சனி, 11 மே, 2019

LLP என சுருக்கமாக அழைக்கப்படும் பொறுப்பு வரையறுக்கப்பட்டகூட்டாண்மை நிறுவனத்தை பதிவுசெய்தெவ்வாறு


நிறுவனங்களுக்கான பல்வேறுவிதமான இணக்கசெயல்களையும் நடைமுறைகளையும் பற்றி கவலைப்படாமல் சிறு வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தைச் மேம்படுத்துவதிலும் வளர்ச்சிக்கு இட்டுசெல்வதிலும் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் என்றவாறான தற்போதைய சூழலிற்கு மாற்றி கொண்டுவருவதற்காக அவ்வாறான சிறுநிறுவனங்களில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த கடினமான சூழலை சரிசெய்து அவை சிறப்பாக செயல்படுவதற்காக மத்திய அரசு ஒருசில மாற்றங்களையும் புதிய திருத்தங்களையும் செய்து தற்போது நடைமுறைபடுத்தியுள்ளது . இவ்வாறு மத்தியஅரசால் செய்யப்பட்ட மாற்றங்களாலும் திருத்தங்களாலும் , கடந்த சில ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமங்களின்(Limited Liabilities Partnership (LLP)) பங்களிப்புகள் மிகவும் வேகமாக உயர்ந்துவருகின்றன. இங்கு, LLP என சுருக்கமாக அழைக்கப்படும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தினை பதிவுசெய்து செயல்படுத்திடுவதற்கான செயல்முறைகளையும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் பற்றி காணவிருக்கின்றோம் . இதற்காக பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமச்சட்டம் (LLP சட்டம்), 2008 இல் முழுமையானவழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. புதியதாக ஒரு LLP ஐ பதிவுசெய்வதற்கான அடிப்படை தேவைகள் பின்வருமாறு: 1. குறைந்தபட்சம் இரண்டு கூட்டாளிகள், (அவ்விருவரும் தனிநபராகவோ அல்லது நிறுமமாகவோ இருக்கலாம்). 2. நிறுமம் பதிவுசெய்யப்பட்டபின்னர் தொடர்ந்து தகவல்தொடர்புகளை அனுப்புவதற்கும் பெறுவதற்குமான இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு பதிவுஅலுவலகம். 3. குறைந்தபட்சம் இரண்டு தனிநபர்களையாவது நியமிக்கப்பட்ட கூட்டாளிகளாக (Designated Partners)நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமனம் செய்யப்படும் ஒவ்வொரு நியமிக்கப்பட்ட கூட்டாளியும் நிறுமங்களின் விவகார அமைச்சகத்தால் (MCA) ஒதுக்கீடுசெய்யப்பட்ட ஒரு நியமிக்கப்பட்ட கூட்டாளி அடையாள எண் (Designated Partner Identification Number(DPIN)) ஒன்றினை பெற்றிருக்க வேண்டும். 5. கூட்டாளிகளுக்கு இடையே அல்லது கூட்டாண்மை நிறுமத்திற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். 6. அந்த LLP நிறுமத்திற்கென தனியான பெயர் ஒன்று உருவாக்கியிருக்கவேண்டும் . வரையறுக்கப்பட்ட கூட்டாண்மைநிறுமத்தினை(LLP) பதிவுசெய்தற்கான படிமுறைகள்பின்வருமாறு படிமுறை.1: முதல்படிமுறையாக இரும கையொப்ப சான்றிதழை(Digital Signature Certificate (DSC)) அந்த கூட்டாண்மைநிறுமத்தில் கூட்டாளிகளாக சேரவிரும்பும் ஒவ்வொரு கூட்டாளியும் நியமிக்கப்பட்ட கூட்டாளியும் பெற்றிடவேண்டும். படிமுறை.2: அடுத்து புதியதாக சேரும் கூட்டாளிகளுக்கும் நியமிக்கப்பட்ட கூட்டாளி களுக்கும் படிவம் எண் DP-3 ஐ பயன்படுத்தி அல்லது LPP_FILLIP எனும் படிவத்தைப் பயன்படுத்தி நியமிக்கப்பட்ட கூட்டாளி அடையாள எண் (DPIN) ஐப் பெறுவதற்காக விண்ணப்பம் செய்து பெறவேண்டும் படிமுறை.3: மூன்றாவதாக RUN-LLP சேவைகளைப் பயன்படுத்திஅல்லது LPP_FILLIP எனும் படிவத்தைப்நேரடியாக பயன்படுத்தி நிறுமங்களின் விவகார அமைச்சகத்தில்(MCA) விண்ணப்பம் செய்து புதிய LLP நிறுமத்திற்கான பெயரை ஒதுக்கீடு செய்துபெற்றிடவேண்டும் படிமுறை.4:நான்காவதாக பின்வரும் ஆவணங்களுடன் படிவம் எண்LLP_FILLIPஐ நிறுமங்களின் விவகார அமைச்சகத்தில்(MCA) சமர்ப்பித்திடவேண்டும் 4.1.