சனி, 18 டிசம்பர், 2021

நிறுவனத்தின் முகப்பு அறிவிப்புபலகையின் இருந்த செய்தி

 ஒரு நாள் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலக ஊழியர்களும் தங்களுடைய அலுவலகத்திற்குள் சென்றுகொண்டிருந்தபோது, அலுவலக வாயிலின் முகப்பில் " நேற்று உங்களுடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார், அவர் இந்நிறுவனத்தில் உங்களுடைய முன்னேற்றத்தையும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியையும் தடுப்பதில் முதன்மையானவர். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் அலுவலகத்திலுள்ள கருத்தரங்கு மண்டபத்தில் இன்று காலை சரியாக 11 மணிக்கு அன்னாருக்கு இறுதி நினைவு அஞ்சலி கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதி அஞ்சலி கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கப் படுகிறது” என்று எழுதப்பட்ட செய்தியுடன் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டிருந்ததை கண்டனர். .முதலில் அனைவரும் தங்களுடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவரின் மரணச் செய்தியை கண்டு மிகவும் வருத்தப்பட்டனர், ஆனால் சிறிது நேரம் கழித்து அவர்கள் அனைவருக்கும் 'நம்மோடு பணிபுரியும் ஊழியர் ஆனால் நம்மனைவரின் முன்னேற்றத்தையும் தடுத்திட முனைகின்ற அந்த நபர் யார்? எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடை இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தையும் தடுக்கின்ற அந்த ஊழியர் யார்?’ என அறிந்துகொள்வதில் மிகவும் அதிக ஆர்வம் எழத் தொடங்கியது . அன்று காலை சரியாக, 11 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய நிறுவனத்தின் கருத்தரங்கு மண்டபத்திற்கு ஒவ்வொருவராக வரத்து துவங்கினர், ஊழியர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், கருத்தரங்கு மண்டபத்தில் மக்கள் நடமாட்டமும் அதிகரித்தது ." நிறுவனத்தில் எனது முன்னேற்றத்தையும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தினையும் தடுப்பதில் முனைப்பாக இருந்த அந்த நபர் இறந்து விட்டது ஒருவகையில் நல்லதுதான் " என்ற ஒரே செய்திதான் அவ்வூழியர்களின் அனைவருடைய மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது இறுதி நினைவு அஞ்சலி கூட்டத்திற்கு ஒவ்வொருவராக வரஆரம்பித்தவுடன் ஆர்வமுள்ள ஊழியர்கள் ஒவ்வொருவராக இறந்த அந்த ஊழியர் யார் என காண்பதற்காக அவ்வூழியரை வைத்திருந்த சவப்பெட்டியை நெருங்கத் தொடங்கினர்,ஆனால் அதனை ஒவ்வொருவராக மட்டுமே பார்க்கமுடியும் என்பதால் அலுவலக ஊழியர்கள் வரிசையாக ஒவ்வொருவராக சென்று பாரக்கதுவங்கினர் ஆயினும் அந்த நிறுவனத்தின் அலுவலக ஊழியர் ஒவ்வொருவரும் அந்த சவப்பெட்டியின் உள்ளே பார்த்தவுடன் , அதிர்ச்சியில் ஒவ்வொருவரும் திகைத்து அசையாது நின்றுவிட்டனர். அதாவது அந்த சவப்பெட்டியில் உள்பகுதியில் முகம்பார்த்திடும் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனால் யாரொருவரும் அதனுள் பார்த்தாலும் அவரது முகமே அந்த கண்ணாடியில் தெரியும் அதனால் சவப்பெட்டியில் இறந்த நபர் யார் என பார்த்த ஊழியர் ஒவ்வொருவரும் அதில் தன்னுடைய முகத்தை கண்டதும் அதிர்ச்சியில் திகைத்து நின்றுவிட்டனர்


மேலும் "உங்கள் முன்னேற்றத்திற்கும் இந்த நிறுவனத்தின் வளரச்சிக்கும் தடையாக இருப்பவர் , நீங்கள் ஒருவர்தான். உங்களுடைைய வாழ்க்கையை வெற்றிகரமாக உருவாக்கக்கூடியவர் நீங்கள் ஒருவர்மட்டுமே. உங்கள் மகிழ்ச்சி, உங்கள் வெற்றி ஆகியவற்றினை பாதிக்கக்கூடிய நபர் நீங்கள் ஒருவர் மட்டுமே. உங்களுடைய வாழ்க்கையின் வெற்றிக்காக உதவக்கூடிய ஒரே நபர் நீங்கள் மட்டும்தான். நீங்கள் வேறுநிறுவன்த்திற்கு மாறிசென்றாலும்அல்லது உங்கள் நிறுவனத்தின் முதலாளி மாறினாலும், உங்கள் நண்பர்கள் மாறினாலும் வெற்றிகரமான உங்கள் வாழ்க்கை மட்டும் மாறாது,, ஆனால் நீங்கள் "உங்களை" மாற்றிகொண்டு வெற்றிகரமாக உழைப்பதற்காக முயற்சி செய்திடும்போது உங்கள் வாழ்க்கை மாறுகிறது. உங்கள் சொந்த நம்பிக்கைகளின் வரம்புகளை நீங்கள் கடக்கும்போது, உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக மாறுகிறது." என்ற குறிப்பு அங்குள்ள கண்ணாடியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அந்த கண்ணாடியில் தங்களுடைய முகத்தினையும் இந்த செய்திகுறிப்பினையும் கண்டு அனைவரின் உள்ளத்தையும் அந்த செய்தியானது உலுக்கியதால் ஊழியர்கள் அனைவரும் திகைத்து நின்றுவிட்டனர் ஆம் நம்முடைய வாழ்க்கையின் வெற்றிக்கும் தோல்விக்கும் நாம் மட்டுமே பொறுப்பு 

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...