சனி, 4 டிசம்பர், 2021

குறுக்கு சாலையில் ஓவியம் வரைதல் - மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுதல்

 


ஒரு மிகப்பெரிய நகரத்தில் மிகபிரபலமான ஓவியர் ஒருவர் வாழ்ந்துவந்தார். அந்நகரில் அவ்வப்போது நடத்துகின்ற அவருடைய ஓவிய கண்காட்சிக்கு ஆயிரகணக்கான மக்கள் வந்த பார்வையிட்டு செல்வது வழக்கமாகும், அவ்வாறு ஓவிய கண்காட்சிக்கு பார்வையிடு வதற்காக வருகின்ற மக்கள்அவரதுஓவிய படைப்புகளைப் பாராட்டுவதில் சோர்வடைய மாட்டார்கள். ஒருமுறை அவ்வாறு ஓவிய கண்காட்சிக்கு வந்து பார்வையிடுகின்ற மக்கள் உண்மையில் தன்னுடைய ஓவியத்தினை கண்டு புகழ்கின்றனரா அல்லது அவருடைய முகத்திற்கு நேராக மட்டும் தன்னையும் தன்னுடைய ஓவியங்களையும்ப் புகழ்ந்துவிட்டு, முதுகுக்குப் பின்னால் தான் வரைகின்ற ஓவியங்களிலும் குறைகூறுகி்றனரா என்பதை சரிபா்ப்பதற்காக, அந்நகரத்தின் சாலைகள் சந்திக்கின்ற பரபரப்பான ஒரு கூட்டுச்சாலையின் சதுக்கத்தில் அதிகாலையில் அவர் தன்னுடைய புகழ்பெற்ற ஓவியம் ஒன்றினை பொதுமக்கள் பார்வையிடுவதற்கா ைத்தபின்னர் அதற்குஅருகல் , இந்த ஓவியத்தில் யாரேனும் தவறு ஏதேனும் கண்டால், த்தவறின்மீது (X) எனும் பெருக்கல் குறியினை இடுக” என்ற ஒரு குறிப்பினையும் எழுதிவைத்தார். அன்று மாலை பொதுமக்கள் தன்னுடைய ஓவியத்தின்மீது எந்த வகையான கருத்துகளை கொண்டுள்ளனர் என அறிந்து கொள்வதற்காக அந்த கூட்டுச்சாலை சதுக்கத்தில் அன்று காலை தான்வரைந்த புகழ்பெற்ற தன்னுடைய ஓவியத்தைப் பார்க்கச் சென்றபோது, ஓவியத்தில் நூற்றுக் கணக்கான (X) பெருக்கல் குறிகளை கண்டு, அவரது இருகண்களிலும் கண்ணீர் வழிந்தன. பொதுமக்களின் அவ்வாறான செயலினால் அவர்மிகவும் ஏமாற்றமடைந்து அமைதியாக அந்த ஓவியத்திலிருந்த தவற்றினை குறிப்பிடுகின்ற நூற்றுக்கணக்கான (X) பெருக்கல் குறிகளுடன் கூடிய மிகவும் பிரபலமான தன்னுடைய ஓவியத்தை எடுத்துக்கொண்டு மிகவும் வருத்தத்துடன் தனது வீட்டிற்குதிரும்பிச் சென்றார். இந்த நிகழ்வுந்த ஓவிய மிகவும் பாதித்தது. அதனால் அதன்பின்னர் அவர் ஓவியம் வரைவதையே நிறுத்திவிட்டார், மேலும் அவர் பொதுமக்களைச் சந்திப்பதற்கும் மிகவும் வெட்கப்படத் தொடங்கி தன்னுடைய வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டார் இந்த சூழலில் ஒரு நாள், அவரது நண்பர் ஒருவர், அந்த ஓவியர்பொதுமக்களைச் சந்திக்காமலும் ஓவியம் எதுவும் வரையாமலும் ஏமாற்றத்துடன் வீட்டிலேயே முடங்கி இருக்கின்ற அவரதுசெயலிற்கான காரணத்தைக் கேட்டார். அவ்வோவியர் மிகுந்ததயக்கத்துடனும் மயக்கம்நிறைந்தமனதுடனும் தன்னுடைய ஓவியத்தின்மீது பொதுமக்கள் நூற்றுக்கணக்கான (X) பெருக்கல் குறிகள் இட்ட அன்றைய நிகழ்வினை தனது நண்பரிடம் கூறினார் அதனை தொடர்ந்து அவரது நண்பர். “இதை மீண்டும் ஒருமுறை செய்யலாமே. தே பரபரப்பான சாலைகள் சந்திக்கின்ற கூட்டுச்சாலை சதுக்கத்தில் அதேபோன்ற