ஒருநகரத்தில் நல்ல தயாளகுணமுள்ள பெரிய பணக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான் ஒரு பிச்சைக்காரன் அந்த பணக்காரனை அனுகி "ஐயா தருமபிரபுவே இந்த ஏழைக்கு ஐந்து ரூபாய் கொடுத்தால் உங்களுக்க புன்னியமாக இருக்கும்" என இறைஞ்சினான் உட.ன் அந்த பணக்காரன் "உன்னிடம் நான் என்ன ஐந்துரூபாய் கடன்வாங்கிவிட்டுதிரும்பி தராமல் உள்ளேனா என்னிடம் வந்து மிகச்சரியாக ஐந்துரூபாய் கொடு என்று கேட்கின்றாயே போ போ தூர போ இந்தா இரண்டு ரூபாய் மட்டும் வாங்கி கொண்டு போய்சேர்" என இரண்டு ரூபாய் மட்டும் அந்த பிச்சைக்காரனுக்கு கொடுத்து விரட்டியடித்தான்
சிறிது நேரம் கழித்து இரண்டாவது பிச்சைக்காரன் அதே பணக்காரனிடம் வந்து "ஐயா நான் கடந்த ஒருவாரமாக சாப்பிடவே இல்லை அதனால் நான் பசி பட்டினியோடு இருக்கின்றேன் எனக்கு ஒருவேளை உணவு அளித்தால் போதும்"என கோரினான் உடன் பணக்காரன் அந்த பிச்சைகாரனிடம் "ஒருவேளை சாப்பிடுவதற்காக உனக்கு எவ்வளவு பணம் தேவை" என வினவியபோது "ஐயா நீங்கள் தருமபிரபு நீங்கள் மனமுவந்துஎன்ன கொடுக்கின்றீர்களோ அதுவேபோதுமானதாகும்" என இரண்டாவது பிச்சைகாரன் கூறியதை தொடர்ந்து "ஒருவேளை சாப்பிட பத்துரூபாய் போதும் இந்தா பத்துரூபாய்" என அந்த பணக்காரன் இரண்டாவது பிச்சைக்காரனுக்கு அவன்கேளாமளேயே பத்துரூபாய் கொடுத்தனுப்பினான்
அதன்பின்னர் மூன்றாவதாக ஒருபிச்சைக்காரன் அந்த பணக்காரனிடம் வந்து "ஐயா தருமபிரபுவே ஊரெல்லாம் உங்களுடைய தயாளகுணத்தை பற்றி பேசிக்கொண்டிருக்-கின்றார்கள் அதனால் உங்களை போன்றவர்களை கண்களால் பார்த்தாலே போதுமென இங்கு வந்துள்ளேன்" என கூறியதை தொடர்ந்து அந்த பணக்காரன் "உள்ளே வாருங்கள் வந்து இந்த இருக்கையில் அமருங்கள் " என அந்தமூன்றாவது பிச்சைக்காரனை அமரவைத்தான் தொடர்ந்து " உங்களுக்கு என்ன வேண்டும்" என பணக்காரன் அந்த மூன்றாவது பிச்சைகாரனிடம் வினவியபோது "ஐயா தருமபிரபுவே உங்களிடம் எதையும் கேட்டு பெறுவதற்காக நான் இங்கு வரவில்லை உங்களை போன்ற தயாள குணமுடை-யவர்களை ஒருமுறையாவது நேரில்சந்திக்கவேண்டியே இங்குவந்தேன் " எனமீண்டும் கூறினான். அதனைதொடர்ந்த அந்த பணக்காரன் தன்னுடைய பணியாளர்களின் மூலம் அந்தபணக்காரனுடைய வீட்டிற்கு அருகிலேயே வீடு ஒன்றினை கட்டி முடித்து அங்கேயே அந்தமூன்றாவது பிச்சைகாரனுடைய வாழ்நாள் முழுவதும் தங்கிவாழுமாறு தேவையான பொருட்களையும் வழங்கி பார்த்து கொண்டான்.
நாம் மற்றவர்களிடம் எவ்வாறு அனுகுகின்றோமோ அதற்கேற்றவாறான உதவிதான் நமக்கு கிடைக்கும்