சனி, 4 மே, 2019

ஒரு தாயும் அவருடைய மகளும் வரைபடமும்


குடும்பத்தலைவியான தாய் ஒருவர் மகளிர் மாத இதழ் ஒன்றினை மிகஆழ்ந்து படித்துகொண்டிருந்தார் அறிவுத்திறன்மிக்க சுறுசுறுப்பான அவருடைய மகள்" அதுஎன்ன? இதுஎன்ன? "என்றவாறு கேள்விகளுடன் அந்த குடும்பத்தலைவியை மகளிர் மாத இதழைதொடர்ந்து படிக்கமுடியாமல் தொந்திரவு செய்து கொண்டிருந்ததால் தம்முடைய மகளின் தொந்திரவை தவிர்க்கும் பொருட்டு அருகிலிருந் உலக வரைபடம் ஒன்றினை தாறுமாறாக கிழித்து அவைகளை ஒன்றிணைத்து முழுமையானஉலகவரைபடமாக செய்திடுமாறு பணித்துவிட்டு தொடர்ந்துமகளிர் மாத இதழை படித்துகொண்டிருந்தார் அந்த தாய். சுறுசுறுப்பான அறிவுத்திறன்மிக்கஅவருடைய மகள் உடன் ஓரிரு நிமிடங்களில் அவைகளை ஒன்றிணைத்து முழுமையான உலக படத்தினை "அம்மா! இதோபார் நான் முழுமையான உலக வரைபடத்தினை ஒருங்கிணைத்துவிட்டேன்" என கொண்டுவந்து காட்டினாள். கிழிந்த துனுக்குகளைகொண்டு முழுமையான உலக வரைபடத்தினை நாள்முழுக்க முயன்றாலும் ஒருங்கிணைத்திட முடியாது அதனால் நாமும் நம்முடைய மகளின் தொந்திரவுஇல்லாமல் தொடர்ந்து மகளிர் மாத இதழை படித்துவிடலாம் என எண்ணினால் இவ்வளவு சீக்கிரத்தில் ஒருங்கிணைத்து கொண்டுவந்துவிட்டாளே என அந்த குழந்தையின் தாய்க்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டதுஉலகவரைபடம் மிகச்சரியாக ஒருங்கிணைந்திருந்ததை கண்டு" மகளே! எவ்வாறு இவ்வளவு விரைவில் கிழிந்த துனுக்குகளைகொண்டு முழுமையானஉலக வரைபடத்தினை ஒருங்கிணைத்து உருவாக்கிடமுடிந்தது?” எனவினவினார் அந்த தாய். அதற்கு அவருடைய மகள் "அதுஒன்றும் அவ்வளவு மிககடினமான பணியில்லையம்மா உலகவரைபடத்தினை திருப்பி பாருங்கள்!” என்றாள் அவருடைய மகள் .திருப்பி பார்த்திடும்போது ஒருமுழுமையான மனிதனின் உருவப்படம் இருந்தது "அம்மா! நான் உலக வரைபடத்தின் மறுபுறமான பின்பகுதியிலிருந்த மனிதனின் படத்தை மிகச்சரியாக பொருத்தினேன் இந்தபக்கம் முழுமையான உலகவரைபடம் உருவாகிவிட்டது அவ்வளவுதான்!” என அடுத்து தொந்திரவை கொடுக்கஆரம்பித்தாள் தன்னுடைய தாய்க்கு. அவ்வாறே நம்முடைய வியாபாரநடவடிக்கைகளின்போது தீர்வு செய்ய முடியாதஅளவிற்கு நம்முன் எழும் எந்தவொரு பிரச்சினையையும் அதன் மறுபுறத்தினை பார்வையிட்டு எளியவழியில் மிகச்சரியாக தீர்வுசெய்திடமுடியும் என்ற செய்தியை மனதில் கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...