மிகவும்பிரபலமான வேறொரு ஓவியத்தை வைத்திடு.” எனக்கூறினார் . தன்னுடைய நண்பர் கோரியாறு மறுநாள் காலை அந்த ஓவியர் தே பரபரப்பான சாலைகள் சந்திக்கின்ற கூட்டுச்சாலை சதுக்கத்தில் அதேபோன்ற மிகவும் பிரபலமான வேறொரு ஓவியத்தை வைத்திட்டார். அதன்பிறகு, “இந்த ஓவியத்தில் யார் தவறு கண்டாலும், த்தவறின்மீது (X) எனும் பெருக்கல் குறி அடையாளத்தை இடுக” என்று மீண்டும் அதே வரியை எழுதத்துவங்கினார் ஓவியர். அப்போது அவருடைய நண்பர் குறுக்கிட்டு அவ்வாறு ஓவியர் எழுதுவதை தடுத்து நிறுத்தி . “இந்த ஓவியத்தில் யார் தவறு கண்டாலும் அந்த தவற்றினை திருத்திடுக. என்றவாறு குறிப்பனை அந்த ஓவியத்திற்கு அருகில் எழுதிடுமாறு கூறியதை ஏற்று அவ்வாறே அந்த ஓவியரும் குறிப்பினை நண்பர் கூறியவாறு எழுதினார் .அன்று மாலையில் நண்பர்கள் இருவரும் அந்த ஓவியத்தைப் காணச் சென்றபோது, என்ன ஆச்சரியம் ஓவியர் வைத்து சென்றிருந்த அந்த ஓவியம் காலையில் இருந்ததைப் போலவே மாறுதல்களோ குறியீடுகளோ எதுவும் இல்லாமல் இருப்பதை கண்டனர் . “அடடா நண்பா என்னுடைய ஓவியத்தில் எந்த மாற்றமும் இல்லையே தவறு எதுவுமே என்னுடைய ஓவியத்தில் இல்லையா என ஓவியர் தன்னுடைய நண்பரிடம் சந்தேகம் கேட்டபோது அவருடைய நண்பர் சிரித்துக்கொண்டே . “நண்பரே இந்த நிகழ்வில் இருந்து உனக்கு ஏதாவது புரிந்ததா? ரும் தவறுகளை செய்வது இயற்கையே ஆனால் பெரும்பாலானவர்கள் தாம்செய்யும் அவ்வாறான தம்முடைய தவறுகளை திருத்திகொள்பவர்கள் மிகக் குறைவு. ஆனால் மற்றவர்களின் தவறுகளை மட்டும்சுட்டிகாட்டி கேலி செய்ய அல்லது அவமானப்படுத்த விரும்புவோர்கள் ஏராளமாக உள்ளனர் அதனால் அவ்வாறானவர்களின் கருத்தை தேவையில்லாமல் எடுத்துக்கொள்வதால் நமக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் அவற்றை மேம்படுத்துவதற்கு அவர்களுக்கு நேரமும் அறிவும் இல்லை. அதனால்தான் முன்பு ஏராளமான பெருக்கல் குறிகளும் தற்போது ஒன்றுமே இல்லாமலும் உன்னுடைய ஓவியங்கள் உள்ளன. தவறு உன்னுடைய ஓவியத்தில் இல்லை, வ்வாறாவர்களிடம் ஆலோசனை கேட்பதில்தான் இருக்கிறது!" எனக்கூறினார் அதனை தொடரந்து ஓவியர் தனது நண்பரின் கருத்தைப் புரிந்துகொண்டார், இப்போது அவர் மீண்டும் தனக்குப் பிடித்த தன்னுடைய பணியான ஓவியங்கள் வரைவதைத் தொடங்கி தொடர்ந்து செய்தார்.

நீதி. நம்முடைய பணியின் மீது யாரிடமிருந்தோ அல்லது அனைவரிடமிருந்தோ பெறுகின்ற கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம். அவ்வாறான ஆலோசனை பெற வேண்டும் எனவிழைந்தால், அந்த துறையில் உள்ள நிபுணர்களிடமிருந்து மட்டும் ஆலோசனைகளை அல்லது கருத்துக்களைப் பெறுக. தவறு செய்வதை சுட்டிகாட்டுவதை மட்டும தவிர்ததிடு. அவ்வாறு செய்திடும் மற்றவர்களின் தவற்றைசரிசெய்து அவர்களின் வாழ்க்கையை நேர்மறையாக மாற்றுகின்ற மனிதனாக மாறிடுவது நல்லது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...