ஞாயிறு, 26 டிசம்பர், 2021

பொறாமை கொண்ட கிராமத்தின் ஒரு தையல் கடைக்காரர்


ஒரு கிராமத்தில் ஒரேயொரு தையல்கடைகாரர் இருந்தார், அந்த கிராமத்தில்அவர் ஒருவர்மட்டுமே தையல் பணிசெய்ததால் அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்களுடைய துனிகளை அவர் ஒருவரிடம் மட்டுமே தைத்து கொண்டனர் அதனால் . தங்களுடைய துனிகளை தைப்பதற்காக ந்த தையல்கடைகாரர்எவ்வளவு பணம் கேட்டாலும் வேறுவழியின்றி அந்த தொகையை கொடுத்து தங்களுடைய துனிகளை தைத்திடும் பணியை செய்து முடித்து கொண்டனர் அதனால் அந்த தையல்கடைகாரர் ஏராளமாக சம்பாதித்தார் கிராம மக்கள்அனைவரும் தன்னிடம் மட்டுமே தங்களுடைய துனிகளை தைக்க வருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அறிந்து கொண்டார், அதனால் துணி தைப்பது தொடர்பாக யாராவது அவரிடம் புகார் கூறினால், அவர் அதிக திமிருடன் நடந்து கொள்வார், அவர்களிடம் அதிக வாக்குவாதத்தில் ஈடுபடுவார். அதனால் அந்த கிரமாத்தில் வாழும் பொது மக்கள் அனைவரும் அவர் மீது அதிக கோபமடைந்தனர், ஆனாலும் வேறு வழியில்லாததால் அனவரும் தங்களுடைய துனிகளை தைப்பதற்காக அவரிடம செல்ல வேண்டியிருந்தது. இந்த சூழலில் ஒரு நாள் ஏழைப் பெண் ஒருவர்தன் குழந்தையுடன் அந்த கிராமத்திற்கு வந்து வாழத் தொடங்கினார். ந்தபெண்ணிற்கு தையல் பணி தெரியும். அதனால், ந்த தையல்கடைகாரரின் கடையில் தனக்கு துனி தைத்திடுவதற்கான பணியை கொடுத்து உதவிடுமாறு அந்த பெண் கோரியபோது அந்த தையல்கடைகாரர் இங்கு தையல் வேலை எதுவும் இல்லை என மறுத்து அந்த பெண்ணை விரட்டினார் . வேறு வழியில்லாததால், அந்த பெண் தன்னிடம் கையிருப்பில் இருந்த சிறிதளவு பணத்தில் தையல் இயந்திரம் ஒன்றினை வாங்கி அந்தகிராமத்தின் ஓரமாக இருந்த ஒருவீட்டின் ஒரு சிறிய அறையை வாடகைக்கு ஏற்பாடு செய்து அந்த கிராமத்தில் தன்னுடைய தையல் பணியை செய்ய ஆரம்பித்தார். ந்தபெண் மனியின் தையல் நன்றாக இருந்தது, மேலும் அந்த பெண் அனைவர மென்மையாகவும் மிக மரியாதையுடனும் பேசுவதுடன் நட்பாகவும் இருந்து வந்தததால். அந்த கிராமத்துமக்கள் ஒவ்வொருவராக அந்த பெண்மனியிடம் தங்கள் துணிகளை தைத்துக்கொள்வதற்காக வர ஆரம்பித்தனர். அந்த பெண்மனியினுடைய தையல் பணி மிகவேகமாக வளர ஆரம்பித்தது, மிகக்குறுகிய காலத்தில், அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் அந்தப் பெண்ணிடம் தங்களுடைய துனிகளை தைத்திடும் பணிக்காகசெல்லத் தொடங்கினர் ஏற்கனவே இருந்த தையல் கடைக்கு யாரும் செல்வதில்லை வாடிக்கையாளர்கள் யாரும் வராததால், அந்த கிராமத்தில் ஏற்கனவே ருந்த தையல் கடையின் வருமானம் நின்று போனது. அதனால் அந்த கிராமத்திற்கு தையல்பணிககாக வந்த அந்தப் பெண்ணை காணும் போதெல்லாம் பொறாமையும் அதிககோபமும் அந்த தையல்கடைகாரருக்கு வந்துவிடும். ஒரு நாள் ஏற்கனவை தையல்கடைவைத்திருந்த தையல்கடைகாரரின் மனைவி புதியதாக தையல்கடை வைத்திருந்த பெண்ணிடம் சென்று, "நீ வந்த பிறகு என் கணவரின் கடைக்கு துணி தைக்க யாரும் வருவதில்லை. இந்த சிறிய கிராமத்தில் இரண்டு தையல்காரர்கள் இருந்தால் நன்றாக சம்பாதிக்க முடியாது. நீங்கள் சம்மதித்தால் நான் . உங்கள் கடையை நீங்கள் கூறும் விலைக்கு வாங்கிகொள்கிறேன்." எனக்கூறினார் புதிய தையல்கடைகார பெண்ணும் தன்னுடைய கடையை விற்க ஒப்புக்கொண்டார். அந்த புதிய தையல் கடைக்கு ஐம்பதாயிரத்திற்கு விற்பதற்கு இருவரும் ஏற்றுகொண்டு கையோடு எடுத்துக்கொண்டு சென்ற பணத்தினை உடன் அந்தபுதிய தையல்கடை வைத்திருந்த பெண்ணிடம் கொடுத்ததால் ன்று மாலையே அந்த பெண் தன்னுடைய குழந்தையுடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறினார்.

யினும் பொறாமையும் கோபமும் கொண்ட தையல் கடைகாரர், அன்று இரவே அந்த பெண்ணின் தையல் கடையை தீ வைத்து எரித்தார். தையல்கடை எரிய ஆரம்பித்து, அனைத்தும் சாம்பலாயின. இதையறிந்த தையல்கடைகாரரின் மனைவி , " அந்த புதிய தையல்கடையை என்ன செய்தீர்கள்! ந்த புதிய தையல்கடை பெண்மனியை சந்தித்து இந்த கிராமத்தை விட்டே செல்லுமாறு ஒப்பந்தம் ஒன்றினை செய்தேன். அதற்கு நட்டஈடாக ரூபாய் ஐம்பதாயிரத்தினை அந்த தையல்கடைகார பெண்ணிற்கு கொடுத்துவிட்டேன் அந்த பெண்ணும் அந்த தையல் கடையை நமக்கு கொடுத்துவிட்டு இன்று மாலை இந்த ஊரை விட்டு வெளியேறச் சொன்னேன். அவளும் ஒப்புக்கொண்டு இந்த கிராமத்தினை விட்டு வெளியே சென்று விட்டாரே உங்கள் சொந்த கடைக்கு நீங்களே தீ வைத்து எரித்து விட்டீர்கள." எனக்கூறினாள் அதைக் கேட்ட தையல் கடைகாரர் தன் தவறை உணர்ந்தார் ஆனால் இப்போது அவரால் ஒன்றும் செய்ய முடியாத நிலையாகிவிட்டது

நீதி.ந்தவொரு செயலையும் செய்வதற்குமுன் தன்னுடைய உறவினர்களுடன் கலந்து உரையாடிய பின் முடிவுசெய்து அந்த செயலை செயற்படுத்திடுக



கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...