தொடர்
வண்டியொன்று
அதிவேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
அதன்ஒரு
பெட்டியில்,
ஒரேயொருஇந்தியரும்
ஏராளமான
ஆங்கிலேயர்களும்
அமர்ந்து
பயனம் செய்துகொண்டிருந்தனர்.
அந்த
பெட்டியில் பயனம் செய்த
ஆங்கிலேயர்கள்அனைவரும்
அந்த இந்திய பயனியை
பார்த்து
கேலியும்
கிண்டலும்
செய்து
கொண்டிருந்தனர்.
அவர்களுள்
சிலர்
அவருடைய உடையைப் பார்த்து
கேலிசெய்து
சிரித்துகொண்டிருந்தனர்,
வேறுசிலர்
அவரை
முட்டாள்
என்று கிண்டலாக
அழைத்து
கேலிசெய்தனர்,
அதனை
தொடர்ந்து இன்னும்
சிலர்
ஏளனமாக
அவரைபார்த்து கோபமாக,
"ஏன்
ஒரு இந்தியரை
நம்மோடு
ஒன்றாக
ஒரேபெட்டியில் பயனம்
செய்ய
அனுமதித்தனர்?”
என்று
தொடர்வண்டியின்
நிர்வாகத்தின்மீது
பழிசுமத்தி
கூச்சலிட்டனர்.
ஆனால்
இவை அனைத்தும் இடுப்பில்
வேட்டி மார்பில்
சட்டை தலையில்
தலைப்பாகை (இந்திய
உடை)
அணிந்து
அமர்ந்திருந்தஅந்தஇந்தியரின்
மீது எந்த விளைவையும்
ஏற்படுத்தவில்லை.
அவர்
அமைதியாக உட்கார்ந்திருந்தார்,
ஆயினும்
அவர்
தீவிரமாக
ஏதோ ஒரு
நிகழ்வில் கவனம்
செலுத்துவது
போன்று
அமர்ந்து இருந்தார்.
தொடர்வண்டி
அதிவேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது
,
ஆங்கிலேயர்கள்
அந்த இந்தியரை
கேலி செய்வதும் அவமதிப்பதும்
தொடர்ந்து கொண்டிருந்தது
ஆனால்
திடீரென்று அந்த இந்தியர்
தன்னுடைய
இருக்கையிலிருந்து
எழுந்து -
"தொடர்
வண்டியைஉடனே
நிறுத்துங்கள்",.என
சத்தமாக கத்தினார்.
யாருக்கும்
எதுவும் புரியும் முன்,
அவர்
விரைவாக
தொடர்வண்டியை நிறுத்துவதற்கான
சங்கிலியை இழுத்தார்.அதனால்
அந்த தொடர்வண்டி
நிறுத்தப்பட்டது.
இந்தியரின்
இந்த செயலால்,
உடன்
பயனம் செய்த ஆங்கிலேயர்கள்
மிகவும்
கோபம்
அடைந்தனர்,
அவருடன்
பயனம் செய்த ஆங்கிலேயர்கள்
அனைவரும்
அவரைத் திட்டத்தொடங்கினர்,
ஆனால்
அந்த சொற்கள்
எதுவும் அவரைப் பாதிக்காதது
போல் அவர் தீவிரமான மனநிலையில்
இருந்தார்.
அந்த
தொடர்வண்டியின் பாதுகாவலர்
அந்த
பெட்டிக்குள் ஓடி
வந்து மிகக்
கடுமையான
குரலில்,
"தொடர்வண்டியை
நிறுத்தியது யார்?"
என
வினவினார் ஆங்கிலேயர் எவரும்
பேசுவதற்கு முன்,
இந்தியர்
எழுந்து நின்று,
"நான்
தான்
தொடர்வண்டியை
நிறுத்த செய்தேன்"
என்றார்.
தொடர்வண்டி
பாதுகாவலர்
மிகவும்
கோபமாக,
"உங்களுக்கு
என்ன
பைத்தியமா
பிடித்திருக்கின்றது?
நீங்கள்
இப்போதுதான் தொடர்வண்டியில்
முதன்முதல் பயனம் செய்கின்றீர்களா?
காரணமில்லாமல்
தொடர்வண்டியை
நிறுத்துவது குற்றச்செயல்
என்று தெரியுமா?
."
என
வினவினார்
இந்தியர்
அமைதியாக ,
"ஆம்.
எனக்குத்
தெரியும்,
ஆனால்
நான் தொடர்வண்டியை
நிறுத்தாமல் இருந்திருந்தால்,
இந்த
தொடர்வண்டியில்
பயனம்
செய்து கொண்டிருக்கின்ற
நூற்றுக்கணக்கானவர்கள்
தங்களுடைய
இன்னுயிரை
இழந்திருப்பார்கள்."
என
பதிலளித்தார்
இந்தியரின்
அந்த
பதிலை
கேட்டு ஆங்கிலேயர்
அனைவரும்
அவரைப் பார்த்து சிரிக்க
ஆரம்பித்தனர்.
