ஒரு காட்டில். எப்பொழுதும் அதிகஅளவு உணவு உண்ணுவதையும் உறங்குவதையுமே தொழிலாக கொண்ட கரடி ஒன்று வாழ்ந்துவந்தது. ஒருநாள் காலை உணவு உண்டபின் நன்றாக உறங்கிவிட்டது திடீரென. விழித்தெழுந்தபோது மதியம்அதிகநேரம் ஆகிவிட்டதால் அந்த கரடிக்கு வயிற்றில் அதிகமாக பசி எடுத்தது. மழை பொழிந்து கொண்டும் மேகமூட்டத்துடனும் இல்லாமல் அன்று வானம் மிகத்தெளிவாகவும் பிரகாசமாகவும் இருப்பதைக் கண்டது.
. "இன்று பரவாயில்லை மழையெதுவுமில்லாமல் வானிலை நன்றாக உள்ளது இத்தகைய நல்ல வானிலையில் அருகிலுள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றால் நன்றாக இருக்கும்", என எண்ணிக் கொண்டே அருகிலிருந்த ஆற்றை நோக்கி நடந்தது. ஆற்றங்கரைக்கு சென்றதும், "ஆற்றில் இன்று பெரிய மீன் ஒன்றுமட்டும் கிடைத்தால் கூட போதும் நம்முடையப் பசி அடங்கிவிடும் ஆனால் சிறியமீனாக இருந்தால் நிறைய பிடிக்க வேண்டும்" என நினைத்தது. அதனால் பெரிய மீன் கிடைக்கவேண்டும் என்ற அதிக எதிர்பார்ப்புடன் ஆற்றில்இறங்கி ஓடிடும் தண்ணீரில் கைகளால் துழாவியபோது கையில் ஒரு மீன் சிக்கியது. மிகவும் மகிழ்ச்சியாக "ஆஹா! இன்று ஆற்றில் இறங்கி மீன் பிடிப்பதற்காக கைகளால் துழாவ துவங்கிய உடனேயே நமக்கு ஒருமீன் கிடைத்து விட்டதே!” என மிக மகிழ்ச்சியாக கையை தண்ணீருக்கு வெளியில் எடுத்து பார்த்தபோது: அது ஒரு சிறிய மீன் என அறிந்து மிக ஏமாற்றமடைந்துவிட்டது
"இவ்வளவு சிறிய மீனைக் கொண்டு எப்படி என் பசியைப் போக்க முடியும்" என்று நினைத்தது. "பெரிய மீன் ஒன்று மட்டும் கிடைத்து சாப்பிட முடிந்தால், பசி முழுதாக அடையும்:” என நினைத்துக் கொண்டு கையில் கிடைத்த அந்த சிறிய மீனை மீண்டும் ஆற்றில் வீசிவிட்டு கரடியானது அந்த ஆற்றில்மீண்டும் மீன் பிடிக்கத் தயாரானது. சிறிது நேரம் கழித்து மீண்டும் மற்றொரு மீன் கையில்சிக்கியது, வெளியிலெடுத்து பார்த்தபோது அதுவும் சிறியதாக இருந்தது. அதனால் அந்த சிறியமீனையும் மீண்டும் ஆற்றில் வீசி எறிந்தது.
இவ்வாறு கரடியானது அந்த ஆற்றில் கையால் துழாவி பல முறை மீனை பிடித்தபோதும், ஒவ்வொரு முறையும் கையில் சிறிய மீன்தான் கிடைத்ததே தவிர பெரிய மீன் கிடைக்கவேயில்லை, அதனால் ஒவ்வொருமுறையும் அடுத்த முறை பெரிய மீன் நம்முடைய கையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் மீண்டும் கையில் கிடைத்த சிறிய மீன்களை ஆற்றில் வீசுி எறிந்து கொண்டேயிருந்தது.
அவ்வாறு அவ்வப்போது கையில் கிடைத்த சிறிய மீனை ஆற்றில் நாள் முழுவதும் மீண்டும் எறிந்து கொண்டே யிருந்ததால் மாலைநேரமாகிவிட்டது, பெரிய மீன்பிடிப்பதற்கான பணியும் தாமதமாகிகொண்டே வந்தது .ஆயினும் இதுவரையிலும் ஒரு பெரிய மீனைக் கூட அந்த கரடியின் கைகளில் சிக்கவில்லை. வயிற்று பசியும் தீரவில்லை கூடுதலாகி கொண்டே யிருந்தது மிகவும் சோர்வாகிவிட்டதால், அதற்குமேலும் உணவைத் தேட முடியாமல், வெறும் வயிற்றோடு அந்த ஆற்றங்கரையிலேயே கிழேதரையில் படுத்துவிட்டது. அவ்வாறு படுத்துகொண்ட பின்னர் இதுவரையில், தன்னுடைய கைகளால் பிடித்து மீண்டும் ஆற்றில் வீசிய சிறு மீன்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது "அடடா.! பெரிய மீன் ஒன்று இருந்தால் தான் , நம்முடைய வயிற்று பசியை நிரப்புமுடியும் என்ற பேராசையில் கையில் கிடைத்த சிறிய மீன்களை எல்லாம் மீண்டும் மீண்டும் ஆற்றில் வீசி எறிந்துவிட்டேனே அவைகளை ஒவ்வொன்றாக சாப்பிட்டிருந்தால் கூட நம்முடைய பசி அடங்கி யிருக்குமே இவ்வளவு பசியினால் சோர்வாகி படுத்திருக்க மாட்டேனே!" என எண்ணியது காலம் கடந்தபின் ஞானம் வந்து என்ன பயன்.?
நம்மிடம் உள்ள எந்தவொரு பொருளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்க. அது சிறியதாக இருந்தாலும், எதையும் விட அதுவே சிறந்தது எனஅறிந்து கொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக