பச்சைமிளகாய் பாட்டி" பாட்டி "இதை கடித்து தின்னு பார்க்கலாம்" சிறுவன் "ஐய்யய்யோ காரம் வாயெல்லாம் எரியும் பாட்டி"

பாட்டி "ரொம்ப சரி ஆயினும் இவைகளுள் தேவையான பொருட்களை மட்டும் மிகச் சரியாக கலந்து அடுப்பில் வானலியை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி சூடேற்றி நீ கோரிய பஜ்ஜி செய்தால் சாப்பிடலாம் அல்லவா அதேபோன்று பிரச்சினைகளுள் எதையெதை எதனோடு மிகச்சரியாக கலந்தால் அமைதியாகிவிடும் என பக்குவமாக கையாளச்செய்தால் அமைதியான வாழ்க்கை அமையும்என தெரிந்துகொள்" என தன்னுடைய பெயரனுக்கு அறிவுரை கூறினார் பாட்டி

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...