மேலும்
அவர்தொடர்ந்து
,
"இங்கிருந்து
சிறிது தூரத்தில் தண்டவாளங்கள்
இணைப்பில்லாமல் தொடர்வண்டி
செல்கின்ற தடம்
உடைந்துள்ளது.
நீங்கள்
உறுதிப்படுத்த விரும்பினால்,
நீங்களே
அதனை
நேரில்
சென்று
சரிபார்க்கலாம்."என
கூறினார்
இவ்வாறான
அவருடைய பதிலைக்
கேட்டவுடன்,
தொடர்வண்டி
பாதுகாவலரும்
சில ஆங்கிலேயர்களும்
தொடர்வண்டியில்
இருந்து இறங்கி தொடர்வண்டியின்
தடங்களான
முன்பக்கத்தில்
தண்டவாளங்களாலான்
பாதைசெல்லும்
திசையை
நோக்கிச் சென்று சரிபார்த்தனர்,
அவ்வாறு
சரிபார்ப்ப்தற்காக
தொடர்வண்டியின்
பாதையில்
அவர்கள்
நடந்து சென்று கொண்டிருந்தபோது
கூட அந்த
இந்தியரைப்
பற்றி மோசமாக திட்டிகொண்டும்
கிண்டலாக
பேசிக் கொண்டும்
நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சிறிது
தூரம் நடந்த சென்ற
பிறகு,
உண்மையில்
தொடர்வண்டியின்
பாதையின்
தண்டவாளங்கள்
உடைந்திருப்பதை,
அதன்
திருகுமரைகள்
கழன்று தண்டவாளங்கள்
இணைப்பு பிரிந்து தனித்தனியாக
கிடைப்பதைக்
கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இப்போது
அந்த இந்தியரை
பைத்தியம் முட்டாள்
என அழைத்து கிண்டலும் கேலியும்
செய்து கொண்டிருந்த
தொடர்வண்டியின்
பாதுகாவலர்
உட்பட அனைத்து ஆங்கிலேயர்களும்
மீண்டும் தொடர்வண்டிக்கு
திரும்பி
வந்து
மிகஆர்வத்துடன்
அவரைப் பார்க்கத்
தொடங்கினர்.
தொடர்வண்டியின்
பாதுகாவலர்
,
"தண்டவாளங்களாலான
தொடர்வண்டி பாதை உடைந்திருப்பது
உங்களுக்கு எப்படித் தெரியும்?",
என
வினவினார்
அதனை
தொடர்ந்து இந்தியர்
,
"இந்த
தொடர்வண்டியில் பயனம்
செய்திடும் பயனிகள்
அனைவரும்
தத்தமது
பணியில்
மும்முரமாக இருந்தபோது,
என்
கவனம் முழுவதும்
தொடர்வண்டியின்
ஓட்டத்தில்
மட்டுமே
இருந்தது,
தொடர்வண்டி
வழக்கமாக
விரைவாக ஓடிக்கொண்டிருந்த
அதிர்வு ஒரேசீராக
கேட்டுகொண்டிருந்தது.
ஆனால்
பாதையில்
தண்டவாளங்களாலான
பாதை
உடைந்திருந்ததால் தொடர்வண்டி
வழக்கமாக விரைவாக ஓடிக்கொண்டிருந்த
அதிர்வில்
மாற்றம் ஏற்பட்டது.
சிறிது
தூரத்தில் தொடர்வண்டி
பாதையின் தண்டவாளங்களாலான
பாதை
உடைந்திருந்தால்
மட்டுமே தொடர்வண்டியின்
ஒட்டத்தின் அதிர்வில்
மாற்றம் அடையும் .
எனவே.
ஒரு
நிமிடம் கூட காலம்
தாழ்த்தாமல்
நான்
இந்த தொடர்வண்டியைநிறுத்தம்
செய்வதற்கான
சங்கிலியை இழுத்தேன்."
என
பதிலளித்தார்
அந்த
பெட்டியின் பயனம்
செய்த ஆங்கிலேயர்கள்,தொடர்வண்டியின்
பாதுகாவலர் ஆகிய அனைவரும்
திகைத்து
நின்றனர்.
மிக
ஆச்சரியத்துடன் அவரைபார்த்தனர்.
தொடர்வண்டி
பாதுகாவலர்,
"இவ்வளவு
சிறந்த தொழில்நுட்ப அறிவு
கொண்ட!
நீங்கள்
ஒரு சாதாரண மனிதர் போன்று
தெரியவில்லை.
தயவுசெய்து
நீங்கள்
யார்
என்று
கூறுங்களேன்"
என்றார்.
இந்தியர்
பணிவுடன்,
"நான்
ஒரு இந்திய கட்டிடப்பொறியாளர்
மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா"
என்று
பதிலளித்தார்.
எவருடைய தோற்றத்தினையும் கண்டு மிகத்தாழ்வாக எண்ணவேண்டாம்