ஞாயிறு, 18 ஜூன், 2017

நீரில் மூழ்கிப்போன பூனை


ஓடும் தண்ணீரில் வீழ்ந்த பூனை ஒன்று , அந்த தண்ணீருக்குள் மூழ்கி தன்னுடைய உயிருக்காக தத்தளித்து கொண்டிருந்தது அதனை கண்ணுற்று கரையில் நின்று கொண்டிருந்த வயதான நபர் ஒருவர் அவ்வாறு உயிருக்கு போராடிகொண்டிருந்த அந்த பூனையை காப்பாற்ற முடிவு செய்தார், . அதற்காக அவர் தனது கையை நீட்டி அந்த பூனையை பிடித்திட முயன்றார் ஆனால் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த பூனையானது தன்னுடைய கால் நகத்தால் அவருடைய கையை கீறியது அதனை தொடர்ந்து அவருடைய கைகளில் ஏற்பட்ட வலியினால் அவர் தனது கையை பூனை காப்பாற்றுவதிலிருந்து இழுத்துகொண்டார் எனினும், ஒரு நிமிடம் கழித்து அவர் அந்த பூனையை காப்பாற்ற மீண்டும் தனது கையை நீட்டி பிடிக்க முயன்றார், ஆனால் அந்தபூனையானது மீண்டும் அவரை தன்னுடைய கால்களின் நகத்தால் கீறியது , அதானால் மீண்டும் ஏற்பட்ட மிக அதிக வலியால் மீண்டும் தன்னுடைய கையை இழுத்து கொண்டார் . இருந்தபோதிலும் மற்றொரு நிமிடம் கழித்து அவர் மூன்றாவது முறையாக மீண்டும் தன்னுடைய கைகளை நீட்டி அந்த பூனையை காப்பாற்ற முயற்சி செய்தார்! உடன் அவருடைய உள்மனமானது அவரிடம், " அந்த பூனையானதுஇரண்டுமுறையும் உன்னுடைய கைகளை தன்னுடைய கால்களின் நகங்களால் கீறி காயப்படுத்தியும் அதிலிருந்து பாடம் எதுவும் கற்றுகொள்ளாமல் மூன்றாவது முறையாக அந்த பூனையை காப்பாற்ற முயற்சிக்கிறாயா?” எனக்கேள்வியை எழுப்பியும் அதனை ஒதுக்கிவிட்டு அந்த மனிதன் வாயற்ற உயிரினம் ஒன்று உயிருக்கு போராடும்போது அந்த பூனையை காப்பாற்ற நம்மால் முடிந்த வரை முயற்சி செய்வது நம்முடைய கடமைஎன முயற்சி செய்து கைகளில் அந்த பூனையின் கால்நகங்களினால் கீறியதால் ஏற்பட்ட வலியை பொருட்படுத்தாது அந்த பூனையின் உயிரைகாப்பதில் வெற்றி பெற்றர். அதேபோன்று மனிதர்களாகிய நாம் அனைவரும் நம்முடைய பிள்ளைகளுக்கும் நம்மைவிட அனுபவமில்லாதவர்களுக்கும் உதவி செய்யமுற்படும்போது நமக்கு ஏற்படும் எந்தவொரு இடர்களுக்கும் சோர்வுறாமல் அவர்களுக்கு தேவையான நல்ல செயல்களை செய்து நல்வழிகாட்டுவது நம்முடைய கடைமையாகும்

