சனி, 26 பிப்ரவரி, 2022

தக்காளிப் பை - ஆசிரியரால் குழந்தைகளுக்கான பணி ஒதுக்கீடு

 


ஒரு நாள் ஒரு ஆசிரியை தன் மாணவர்களிடம், "நாளை, நீங்கள் அனைவரும் ஒரு பையில் சில தக்காளிகளை பள்ளிக்கு எடுத்துக்கொண்டு வாரவேண்டும், ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் எத்தனை தக்காளிகளை கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது" என்றார். உடன் மாணவர்கள் அனைவரும், "அந்த நிபந்தனை என்ன ?" என ச்ந்தகேம் எழுப்பினார் அதற்கு அவ்வாசிரியர், "நீங்கள் வெறுக்கும் ஒவ்வொருநபரின் பெயரைச் சொல்லி ஒவ்வொரு நபருக்கும் ஒரு , தக்காளி வீதம் நீங்கள் வெறுக்கும் நபர்களுக்கு சமமான எண்ணிக்கையில் தக்காளிகளைக் கொண்டு வர வேண்டும் . உதாரணமாக ஒரு மாணவன் ஐந்து நபர்களை வெறுக்கிறான் என்றால் அவன் ஐந்து தக்காளிகளைக் கொண்டு வர வேண்டும். என்றவாறு நீங்கள் ஒவ்வொரு நபரும் எத்தனை நபர்களை வெறுக் ன்றீர்களோ அதற்கேற்ற எண்ணிக்கையில் தக்காளிகளை கொண்டுவர வேண்டும்" என்ற நிபந்தனைய கூறினார். அவ்வாறே மறுநாள, மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்தவுடன் தங்களுடைய வகுப்பு ஆசரிரயர் ோரியவாறு தாங்கள் கொண்டுவந்த தக்காளிகளை ஆசிரியரிடம் காட்டினார்கள். சில மாணவர்களிடம் இரண்டு, சிலரிடம் ஐந்து, சிலரிடம் இருபது தக்காளிகள் கூட அவர்களுடைய பைகளில் இருந்தன. தொடர்ந்து அவ்வாசிரியர்ர், "உங்கள் அனைவருடைய பணி என்னவெனில், நீங்கள் அனைவரும் இந்த தக்காளிப் பையை வாரம் முழுவதும் எங்கு சென்றாலும் எப்போதும் கைகளில் எடுத்துச் செல்ல வேண்டும், என்பதேயாகும்" எனக்கோட்டுகொண்டார் அதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் அந்த பணியை ஒப்புக்கொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல, தக்காளிகள் கெட்டுப்போக ஆரம்பித்த, அதன் காரணமாக பையில் இருந்து கெட்டுப்போன தக்காளிகளின் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அந்த வார முடிவில், ஆசிரியர் மாணவர்களிடம், "இந்த ஒரு வாரம் எப்படி உணர்ந்தீர்கள்?" என்ற கேள்வியை எழுப்பினார் உடன் அனைத்து மாணவர்களும் , "மோசமா துர்நாற்றத்துடன் கூடிய தக்காளிகளுடன்கூடிய பையை தொடர்ந்து கைகளில் எடுத்துச் செல்வதால் அதிக எடையும் துர்நாற்றமு்ம் தாங்க முடியவில்லை" என இது குறித்து புகார் தெரிவித்தனர். இதனை கண்டு ஆசிரியர் புன்னகைத்து, " நீங்கள் வெறுக்கும் நபரை தொடர்ந்து உங்களுடைய மனதில் சுமந்து கொண்டு செல்வதற்கு இது மிகவும் ஒத்திருக்கிறது, நீங்கள் ஒருவரைப் பிடிக்காதபோது, ​​​​அந்த வெறுப்பை நீங்கள் எங்கும் கொண்டு செல்கிறீர்கள், அந்த வெறுப்பு மனத்தை ஆரோக்கியமற்றதாக்குகின்றது. கெட்டுப்போன தக்காளியின் துர்நாற்றத்தினையே உங்களால் ஒரு வாரத்திற்குத் தாங்க முடியாவில்லை, அவ்வாறே நீங்கள் வெறுக்கும் நபரை பற்றிய எண்ணத்தினை மனதில் நீங்கள் தினமும் எடுத்துச் செல்லும்போது வெறுப்பின் கசப்பு உங்கள் மனத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கற்பனை செய்து பாருங்கள். அதனால் யாரையும் வெறுக்கின்ற சிந்தனையை மனதில் கொணடு செல்லாதீர்கள்" என அறிவுரை கூறினார்

நம்முடைய மனம் ஒரு அழகான தோட்டம் போன்றது, தேவையற்றவற்றை தொடர்ந்து மனதில் வைத்து கொண்டிருக்காமல் அதனை அவ்வப்போது துடைத்து சுத்தம் செய்திடுக


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...