வெள்ளி, 10 டிசம்பர், 2021

குறிப்பிட்டபணிக்கு தகுதியான மனிதன் ஒருவனைத் தேடுதல்

 


முன்னொருகாலத்தில் ஒரு கிராமத்தில் பணக்காரர் ஒருர் வாழ்ந்துவந்தார். அவர் அந்தகிராமத்தின் மையத்தில் புதியதாக ஒரு பெரிய கோவிலைக் கட்டினார், அதனால், அந்த கிராமத்தை சுற்றிலுமிருந்து ஏராளமான பொதுமக்கள் அந்த கோயிலுக்கு வந்து வழிபடத் தொடங்கினர். கோயிலின் பிரமாண்டத்தைப் பார்த்து பொதுமக்கள் அனைவரும்" அந்த கயில் மிகவும்அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கின்றது "என போற்றி புகழ்பாடத் துவங்கினார்கள் அதனைதொடர்ந்து காலப்போக்கில் அந்த கோவிலானது மிகவும் பிரபலமடைந்தது. அதனால் தொலைதூரத்தில் இருந்த மக்கள்கூட அந்த கோயிலுக்கு வந்து வழிபடத் தொடங்கினர், அதன் அழகை ரசித்து பரவசமடைந்தர். அந்த கோவிலை காண்பதற்காக வருகின்ற ுமக்களின் எண்ணிக்கையானது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருவதைக் கண்டு, அந்த கோயிலை உருவாக்கிய செல்வந்தர்அந்த கோவிுக்கு வருகின்ற பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான உணவுவழங்கிடுமாறும் வெகுதூரத்தில் இருந்து பொதுமக்கள் அந்த கோவிலுக்கு வருவதால் அவர்கள் தங்குவதற்கு நல்ல வசதியான விடுதியினையும் ஏற்பாட செய்தார். வ்வாறான சூழலில் அந்த செல்வநதருக்கு கோவிலில் இவ்வாறான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைது கவனித்துகொள்ளவும் இந்த பணிகளில் பிரச்சினைஎதுவுமில்லாமலும் தொய்வில்லாமலும் தொடர்ந்து நடைபெறுவதை கண்கானித்து நிருவகிப்பதற்கு பொருத்தமான நபர் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார், அதனால் அவர் கோவிலுக்கு வெளியே 'இந்த கோவிலை நிருவகிப்பதற்கு ஒரு நிர்வாகி தேவை’. என்ற அறிவிப்பு ஒன்றினை எழுதி வைத்தார் - உடன் இந்த அறிவிப்பினை பார்த்ததும் இந்த கோவிலின் நிர்வாகி எனும் பணி கிடைத்தால் சம்பளமும் கூடுதலாக இருக்கும் பணியும் எளிதானதாக இருக்கும் என்பதால் அந்த செல்வந்தரிடம் ஏராளமானவர்கள் அந்த பணியை தாம் செய்ய தயாராக இருப்பதாக கூற ஆரம்பித்தனர். . ஆனால் அந்த செல்வந்தர் ஒவ்வொருரையும் நேர்காணல் செய்த பிறகு "இந்த பணிக்கு எனக்கு ஒரு தகுதியான நபர் தேவை, அவரால்தான் இந்த கோவிலை ஒழுங்காக நிர்வகிக்க முடியும். வர் அவ்வாறான நபர் அன்று" என மனதிற்குள் ஒப்படுசெய்து அவர்கள் அனைவரையும் அந்த பணிக்கு பொருத்தமானவர்களாக இல்லையெனதிருப்பி அனுப்பி கொண்டேயிருந்தார், அதனால் நேர்காணலுக்கு சென்று திரும்பிய அனைவரும்ந்த செல்ந்தரை முட்டாள் என்றும் அல்லது பைத்தியம் என்றும் அழைத்தனர், ஆனால் அவர் யாருடைய தூற்றுதலையும் கண்டுகொள்ளவில்லை,தொடர்ந்து அந்த கோவிலை நிர்வகிக்க பொருத்தமான நபரை தேடிக்கொண்டேயிருந்தார். அதன்பிறகு அந்த செல்வந்தர் தினமும் காலையில் தனது வீட்டின் மேல்மாடியில் அமர்ந்துகொண்டு கோவிலுக்கு வருபவர்களை கவனமாகப் பார்த்துக் கொண்டேயிருப்பார். ஒரு நாள் மிகவும் கிழிந்த அழுக்கான ஆடையை அணிந்திருந்த மிகவும் ஏழை ஒருவன் கோவிலுக்குள் நுழைவதைக் கண்டார். பின்னர் அந்த ஏழை மனிதன் கோவிலை விட்டு வெளியே திரும்பிசெல்வதையும் பார்த்து கொண்டேயிருந்த அந்த செல்வந்தர்ந்த ஏழையை அழைத்து, ‘இந்தக் கோயிலை நிருவகிப்பதற்கான பணியை உன்னால் செய்யமுடியுமா?