செவ்வாய், 13 ஜூன், 2017

இரத்தத்தில் சர்க்கரை இருக்கின்றதா எனும் பரிசோதனை


தமிழ்நாட்டின் கிராமம் ஒன்றில் வாழும் ஒரு நடுத்தர வயதுமனிதன் அருகிலிருந்த நகரத்தின் மருந்துகடை ஒன்றிற்கு சென்றார்கையோடு சிறு கண்ணாடியாலான பாட்டில் ஒன்றும் ஒரு ஸ்பூனும் எடுத்து சென்றிருந்தார் அந்த மருந்துகடையில் இருந்த மருந்தாளுநரிடம் தான்வைத்திருந்த பாட்டிலிலிருந்த தண்ணீர் போன்ற திரவத்தை கைவசமிருந்த ஸ்பூனில் ஊற்றி "ஐயா! இந்த தண்ணீரை சுவைத்து பாருங்கள் இனிப்பாக இருக்கின்றதா? என சுவைத்தபின் கூறுங்கள்" என கேட்டுகொண்டார் அதனைதொடர்ந்த அந்த மருந்தாளுநரும் அந்த ஸ்பூனில் இருந்த தண்ணீரை வாயில் வைத்து சுவைத்தபின்னர் "இனிப்பாகவும் இல்லை சுவையாகவும் இல்லையே" என பதில் கூறினார் "இதைதான்ஐயா! நானும் கூறுகின்றேன் ஆனால் மருத்துவர் "உனக்கு சர்க்கரை வியாதி வந்துள்ளது உன்னுடைய மூத்திரத்தில் சர்க்கரை அளவு அதிகமாக செல்கின்றது நீபோய் அந்த மருந்து கடையில் நான் எழுதிதரும் மாத்திரையை வாங்கி ஒருமாதத்திற்கு சாப்பிட்டபின் திரும்பிவா" எனக்கூறுகின்றார் இது சரியா? ஐயா! என்னுடைய மூத்திரம் இனிப்பாக இல்லை எனநீங்களே கூறிவிட்டீர்கள் அப்புறம் நான்எதற்கு சர்க்கரைக்கான மாத்திரை வாங்கவேண்டும்" என பஞ்சாயத்து பேசினார் இவ்வாறான பேச்சினை கேட்டவுடன் மருந்தாளுநர் வெண்ணைதின்ற குரங்காக அடுத்து என்னசெய்வது என தெரியாமல் திகைத்து உட்கார்ந்து விட்டார்

