ஒருநாள் பல்வேறு சிறு சிறு தபால் அலுவலகங்களிலிருந்து வருகின்ற கடிதங்களையெல்லாம் பிரித்து அந்தந்த முகவரிக்கு அனுப்புகின்ற பிரிப்பகத்திற்கு பெறுநர் முகவரி பகுதியில் 'கடவுள்' என்று மட்டும் குறிப்பிட்டு வேறு முழுமுகவரி எதுவும் இல்லாமல் ஒரு கடிதம் வந்திருந்தது உடன் அதனை எந்த ஊருக்கு அனுப்புவதற்காக பிரிப்பது என சிறிதுநேரம் தடுமாறியபின் அதனை தனியே எடுத்து வைத்துவிட்டு மற்ற கடிதங்களையெல்லாம் பிரித்து முடித்து கட்டுகளாக கட்டி பணியமுடித்தபின்னர் இந்த கடிதத்தில் என்னதான் செய்தி உள்ளது என பார்த்திடலாம் என பிரித்து பார்த்தபோது அந்த கடிதத்தில்
அன்புள்ள கடவுளே
நான் ஒரு எண்பது வயதுடைய வயாதான யாருடைய உதவியுமில்லாமல் என்னுடைய இறந்த கணவரின் மிகக்குறைவான ஓய்வூதிய தொகையை கொண்டு வாழ்பவள் இந்நிலையில் என்னுடைய பணப்பையில் மிகுதி இருந்த ஒரு ஆயிரம் ரூபாயை யாரோ திருடி சென்றுவிட்டனர் அதனால் வரும் தீபாவளி பண்டிகையை என்னுடைய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாட இயலாமல் மிகமனவருத்ததுடன் இருக்கின்றேன் நான் வயிறார சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களை வாங்குவதற்குகூட வழியில்லாமல்மிக சிரமப்படுகின்றேன் எனக்கென தனியாக வாரிசு யாரும் இல்லாததால் எனக்கு இருக்கின்ற ஒரே நம்பிக்கையாக இருப்பவர் கடவுளாகிய நீ மட்டுமே அதனால் கண்டிப்பாக நீ எனக்கு இந்த இக்கட்டில் உதவுவாய் என நம்புகின்றேன்
என்றும் உன்னுடைய நம்பிக்கையில் வாழும்
என முடிந்திருந்தது உடன்தன்னுடன் பணிபுரியும் அனைவரிடமும் இந்த கடித்தத்தினை காண்பித்து இறுதியாக அனைவரிடமும் அவரவர்களால் கொடுக்க முடிந்த தொகைய வசூலித்து போது ரூபாய் 990 மட்டும் சேர்ந்திருந்திருந்தது அதனை அப்படியே அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பணஅஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்தார் அந்த தபால் அலுவலக பணியாளர் அதன்பின்னர் தீபாவளி பணிடிகை முடிந்து நான்கைந்து நாட்கள் கழித்து அதே முகவரியிலிருந்து மீண்டும் பெறுநர் முகவரியாக முன்புபோலவே 'கடவுள்' என்று மட்டும் குறிப்பிட்டு வேறு முழுமுகவரி எதுவும் இல்லாமல் ஒரு கடிதம் வந்திருந்தது தற்போது என்னதான் அந்த பாட்டி எழுதியிருப்பார் என அந்த கடிதத்தை பிரித்து பார்த்தபோது
அன்புள்ள கடவுளே
உன்னுடைய கருணையை குறிப்பிடுவதற்கு சொற்களே இல்லை உள்ளன்புடன் இந்த அபலையின் கோரி்க்கையைஏற்று செயற்படுத்திய உன்னுடைய உதவிக்கு மிகவும் நன்றிகூற கடமைபட்டுள்ளேன் மேலும் மிக மகிழ்ச்சியுடன் உன்னுடைய நினைவாக என்னுடைய நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையைமிகசிறப்பாக கொண்டாடிவிட்டேன் அதனோடு எனக்கு கண்டிப்பாக நீ ரூபாய் ஆயிரம் அனுப்பி இருப்பாய் என நம்புகின்றேன் ஆனால் இந்த தபால் அலுவலகத்தில் பணிபுரியும் யாரோ ஒரு சோம்பேறி பயல் அதில் பத்துரூபாயை மட்டும் திருடி கொண்டுவிட்டான் அவனை மன்னித்திவிடுக
என்றும் உன்னுடைய நம்பிக்கையில் வாழும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக