சனி, 27 ஏப்ரல், 2019

நிறுமங்களின் பெயர்மாறுதல் செய்திடுவதற்கான வழிமுறைகள்


நிறுமங்களின் பெயர்மாறுதல்செய்வது என்பதுநிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 13 (2) உம் நிறுமங்கள் உருவாக்குதல் விதி கள் 2014 பிரிவு 29 (1) , 29 (2) ஆகியவை சார்ந்ததாகும்.ஒரு நிறுவனத்தின் பெயரில் மாற்றங்கள் ஏதேனும் செய்வதாக இருந்தால் அவ்வாறான மாற்றங்களானவை நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 4 ன் உட்பிரிவுகள் (2) மற்றும் (3) ஆகியவைளுக்கு உட்பட்டிருக்கவேண்டும். ஆயினும் இந்தச் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க, ஒரு குறிப்பிட்ட வகுப்பு நிறுவனங்களை மற்றொரு வகுப்பிற்கு மாற்றுவதன் விளைவாக நிறுவனத்தின் பெயரில் உள்ள மாற்றங்களானவை தனியார் வரையறுக்கப்பட்ட என சொல்லினை மட்டும்நீக்குதல் அல்லது சேர்த்தல் ஆகியவற்றிற்கு அத்தகைய ஒப்புதல் தேவைப்படாது மற்றவைகளுக்கு மத்திய அரசின் எழுத்துமூலமான ஒப்புதல்இல்லாமல் நடைமுறைபடுத்தமுடியாது: .விதி 29- துனைவிதி (1) வருடாந்திர அறிக்கைகள் அல்லது நிதிநிலை அறிக்கைகள் அல்லது நிறுமங்களின் பதிவாளரிடம் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்க தவறிய நிறுவனத்திற்கும் முதிர்ந்த வைப்பு தொகைகள் அல்லது கடனீட்டுப் பத்திரங்கள் அல்லது வைப்புத் தொகைக்கான வட்டி அல்லது கடனீட்டுக்கு பத்திரங்களுக்கான வட்டி செலுத்தப்படுதல் ஆகியவற்றை செலுத்தத் தவறிய நிறுவனத்திற்கும் பெயரில் மாற்றங்கள், செய்யஅனுமதி வழங்கப்படமாட்டாது; துனைவிதி (2) நிறுமங்களின் சட்டம் 2013பிரிவு 13 உட்பிரிவு (3) ஐ நடைமுறை படுத்திடுவதற்காக நிறுமமானது படிவம் எண் INC-24 வாயிலாக நிறுமங்களின் பெயர்மாற்றம் செய்வதற்கான விண்ணப்பக் கட்டனத்துடன் விண்ணப்பம் ஒன்றினை சமர்ப்பிக்கவேண்டும் அதனை தொடர்ந்து நிறுமத்தின் பெயர்மாறுதலுக்கு பிறகான நிறுமத்தை பதிவுசெய்ததற்கான புதிய பதிவுசான்றிதழை படிவம் எண் INC-25 வாயிலாக வழங்கப்படும் இதற்கான படிமுறைகள் பின்வருமாறு நிறுமங்களின் பெயரை மாற்றுவதற்கான படிமுறைகள் பெயர்மாற்றம் செய்யவிரும்புவோர் நிறுமங்களின் விவாகாரத்துறைக்கான (Ministry of Corporate Affairs( MCA) ) இணைய பக்கத்தில் முதலில் ஒரு புதிய பயனாளராக பதிவு செய்து கொள்க பின்னர் பின்வரும் ஐந்து எளிமையான படிமுறைகளைப் பின்பற்றிடுக: படிமுறை.1: நிறுமத்தின் இயக்குநர்களின் குழுக்கூட்டத்தை கூட்டிடுக நிறுமத்தின் பெயரை மாற்றியமைக்க முடிவு செய்தவுடன், நிறுமத்தின் பெயர் மாற்றத்திற்கு தேவையான தீர்மாணத்தை அந்நிறுமத்தின்இயக்குநர்களின் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டும். ஆயினும் நிறுமங்களின் பதிவாளர் ஒப்புதல் அளிப்பதற்கேற்ப நிறுமத்தின் புதிய பெயரினை இயக்கநர்களின் குழு பரிசீலனை செய்து முடிவுசெய்திட வேண்டும். படிமுறை.2:தயார்நிலையிலானபெயர் கிடைத்தலும் அதன் ஒப்புதலும் இயக்குநர்களின் குழுவினால் இவ்வாறு பெயர்மாற்றம் செய்வதற்கு தேவையான தீர்மாணத்தை நிறைவேற்றிய பின்னர் நிறுவனத்தின் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட MCA இணையபக்கத்தில் நிறுமங்களின் பெயரை ஒதுக்கீடு பெறுவதற்கான RUN எனும் சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த பெயர் ஒதுக்கீடு சேவை (Reserve Unique Name service )யின் வாயிலாக அந்நிறுமத்திற்கான புதிய பெயரை பெற்றுக் கொள்ளலாம். அதனால் முதலில் இந்த RUN எனும் சேவையின் மூலம் நம்முடைய நிறுமத்திற்கான புதிய பெயர்வேண்டி விண்ணப்பிக்கவும், அவ்வாறு விண்ணப்பிக்கும்போது பின்வரும் கட்டாய நிரல்களை நிரப்பிடுக: 1)New Request; எனும் வாய்ப்பினை தெரிவுசெய்திடுக 2) Entity type- என்பதில் கீழிறங்கு பட்டியலின் வாயிலாக நிறுமத்தின் வகையை தெரிவுசெய்திடுக 3) CIN -இதில்பெயர் மாறுதல் செய்யவிருக்கும் நிறுமத்தின் சுட்டிஎண்ணை உள்ளீடு செய்திடுக 4) Proposed Names – இதில் புதியதாக தெரிவுசெய்யப்பட்ட பெயர்கள் அதிகபட்சம் இரண்டுபெயர்களை மட்டும் உள்ளீடு செய்திடுக. 5) Comment section - இதில் நிறுமத்தின் நோக்கங்களை பற்றி ஒருவரிக்குள் குறிப்பிடுக 6) Choose file Tab- இயக்குநர்களின் குழுக்கூட்டத்தில் பெயர்மாறுதல் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மாண நகலை கண்டிப்பாக இதில் இணைத்திடுக இந்நிலையில் பின்வரும் கருத்துகளை மனதில் கொள்க • நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களானவை தனித்துவம் மிக்கதாக ஏற்கனவே உள்ள நிறுமங்களின் பெயர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரைகளாக இல்லாமல் வேறுபட்டதாக இருக்க வேண்டும் . • RUN எனும் இணைய சேவையை பயன்படுத்திகொள்வதன் மூலம் நம்முடைய விருப்பப்படி அதிகபட்சமாக இரண்டு பெயர்களைப் மட்டுமே பெறமுடியும். இந்நிலையில் பொருத்தமான பெயர்கள் கிடைக்க வில்லையெனில், மீண்டும் புதிய பெயர்களை தெரிவுசெய்வதற்காக மற்றொருமுறைமட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும். அதாவது இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இந்த சேவையானது நம்மை பெயரினை தெரிவுசெய்துகொள்ளஅனுமதிக்கும் அதற்குமேல் அனுமதிக்காது • ROC என சுருக்கமாக அழைக்கப்படும் நிறுமங்களின் பதிவாளரால் நிறுமத்தின் பெயரானது அங்கீகரிக்கப்பட்டபின்னர் அதிகபட்சமாக 20 நாட்களுக்குமட்டும் நமக்கான ஒதுக்கீடாக அனுமதிக்கப்படும் , அதன்பின்னர் இந்த பெயருக்கான அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் மீண்டும் புதியதாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும். படிமுறை.3: அசாதரான பொதுப்பேரவை கூட்டத்தை கூட்டுதல் நிறுமங்களின் பதிவாளரால் நிறுமத்தின் பெயரானது அங்கீகரிக்கப்பட்டவுடன் EGM எனசுருக்கமாக அழைக்கப்படும் உறுப்பினர்களின் அசாதரான பொதுப்பேரவை கூட்டத்தை கூட்டி அதில் இவ்வாறு நிறுமத்தின் பெயர்மாறுதல் செய்வதற்கு தேவையான சிறப்புத்தீர்மாணத்தை நிறைவேற்றவேண்டும் மேலும் இவ்வாறு பெயர் மாறுதலைMOA , AOAஆகிய நிறுமத்தின் அடிப்படை ஆவணங்களில் தேவையான திருத்தம் செய்திடுவதற்காக பொதுப்பேரவையின் ஒப்புதல் வழங்கவேண்டும் படிமுறை. 4: தேவையான ஆவணங்களை தயார்செய்தல் நிறுமத்தின் பெயர்மாறுதல் செய்வதை ஏற்று அசாதாரன பேரவைகூட்டத்தில் சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெற்றபின்னர் பின்வரும்இரண்டு மின்னனு படிவங்களை ROC என சுருக்கமாக அழைக்கப்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்கவேண்டும் முதல் படிவமாக மின்னனு படிவம் எண் MGT-14 என்பதை அசாதாரன பொதுப்பேரவைகூட்டத்தில் சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெற்ற 30 நாட்களுக்குள் ROC இடம் MCA இணைய பக்கத்தின் வாயிலாக சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும் இவ்வாறான முதலாவது மின்னனு படிவம் எண் MGT-14 ஐ சமர்ப்பித்திடும்போது பின்வரும் ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும் 1) அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்திற்கான (EGM)அழைப்பு அறிவிப்பு 2) அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்தில்(EGM) பெயர்மாறுதல் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மாண நகல் 3) பெயர்திருத்தம் செய்யப்பட்டபின்னரான MOA , AOAஆகிய நிறுமத்தின் அடிப்படை ஆவணங்களின் நகல்கள் குறிப்பு இவ்வாறு இணைத்திடும் அனைத்து ஆவணங்களும் Pdfவடிவமைப்பில் இணைக்கவேண்டும் மின்னனு படிவம் எண் MGT-14 ஐ தேவையான ஆவணங்களுடன் ROC இடம் MCA இணையபக்கத்தின் வாயிலாக சமர்ப்பித்தபின்னர்ROC ஆனவர் அதனை சரிபார்த்து இதற்கு ஒப்புதல் வழங்குவார் அவ்வாறான ஒப்புதல் பெறப்புட்டபின்னர் மற்றொரு மின்னனு படிவம் எண் INC-24 என்பதை இரண்டாவது படிவமாக அசாதாரன பேரவைகூட்டத்தில் சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெற்ற 30 நாட்களுக்குள் ROC இடம் MCA இணையபக்கத்தின் வாயிலாக சமர்ப்பித்திடவேண்டும் இவ்வாறான இரண்டாவது மின்னனு படிவம் எண் INC-24 ஐ சமர்ப்பித்திடும்போது பின்வரும் ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும் 1) அசாதாரன பொதுப்பேரவை கூட்ட(EGM)நடவடிக்கை குறிப்புகளின் நகல் 2)அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்திற்கான (EGM)அழைப்பு அறிவிப்பு ,அதனை தொடர்ந்து நடைபெற்ற அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்தில்(EGM) பெயர்மாறுதல் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மாண நகல் அதனுடன் பெயர்திருத்தம் செய்யப்பட்டபின்னரான MOA ,AOA ஆகிய நிறுமத்தின் அடிப்படை ஆவணங்களின் நகல்கள் குறிப்பு இவ்வாறு இணைத்திடும் அனைத்து ஆவணங்களும் Pdfவடிவமைப்பில் இணைக்கவேண்டும் படிமுறை.5: தேவையானபடிவங்களை தயார்செய்தலும் MCAஇணையபக்கத்தில் சமர்ப்பித்தலும் மேலேகூறியவாறான இருமின்னனுபடிவங்களுக்கும் தேவையான ஆவணங்கள் தயாராக இருக்கின்றதெனில் மின்னனு படிவம் எண்MGT-14 , மின்னனு படிவம் எண் INC-24 ஆகிய இருமின்னனு படிவங்களையும் MCAஇணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து மிகச்சரியாக நிரப்புதல் செய்திடவேண்டும் அவ்வாறு நிரப்புவதற்கான விளக்ககுறிப்புகள் பின்வருமாறு மின்னனு படிவம் எண்MGT-14 1) முதலில் நிறுமத்தின்பதிவுஎண்ணை (CIN) உள்ளீடு செய்து தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பிடுக 2) அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றபட்டதீர்மாணத்தினை பதிவுசெய்வதற்கான தேர்வு செய்பெட்டிகளை நிரப்பிடுக 3) அசாதாரன பொதுப்பேரவை கூட்டத்திற்கான (EGM)அழைப்பு அறிவிப்பு விவரங்களையும் அவைகளை அனுப்பிய நாளினையும் சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றப்பட்ட நாளினையும் நிரப்பிடுக 4) சிறப்பு தீர்மாண விவரங்கள் தொடர்புடைய சட்டப்பிரிவு ,அதற்கான நோக்கம் தீர்மாண விவரங்கள் ஆகியவற்றை நிரப்பிடுக 5) தீர்மாணத்தை ஒப்புதல் வழங்குவதற்கான உரிமைபெற்றவர்கள் சாதாரண தீர்மாணமா அல்லது சிறப்புத்தீர்மாணமா என்பதற்கான தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்திடுக 6) படிமுறை. 4 இல் கூறிய ஆவணங்களை இந்த படிவத்துடன் இணைத்திடுக 7) இந்த படிவத்தில் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்ட இயக்குநரின் இரும கையொப்பத்துடன்(Digital Signature Certificate(DSC)) அதனை CA அல்லது CS அல்லது CMA ஆகியோர்களுள் ஒருவரால் அளிக்கப்பட்ட சான்றுடன் சமர்ப்பித்திடுக 8) மேலேகூறிய படிவத்தையும் ஆவணங்களையும் MCAஇணையபக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்குமுன் இவையனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றதாவென மீண்டுமொருமுறை முழுவதுமாக முன்னாய்வு செய்திடுக பின்னர் இந்த மின்னனு படிவம் எண் MGT-14 ஐ அதனுடைய இணைப்புகளுடன் MCA இணையபக்கத்தில் பதிவேற்றம் செய்திடுக இதன்பின்னர் மின்னனு படிவம் எண் MGT-14 உம் அதனுடன் இணைக்கப்பபட்ட ஆவணங்களையும் முழுவதுமாக ROC ஆல் ஆய்வுசெய்யப்பட்டு சரியாக இருக்கின்றது எனில் இதற்கு ஒப்புதல் வழங்கிடுவார் இதனை தொடர்ந்து மின்னனு படிவம் INC-24: ஐ பின்வருமாறு தயார்செய்திடவேண்டும் மின்னனு படிவம் எண்INC-24: 1) நிறுமத்தின் பதிவுஎண்ணை (CIN) உள்ளீடு செய்து தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பிடுக 2) நிறுமத்தின்புதியபெயர் ஒப்புதல் பெறுவதற்கான ROCஇடம் சமர்ப்பித்த தனித்துவமான பெயர் ஒதுக்கீட்டிற்காக RUNஇல் விண்ணப்பத்தபோது உருவான சேவைகோரும் எண்ணை (Service request number (SRN)) உள்ளீடுசெய்திடுக மேலும் தேவையான விவரங்களை உள்ளீடுசெய்திடுக 3) பெயர் மாறுதல் செய்வதற்கான முழுமையான காரணங்களின் விவரங்களை குறிப்பிடுக 4) மேலும் மின்னனு படிவம் எண் MGT-14ஐ ROCஇடம் சமர்ப்பித்திடும்போது உருவான சேவைகோரும் எண்ணை (SRN) உள்ளீடுசெய்திடுக மேலும் சிறப்புதீர்மாணம் நிறைவேற்றப்பட்ட நாளினையும் மின்னனு படிவம் எண் MGT-14ஐ ROCஇடம் சமர்ப்பித்திட்ட நாளினையும் குறிப்பிடுக 5) ஏற்கனவே நிறுமத்தினை பதிவுசெய்திடும்போது வழங்கப்பட்ட நிறுமபதிவுசான்றிதழில் குறிப்பிட்டுள்ள நிறுமத்தின் பெயரினை குறிப்பிடுக 6) அதுமட்டுமின்றி பின்வரும் விவரங்களைமிகச்சரியாக நிரப்பிடுக அசாதாரன பொதுப்பேரவைகூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களின் பங்குகளின் எண்ணிக்கை விவரங்களை குறிப்பிடுக சிறப்புதீர்மாணம் நிறைவேற்றுவதில் கலந்துகொண்டு ஒட்டெடுப்பில் சிறப்புத் தீர்மாணத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களின் பங்குகளின் எண்ணிக்கை விவரங்களை குறிப்பிடுக சிறப்புதீர்மாணம் நிறைவேற்றுவதில் கலந்துகொண்டு ஒட்டெடுப்பில் சிறப்புத்தீர்மாணத்திற்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களின் பங்குகளின் எண்ணிக்கை விவரங்களை குறிப்பிடுக சிறப்புதீர்மாணம் நிறைவேற்றுவதில் கலந்துகொண்டு ஒட்டெடுப்பில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்களின் பங்குகளின் எண்ணிக்கை விவரங்களை குறிப்பிடுக 7)படிமுறை. 4 இல் கூறியவாறான ஆவணங்களை இந்த படிவத்துடன் இணைத்திடுக 8) இந்த படிவத்தில் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்ட இயக்குநரின் இரும கையொப்பத்துடன்(Digital Signature Certificate(DSC)) அதனை CA அல்லது CS அல்லது CMA ஆகியோர்களுள் ஒருவரால் அளிக்கப்பட்ட சான்றுடன் சமர்ப்பித்திடுக 9) மேலேகூறிய படிவத்தையும் ஆவணங்களையும் MCAஇணையபக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்குமுன் இவையனைத்தும் மிகச்சரியாக இருக்கின்றதாவென மீண்டுமொருமுறை முழுவதுமாக முன்னாய்வு செய்திடுக பின்னர் இந்த மின்னனு படிவம் எண் INC-24ஐ அதனுடைய இணைப்புகளுடன் MCA இணையபக்கத்தில் பதிவேற்றம் செய்திடுக இதன்பின்னர் மின்னனு படிவம் எண் INC-24 உம் அதனுடன் இணைக்கப்பபட்ட அவணங்களையும் முழுவதுமாக ROC ஆல் ஆய்வுசெய்யப்பட்டு சரியாக இருக்கின்றது எனில் படிவம் எண் INC-25இன் வாயிலாக நிறுமத்திற்கான புதிய பெயருடன் இந்த நிறுமத்தினை பதிவுசெய்ததாற்கான சான்றிதழை வழங்கிடுவார் குறிப்பு இவ்வாறான படிவங்களை சமர்ப்பிப்பதற்கான மிகச்சரியான கட்டணங்களை செலுத்திடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...