திங்கள், 5 ஜூன், 2017

குட்டி முயல்களும் அவற்றின் தாய்முயலும்


ஒரு தாய் முயலும் பல குட்டி முயல்களும் ஒன்றாக சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்ந்துவந்தன . அந்த தாய்முயலானது , நாள் முழுவதும் அவைகளுக்கு சிறந்தது எது என அவ்வப்போது அறிவுரை கூறி திருத்துவது: அவைகள் சாப்பிடக்கூடிய மூலிகைகள், சாப்பிடாமல் தவிர்க்கூடியவை எவை என சிறந்த வழிகாட்டியாக வும் இருந்து ,உணவை தேடுவதற்கு வெளியே எப்போது செல்வது என்பனபோன்று ஆலோசனைகளுடனும் ஒரு நல்ல தாயாக தன்னுடைய பிள்ளைகளுக்கு சிறப்பாக வழிகாட்டி வளர்த்துவந்தது "எல்லாவற்றிற்கும் மேலாக, வேட்டைக்காரர்களிடம் மாட்டாமல் நம்முடைய உயிர்பாதுகாப்பதி ல் நீங்கள் அதிககவனம் செலுத்த வேண்டும் ..." என்ற அறிவுரையை இறுதியாக கூறியது "ஆனால் பத்திரிகைகளை எதையும் நாங்கள் படிக்காமல் வேட்டைக்கார்களை ப் பற்றிய செய்தியை நாம் எப்படி அறிந்து கொள்வது?" என்று ஒரு குட்டிமுயல் ஒன்று தன்னுடைய தாயிடம் சந்தேகம் கேட்டது. "வெகு தொலைவில் துப்பாக்கி சத்தங்களுடன், வேட்டை நாய்கள் குரைத்து கொண்டு ஓடிவருகின்ற சத்தங்களை கேட்டவுடன் , நீங்கள் ஓடி பதுங்கி கொள்ள வேண்டும்," என்று அவர்களுடைய தாய் முயல் எச்சரித்தது. இதனை தொடர்ந்து ஒரு நாள், குட்டிமுயல்களில் ஒன்று அவசரஅவசரமாக தன்னுடைய தாய்முயலிடம் ஓடிவந்து "அம்மா அம்மா நான் வெகுதூரத்தில் நீங்கள் கூறியவாறான வேட்டுசத்தங்களும் பேண்ட் வாத்திய முழக்கங்களும் நாய் குறைப்பு சத்தத்தையும் கேட்டேன் வேட்டைக்காரர்கள் வேட்டையாட வந்துகொண்டிருக்கின்றனர் தயைவுசெய்து வாருங்கள் நாம் மறைந்து கொள்வோம் . " என பதட்டத்துடன் கூறியது உடன் தாய் முயல் "பிள்ளைகளே , தூரத்தில் கேட்கும் வேட்டுசத்தம் துப்பாக்கி சத்தமன்று கிராமத்தில் திருவிழா நடைபெறுகின்றது அதில் புஸ்வானம் விடுவார்கள் அந்த சத்தமும் அதனோடு அவர்கள் இசைக்கருவிகளை இயக்கி மகிழ்ச்சியாக ஆடிப்பாடுகின்றனர் அதுவும் சேர்ந்து அவ்வாறு கேட்கின்றது அதனால் பயப்படவேண்டாம் நாம் நம்முடைய உணவு தேடலை தொடர்ந்து செயல்படுத்திடுவேம் . " என ஆறுதல் கூறி அமைதிபடுத்தியது சில நாட்கள் கழித்து, குடும்பம் முழுவதும் உணவை தேடி மேய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு பாம்பு நடனம் போன்ற காதுக்கு இனிய மெல்லிசைய காற்றில் எதிரொலித்தது போது ..இதற்குமுன் இது போன்ற எதையும் கேட்டதில்லை அதனால் தாய் முயல் கவனத்துடன் குட்டி முயல்களை பார்த்து."பிள்ளைகளே நாம் தற்போது நம்முடைய வீட்டிற்கு செல்வதுதான் நம்முடைய உயிருக்கு பாதுகாப்பானது ," என்று எச்சரிக்கை செய்தது, குட்டி முயல் அந்த இசையை வினோதமாகக் கண்டறிந்து:"ஆனால் அம்மா, இத்தகைய இனிமையான இசையை நாம் இதுவரை கேட்டதே இல்லை அதனால் இதனை நாம் இங்கிருந்து கேட்டு மகிழ்வோமே?" எனக்கோரிக்கை வைத்தது "பிள்ளைகளே இந்நிலையில் தவறாக இசைக்கு மயங்காதீர்கள் வாருங்கள் இந்த குழிக்குள் மறைந்து கொள்வோம் என க்கூறி தாய்முயலானது பிள்ளைகளுடன் ஒரு மன்குழிக்குள் மறைந்து கொண்டது சிறிது நாள் கழித்து மற்றொரு குட்டிமுயல் வந்து : "நான் துப்பாக்கிகளை கைகளில் வைத்து கொண்டு இ்ந்த வழியாக செல்லும் மனிதர்களை பார்த்தேன். அவர்கள் வேட்டைக்காரர்களாக இருக்க வேண்டும். " என பதற்றத்துடன் கூறியது "நானும் அவர்களைப் பார்த்தேன்," என்று தாய்முயல் கூறியது மேலும் அந்த தாய்முயலானது . "நீங்கள் இதைப் பற்றி கவலைப்படக்கூடாது. அவர்கள் வனக்காவலாளர்களாவார்கள் , அவர்கள் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட யாரும் வேட்டையாடவும் இதர செயல்களுக்காகவும் இந்த காட்டிற்குள் நுழையாமல் நமக்கு பாதுகாப்பதற்காக பணிபுரிகின்றனர் . இருப்பினும், எப்போதும் நாம் பாதுகாப்புடன் இருப்பது நல்லது. " இவ்வாறான காடுகளின் வாழ்க்கை யானது எப்போதும் மிகவும் ஆபத்தானது. அறிவுரை: நம்முடைய வாழ்க்கையானது ஒரு முழு அனுபவத்துடன் கூடிய ஒரு தொடர்ச்சியான பயணமாகும் இதல் மற்றவர்களின் தவறுகளிலிருந்து நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனுவவத்தை கற்றுக்கொள்வதோடு, புதிய செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள நம்முடைய கண்களையும் அனைத்து புலன்களையும் திறந்து அனைத்து செய்திகளையும் பெற்ற அவைகளிலிருந்து நாம் சிறந்த மனிதர்களைப்போல் வாழ்வது முக்கியம். எனினும், உண்மையில் நம்முடைய வாழ்வின் அனைத்து செயல்களிலும் நாம் பயப்பட வேண்டிய ஒன்றும் இல்லை. நம் வாழ்வில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளுக்கு எப்போதுமே தீர்வு ஒன்று கண்டிப்பாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையை நன்கு பகுப்பாய்வு செய்வது சரியான நபர்களுடன் ஆலோசனை செய்த செயல்படவேண்டும்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...