என வினவினார். உடன் அந்த ஏழை, அவ்வாறு செல்வந்தேர் தன்னிடம் வினவியதைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு, கைகூப்பி, “ஐயா நான் மிகவும் ஏழை, மேலும்நான் நன்றாக எழுதப்படிக்கக்கூட தெரியாதவன். என்னால் இவ்வளவு பெரிய கோவிலை எவ்வாறுிருவகிக்க முடியும்.." என பதில் கூறியதை தொடர்ந்து செல்வந்தர் சிரித்துக்கொண்டே, “எந்தவொரு கல்விகற்ற மனிதனும் இந்தக் கோயிலை நிர்வகிப்பதற்கு தகுதியானவனாக எனக்கு தெரியவில்லை. இந்த கோவிலின் நிர்வாகத்தை உன்னைபோன்ற தகுதியான ஒருவரிடம ஒப்படைக்க விரும்புகிறேன்” என்றார். பணக்காரனின் இவ்வாறான சொற்களைக் கேட்டு அந்த ஏழை மனிதன் மிகவும் குழப்பமடைந்து, “ஆனால், எல்லோரையும்விட என்னை ஏன் தகுதியானவனாகக் கருதுகின்றீர்கள்?” என்ற மீண்டும் வினவினார். அதற்கு செல்வந்தர், “ந்த பணிக்கு . நீங்கள்தான் தகுதியான நபர் என்பதை சற்றுமுன்னரதான் உங்களுடைய செயலை கண்டு நான் அறிந்துகொண்டேன். அதாவது இந்த கோயிலுக்குள் செல்லும் நடைபாதையில் ஒரு கருங்கல்லைப் புதைத்து வைத்து பொதுமக்கள் அனைவரும் எவ்வாறு செல்கின்றனர் என பல நாட்களாக கவனித்துவந்தேன். இந்த கோவிலுக்குள் நுழையும் பலரும் அந்த கருங்கல்லில் கால் தடுக்கி தடுமாறி விழுந்ததையும், அல்லது அதனை தாண்டி செல்வதையும் பல நாட்களாக நான் பார்த்து வருகிறேன் ஆனால் மற்றவர்கள் யாரும் அந்த கருங்கல்ில் தடுக்கிவிழாமல் தடுத்திடுவதற்காக அதனை அங்கிருந்து அகற்றிடவேண்டுமென எவரும் நினைக்கவில்லை. ஆனால் நீங்கள் மட்டும் அந்த கருங்கல்லால் தடுக்கி தடுமாறவும் இல்லை அதனை தாண்டி செல்லவும் இல்லை அதற்கு பதிலாக நீங்கள் மேலும் வேறுயாரும் அந்கருங்கல்லினால் பாதிக்ககூடாது என அதை அங்கிருந்து அகற்ற நினைத்தீர்கள். அதற்காக நீங்கள் அருகிலிருந்த வீட்டில் மண்வெட்டிஒன்றினை வாங்கி அந்த மண்வெட்டியின் மூலம் அந்த கல்லினை சுற்றி பள்ளம் தோண்டி அந்த கல்லை அகற்றியதோடு மட்டுமல்லாமல் அவ்வாறு தோண்டிய பள்ளத்தை சமன் செய்ததைக் கண்டேன். அதனால் நீங்கள்தான் பொருத்தமானவர் " என பதில் கூறியதைதைக் கேட்ட ஏழை, "நான் பெரிய பணி எதுவும் செய்யத்தெரியாதவன், பிறரைப் பற்றி சிந்திப்பதும், மற்றவர்கள் செல்லும் வழியில் குறுக்கிடுகின்ற இடையூறுகளை அகற்றுவதும் ஒவ்வொரு மனிதனின் கடமை. அதன்படி நான் என் கடமையை மட்டுமே செய்தேன்" என்றார். தொடர்ந்துபணக்காரன் சிரித்துக் கொண்டே, "ங்களுடைய கடமையை அறிந்து அதைச் செய்பவர்கள மட்டுமே இந்த கோவிலை நிருவகிக்கும் பணிக்கு தகுதியானவர்களாவர்.அதனால் நீங்கள் இந்த பணியை இன்றே ஏற்றுககொள்ளுங்கள்" என்றார். இவ்வாறு கூறி அந்த ஏழையிடம் அந்த பெரிய கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் பணக்காரர்.

நீதி: யாரும் நம்மைப்பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், ம் நம்முடை கடமையை செய்வதை நாம் மறந்துவிடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...