சனி, 29 ஜனவரி, 2022

நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதே

 


ஒருமுறை சில நாய்கள் தங்களுடைய உணவிற்காக முயல் கூட்டம் ஒன்றினைத் துரத்தி சென்ற.அந்த கூட்டத்தில் இருந்த எல்லா முயல்களும் தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மிகவேகமாக ஓடிச்சென்ற. மிகவெகுதூரம் ஓடிச்சென்றும் தொடர்ந்து தங்களுக்கு பின்புறம் ஓநாய்கள் தங்களை துரத்தி கொண்டே வருவதால் எப்படியாவது, நாய்களுக்குப் பலியாவதைத் தவிர்க்கவேண்டுமென செடிகள் நிறைந்த ஒரு புதரக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டன
மிக நீண்டு தூரம் ஓடிவந்ததாலும், உயிரை இழந்துவிடுவோமோ என்ற பயத்தாலும் அவை அனைத்தும் மிகஅதிக களைப்படைந்திருந்த. துரத்தி வந்த நாய்கள் முயல்கள் எதுவும் கண்ணிற்கு புலப்படாததால் என்ன செய்வது என திகைத்து நின்றன பின்னர் வேறு ஏதாவது கிடைக்கின்றதாவென தேடிபார்ப்போம் என வந்த வழியே திரும்பிசென்றன.அவ்வாறு ஓநாய்கள் இறை ஒன்றும் கிடைக்கவில்லை என திரும்பி சென்ற பிறகு, அந்த முயல்கள் அனைத்தும் நிம்மதியாக பெருமூச்சுவிட்டன, அவை தற்போது உயிர்பயம் இல்லாத சாதாரண நிலையை அடைந்துவிட்டோம் என உணர்ந்தவுடன், அவை தங்களுடைய நிலையைப் பற்றி விவாதிக்கத் தொடங்கின.
ஒரு முயல், '"நண்பர்களே!
தினமும் இவ்வாறான உயிர் பயத்துடன் எதற்காக நாம் உயிர் வாழவேண்டும்! நாம் மிகவும் சிறிய, முக்கியமற்ற, உதவியற்ற உயிரினங்களாக உள்ளோம். காட்டெருமை போன்று நமக்கு கொம்புகளும் இல்லை, ுலியை போன்ற கூர்மையான நகங்களும் இல்லை. அவ்வாறு நமக்கிருந்தால் இவ்வாறு நம்முடைய எதிரி நம்மை கொல்வதற்காக துரத்திடும்போது அவ்வெதிரியுடன் நம்முடைய உயிரை காத்து கொள்வதற்காக எதிர்த்து போராட முடியும்'” என தங்களுடைய இயலாமையை கூறியது
உடன் மற்றொரு முயல் . "மிகவும் சரி நண்பரே! நீங்கள் எதார்த்தமானஉண்மையை கூறுகின்றீர்கள் நம்முடைய வாழ்க்கையில் உயிர் பயத்திலானஒரு நெருக்கடி நமக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு உயிர் பயத்துடனாநம்முடைய வாழ்க்கையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன், அதனால் இப்போது என்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறேன்." என கூடுதலாக விளக்கம் அளித்தது
தொடர்ந்து வேறொருமுயலானது " .நானும் சாக விரும்புகின்றேன். நான் அருகிலுள்ள குளத்தில் குதி்த்து இறக்கபோகின்றேன்." என அதற்கு ஒத்தூதியது
அதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் இருந்த அனைத்து முயல்களும் தற்போத தங்களுடைய வாழ்க்கையை உடன் முடித்துக்கொள்வதாக உறுதி எடுத்துகொண்டன. அதற்காக அருகிலுள்ள குளத்திற்குச் சென்று குதித்து நீரில்மூழ்கி தங்களுடைய உயிரை விட்டுவிட வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக தீர்மானித்த. பிறகு அனைத்து முயல்களும் அருகிலுள்ள குளத்தின் கரையை நோக்கி மெல்லச் செல்ல ஆரம்பித்தன.
அந்த குளத்தில் நிறைய தவளைகள் வாழ்ந்து வந்தன.முயல்களின் கூட்டம் குளத்தை நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் அந்த குளத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அனைத்து தவளைகளும் அந்த குளத்தின் கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன, முயல்கூட்டம் குளத்தின் கரையருகே சென்றது. முயல்களின் கூட்டம் குளத்தை கரையைநோக்கி வரும் சத்தம் கேட்டவுடன்; அந்த குளத்தின் கரையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த தவளைகள் அனைத்தும் மேலும் தாம் அங்கு இருந்தால் தம்மை முயல்கள் மிதித்து கொன்றுவிடும் என அந்த குளத்திலிருந்த தண்ணீர்க்குள் தாவி குதித்தன.
அவ்வாறு குளத்தின் கரையை நோக்கி சென்ற முயல்கள் அனைத்தும் தம்முடைய உயிரைக் கொடுக்க குளத்திற்குள் குதிக்க தயாராகி; இதை பார்த்த வயதாமுயல் ஒன்று, "நண்பர்களே!! சற்றே நில்லுங்குள் நமக்கு பயந்து குளத்தின் கரையில் இருந்த தவளைகள் தண்ணீரில் குதித்ததை நீங்கள் பார்த்தீர்கள்.அல்லவா .
இந்த உலகில் நம்மை விட சிறிய மிகச்சிறிய உயிரினங்கள் உள்ளன என்று அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்
. அவகளால் நம்முடன் போட்டியிட முடியாது, அதனால் அவ நம்மைப் பார்த்து பயப்படுகின். ஆனால் அவை தொடர்ந்து தங்களுடைய வாழ்க்கையை வாழ விரும்பு கின்றன அதனால் அவை குளத்திற்கு தாவி குதித்து தங்களுடைய உயிரி காத்து கொண்டன, எனவே நாமும் நம்முடைய வாழ்க்கையைத் மாய்தது துறக்க வேண்டிய அவசியம் இல்லை . நாம் ஏமாறக்கூடாது. நம்மை விட சிறிய தவளை வாழும்போது, நாமும் வாழ முடியும். நம்முடைய காத்துகொள்வதற்காக நமக்கு அதிக வேகமாக ஓடும் திறன் உள்ளது அதனை கொண்டு நாம் நம்முடைய உயிரை காத்து கொள்ளமுடியும்" என மிக நீண்ட விளக்கமளித்ததைதொடர்ந்து எல்லா முயல்களும் அதனை புரிந்துகொண்டு உயிர் துறக்கும் எண்ணத்தை விட்டுவிட்டன.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...