கூட்டாளிகளாக நியமனம் செய்வதற்காக முன்மொழியப்பட்டஒவ்வொரு கூட்டாளிகளிடமிருந்து ம் ஒப்புக்கொள்ளப்பட்டகூட்டாளிகளிடமிருந்தும் பெறப்பட்ட அவ்வாறு கூட்டாளிகளாக அந்நிறுமத்தில் செயல்படுவதற்கான ஒப்புதல் கடிதம். 4.2.பதிவுசெய்வதற்காக முன்மொழியப்பட்ட அந்த LLP நிறுமத்தின் இருப்பிட முகவரிக்கான சான்றிதழ். 4.3.முன்மொழியப்படும் அல்லது நியமிக்கப்பட்ட ஒவ்வொரு கூட்டாளிகளையும் சுட்டிகாட்டுவதற்கான அடையாளச் சான்று. 4.4.நியமனம் செய்வதற்காக முன்மொழியப்படும் கூட்டாளிகளின் இருப்பிடமுகவரிச் சான்று. 4.4.வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறமத்தில் முதலீடு செய்பவர்களின் விவரங்களடங்கிய தாள். 4.5.கூட்டாளிகளில் / நியமிக்கப்பட்ட கூட்டாளிகளில் யாரேனும்ஒருவர் ஒரு இயக்குநராக / கூட்டாளிகளாக உள்ள LLP(கள்) மற்றும் / அல்லது நிறும((த்தின்) (ங்களின்)) விவரங்கள். 4.6.இந்நிறுமத்திற்கான வர்த்தக முத்திரையின் உரிமையாளரின் அங்கீகாரம் அல்லது வர்த்தக முத்திரையைப் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர் ஆகியவற்றிற்கு வழங்கிய ஒப்பதல். 4.7.முன்மொழியப்பட்ட பெயரில் எந்தவொரு சொல்லை (சொற்களை) அல்லது வெளிப்பாடு (களை) தேவைப்பட்டால் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெறப்பட்ட , ஒப்புதலின் நகல். 4.8.வெளிநாட்டுடனோ அல்லது வெளிநாட்டிலுள் ஒருகுறிப்பிட்ட பகுதியுடனோ வியாபாரம் செய்வதற்கான ஒத்துழைப்பு மற்றும் அனுமதி ஆகியவற்றினை வழங்கிடும் தகுதிவாய்ந்த அவ்வெளிநாட்டு அதிகாரியின் ஒப்புதலின் நகல். 4.9. ஏற்கனவே RUN-LLP சேவைகளை பயன்படுத்தி நிறுமத்திற்கான பெயர் ஒதுக்கீடு ஏற்கப்பட்டிருந்தால் அந்த பெயருக்கான ஒப்புதல் கடிதம் படிமுறை.5:LLP படிவம் 3 இல் இந்த LLP ஐ துவங்கப்பட்ட 30 நாட்களுக்குள் நிறுமங்களின் விவகார அமைச்சகத்தின்(MCA) கீழ்செயல்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் இந்த LLP ஒப்பந்தத்தை சமர்ப்பித்திடவேண்டும். கீழ்காண்பவை முக்கிய மாக கவணத்தில் கொள்ளவேண்டியவைகளாகும்: 6.1.பெயர் ஒதுக்கீட்டிற்கான RUN-LLP சேவைகளை விருப்பபட்டால் பயன்படுத்தி கொள்க இது கட்டாயமன்று, LLP பெயரைப் ஒதுக்கீடு பெறுவதற்காக நிறுமங்களின் விவகார அமைச்சகத்தின்(MCA) கீழ்செயல்படும் நிறுமங்களின் பதிவாளரிடம் நேரடியாக படிவம் LLP_FILLIP ஐப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் . 6.2. கூட்டாளிகளாக நியமனம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட கூட்டாளிகளுக்கான மற்றும் நியமிக்கப்பட்ட கூட்டாளிகளுக்கான DPIN ஐப் விரும்பினால் பெறலாம் கட்டாயமன்று, இதற்காக விண்ணப்பதாரர் நேரடியாக படிவம் LLP_FILLIP ஐப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 6.3. நிறுமங்களின் விவகார அமைச்சகத்தால்(MCA) நிறுமத்திற்கான பெயரானது ஒதுக்கீடுசெய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டபின் 90 நாட்கள் வரை அந்த பெயரை பயன்படுத்தி நிறுமத்தை பதிவுசெய்து கொள்ளலாம் அதற்குமேல் கடந்துவிட்டால் மீண்டும் பெயர் ஒதுக்கீடுசெய்திடுமாறு விண்ணப்பிக்கவேண்டும் . 6.4.LLP. ஒப்பந்தத்தின் முத்திரைத்தாள் கட்டணமும் நோட்டரிகளின் கட்டணமும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...