ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

விளைச்சலின் பங்கு பிரிப்பதில் நண்பர்களின் வாக்குவாதம்

 


ஒரு கிராமத்தில் சிவப்பன் கருப்பன் ஆகிய இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் சேர்ந்து ஒரு நிலத்தை வாங்கி, அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தனர். நாள் முழுவதும் உட்கார்ந்து பிரார்த்தனை செய்தால் கடவுள் தனக்காக எல்லா பணிகளையும் செய்து தனக்கு தேவை.யான பொருட்களை கொடுத்திடுவார் என்று சிவப்பன் நம்பினான்ஆனால்ருப்பன் தங்களுடைய நிலத்தில் இரவும் பகலும் கடினமாக உழைத்தான். ருப்பன் சிவப்பனை தன்னை போன்று தங்களுடைய வயலில் இறங்கி தன்னுடன் சேர்ந்து பணிசெய்யுமாறு பலமுறைகோரினான், ஆனால்சிவப்பன் அதனை மறுத்து, அதற்குப் பதிலாக கோவிலுக்குச் சென்று அங்கேயே உட்கார்ந்து நாள்முழுவதும் கடவுளை தியானித்து கொண்டிருப்பான். நாட்கள் பலகடந்த, பல மாதங்கள் கழிந்தபின்னர், வயலில் பயிர் அறுவடைக்குத் தயாராகஇருந்தது.ருப்பன் தங்களுடைய வயலில் விளைந்த பயிரை அறுவடை செய்த சந்தைக்கு எடுத்துச் சென்று நல்ல விலைக்கு விற்றான், பினனர் ருப்பன் சிவப்பனிடம், "நான் வயல்களில் இறங்கி கடினமாக உழைத்தவன் என்பதால் எனக்கு அதிக பங்குஇருக்வேண்டும்" என்று கூறினான். இதைக் கேட்ட சிவப்பன், "இல்லையில்லை. நான் கோவிலுக்குச் சென்று நல்ல விளைச்சலை தருமாறு இரவு பகலாக கடவுளிடம் பிரார்த்தனை செய்ததால்தான் நமக்கு அதிக விளைச்சல் கிடைத்தது அதனால் எனக்குதான் அதிகப் பங்குஇருக்க வேண்டும்" என்றான்.இருவருக்கும் வாக்குவாதம்ம்ஏற்பட்டது தகராறாக முற்றியது. இறுதியாக, அவர்கள் இருவரும் இறுதி முடிவுக்காக கிராமத் தலைவரிடம் சென்றனர். இருவரது பேச்சையும் கேட்ட ஊர் தலைவர் மண்ணும் கற்களும் கலந்த இரண்டு மூட்டை அரிசியை எடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு மூட்டை வீதம் கொடுத்து, "நாளை காலைக்குள், நீங்கள் இருவரும் இந்த மூட்டை யிலுள்ள அரிசியிலிருந்து மண்ணையும் கற்களையும் பிரித்து கொண்டுவர வேண்டும். அவ்வாறு நாளை கொண்டு வந்தால் உங்களுடைய வயலில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் யாருக்கு அதிக பங்கு கிடைக்கும் என்பதை தீர்மானிக்க முடியும். " என கேட்டுகொண்டார் பிறகுஇருவரும் மண்ணும் கற்களும் கலந்த அரிசி மூட்டையுடன் தங்கள் வீட்டிற்குச் சென்றனர்.ருப்பன் இரவு முழுவதும் கண்விழித்து அரிசியுடன் கலந்திருந்த மண்ணையும் கற்களையும் பிரித்து சுத்தமான அரிசியை மட்டும் தனியாக எடுத்தான் சிவப்பன் அரிசி மூட்டையுடன் கோவிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து தனக்கு அரிசியிலிருந்து மண்ணையும் கற்களையும் பிரித்துத் தரும்படி இரவு முழுவதும் கடவுளிடம் வேண்டிக் கொண்டேயிருந்தான். மறுநாள் காலை இருவரும் அரிசி மூட்டையுடன் வந்தனர். கிராமத் தலைவர் முதலில்கருப்பனிடம் அரிசி மூட்டையைக் காட்டச் சொன்னார். இரவெல்லாம் கண்விழித்து அரிசி மூட்டையிலிருந்து மண்ணையும் கற்களையும் பிரித்ததால் கருப்பனின் அரிசி சுத்தமாக இருந்தது. பின்னர் சிவப்பனிடம் சுத்தம் செய்த அரிசியைகாட்டும்படி கோரினார்.சிவப்பன் இரவுமுழுவதுமான தன்னுடைய வேண்டுதலினால் கடவுள்கண்டிப்பாக தன்னுடைய மூட்டையிலிருந்த அரிசியை சுத்தம் செய்திருப்பார் என்ற தன்னம்பிக்கையுடன் தனது அரிசி மூட்டையை கிராமத்த தலைவரிடம் காட்டி, "எனக்கு கடவுள் மீது முழு நம்பிக்கை உள்ளது. இரவு முழுவதும் நான் பிரார்த்தனை செய்ததால் அரிசி அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டிருக்கும்"என்றான். கிராம்த்தலைவர் சிவப்பனின் அரிசி மூட்டையைத் திறந்து பார்த்தபோது , அரிசியுடன் மண்ணும் கற்களும் கலந்தவாறுஅப்படியே இருந்தன. சுத்தமான அரிசியை காணமுடியவில்லை உடன் கிராம்த்தலைவர், "பயிர்களை விற்று வரும் பணத்தின் முக்கால் பங்குருப்பனுக்குச் சேரும் என்றும் கால்பங்கு மட்டுமே சிவப்பனுக்கு சேரவேண்டும் என்றும்" தீர்ப்பதளித்தார். சிவப்பன் இந்த தீர்ப்பில் மிகுந்த ஏமாற்றம் அடைந்தான். அதனால் கிராமத் தலைவர் ிவப்பனிம், " பிரார்த்தனை செய்வது நல்லதுதான் ஆனால் கடவுள் கூட நன்கு கடினமாக உழைப்பவரர்களுக்கே உதவுவார் உன்னைபோன்று உழைக்காமல் சோம்பேறிகளுக்கெல்லாம் உதவமாட்டார் போய் முதலில் நான்கு கடினமாக உழைக்க துவங்கு ." என அறிவுரித்தினார் ரிசிவப்பன் தன் தவறை உணர்ந்து, அன்று முதல் அவனும் தன் நண்பனுடன் வயலில் இறங்கி கடுமையாக உழைக்க ஆரம்பித்தான்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...