சனி, 8 ஜனவரி, 2022

கலைச்சிற்பங்களும் பணியாளரும்

 


முன்னொரு காலத்தில் சிற்பங்களை மிகவும் நேசித்த மன்னர் ஒருவர் இருந்தார். அவர் உலகெங்கிலும் உள்ள சிற்பங்களை சேகரித்து தனது அரண்மனைக்கு கொண்டு வந்துசேர்த்து பாதுகாத்து வந்தார். அவரது அரண்மனையில் பல சிற்பங்கள் இருந்தன, ஆனால் அவற்றில் மூன்று சிற்பங்களை மட்டும் அவர் மிகவும் விரும்பினார். அந்த சிற்பங்களை அரசன் மிகுந்த கவணத்துடன் பாதுகாத்து வைத்திருந்தார் என்பது அவருடைய நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த ஒரு செய்தியாகும். ஒரு நாள் அவரது பணியாள் அந்த சிற்பங்களை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்த போது, தவறுதலாக அரசனுக்கு பிடித்த சிற்பம் ஒன்று உடைந்து விட்டது
இதை அறிந்த மன்னன் மிகவும் கோபமடைந்து, அந்த பணியாளுக்கு உடனடியாக மரண தண்டனை விதித்தார்
. அரசனின் இந்த உத்திரவினைக் கேட்டவுடன், அந்த பணியாளர் அரசன் மிகவும் விரும்பிய மற்ற இரண்டு சிற்பங்களையும் உடனடியாக உடைத்தார். இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அரசன் தன் உதவியாளரை கொண்டு அந்த பணியாளரை தன் அரசவைக்கு அழைத்து வரச் செய்தார்.
பணியாளர் அரசவைக்கு வந்ததும், "மற்ற இரண்டு சிற்பங்களை ஏன் உடைத்தாய்?" என்று தான் மிகவும் நேசிக்கின்ற சிற்பங்களை உடைத்த அந்த பணியாளரிடம் அரசன் கேள்விஎழுப்பியபோது அந்த பணியாளர்., "அரசே, இந்த சிற்பங்கள் களிமண்ணால் செய்யப்பட்டவை , மிகவும் உடையக்கூடியவை. அவை உடையாமல் நிலையாக இருக்ககூடியவை அல்ல. இன்று இல்லையென்றால் நாளை உடைந்துவிடும்.தன்மை கொண்டவை அதனால் பிற்காலத்தில் என்னைப் போன்ற வேறு யாரோஒருவரால் அத உடைந்தால், அவர் கண்டிப்பாக மரண தண்டனையை சந்திக்க நேரிடும் ஏற்கனவே நான் ஒரு சிலையை உடைத்ததால் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது, அதனால் மற்ற இரண்டு சிற்பங்களை உடைத்தால் எனக்கு மேலும் இரண்டு மரணதண்டனைய வழங்கமுடியாது ஆனால் வேறு நபர்கள் அவ்விரண்டினையும் உடைத்தால் அவ்வாறு உடைக்க விருக்கின்ற இரண்டு பேருக்கும் மரணதண்டை கண்டிப்பாக கிடைக்கும் அதனால் எதிர்காலத்தில் அவ்விரண்டுநபர்களுக்கு மரணதண்டனை கிடைக்காமலிருக்குமாறு இந்த செயலின் மூலம் இரண்டு உயிரைக் காப்பாற்றினேன்," என மிக நீண்ட விளக்கமான பதிலை அளித்தார் அதைக் கேட்ட மன்னன் ஒரு சிலையை உடைத்ததற்காக கடுமையான மரண தண்டனை விதிப்பது சரியன்று என தன் தவறை உணர்ந்து அந்த பணியாளரை மரண தண்டனையிலிருந்து விடுவித்தார்.
அரசன் சிற்பங்களை மிகவும் விரும்பினான் ஆனால் தான் விரும்பிடும் சிலையை உடைத்ததற்காக சாதாரணமான தண்டனை வழங்குவதற்கு பதிலாக மிகக்கடுமையான மரண தண்டனையை பணியாளருக்கு வழங்கியது நீதிக்கு எதிரானது
. நீதியின் நாற்காலியில் அமர்ந்து, ஒருவர் தனது ஆளுமை/உணர்வுகளால் பாதிக்கப்படாமல், செயல்களுக்கு தக்கவாறு நியாயமாக முடிவெடுக்க வேண்டும் பணியாளர் அந்த அரசனுக்கு மனிதவாழ்க்கையின் மதிப்பை கற்றுக் கொடுத்தா..
பணியாளர் தன்னை விட பல மடங்கு சிறந்தவர் என்பதை மன்னன் புரிந்துகொண்டார் ந்த பணியாளர் தான் மரணத்தின் அருகில் இருந்தும். மனித வாழ்க்கையின் அருமையை மன்னனுக்கு உணர்த்தினார்...
உயர் பதவியில் இருப்பவருக்கு பொறுப்பு உண்டு, அவருடைய தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக
, ஒரு சிறிய குற்றத்திற்கு கூடமரண தண்டனை வழங்குவது அந்த பதவியையே அவமதிப்பதாகும். அரசனாக இருந்தாலும் , நீதி பரிபாலனம் செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு யாராக இருந்தாலும் நீதியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தீர்ப்பினை வழங்க வேண்டும்.



கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...