ஒரு
பெரிய மைதானத்திற்கு
அருகில் உணவகம்
ஒன்று
இருந்தது.
பலர்
உணவு
உண்பதற்காக
அந்த
உணவகத்திற்கு
வந்து
செல்வார்கள்.
ஒருமுறை
அங்கு செல்லும் வாடிக்கையாளர்
.
கூட்டம்
அதிகமாக இருந்தபோது அந்த
கூட்டத்தைப்
பயன்படுத்திக் கொண்டு
கூட்டத்தோடு சேர்ந்து ஒருவர்
உள்ளே வந்து தனக்கு
தேவையான உணவினை சாப்பிட்டதையும்:பின்னர்
அவர்
கூட்டத்தோடு
சேர்ந்து தான்
சாப்பிட்ட உணவிற்கு பணம்
கொடுக்காமல் வெளியே
சென்றுவிட்டதையும் அந்த
உணவகத்தின் வாடிக்கையாளர்
ஒருவர் கண்டுகொண்டார்.
அடுத்த
நாளும்
அதே
நபர் கூட்டத்தோடு
சேர்ந்து உணவகத்திற்குள்
உள்நுழைந்நது சாப்பிட்டுக்
கொண்டிருந்தபோது,,
அந்த
வாடிக்கையாளர் அந்த உணவுக
உரிமையாளரிடம் குறிப்பிட்ட
நபர் தினமும் கூட்டம்
அதிகமாக
இருக்கும்போது அந்த
உணவகத்திற்குள்
வந்து தனக்கு
தேவையானஉணவு
உண்டபின்னர் தான்
உண்டஉணவிற்காக
பணம் கொடுக்காமல் வழக்கமாக
வெளியே செல்லும்
அந்த
குறிப்பிட்ட நபர் தற்போது
சாப்பிட்டு கொண்டிருப்பதை
பற்றிய
விவரத்தை
இரகசியமாக
கூறினார்.
இவ்வாறு
குறிப்பிட்ட நபர் தினமும்
அந்த
உணவகத்திற்குள் நுழைந்து
உணவு
உண்டு பணம் கொடுக்கமால்
செல்கின்ற இரகசியத்தை
வாடிக்கையாளர் தன்னிடம்
கூறியதை
கேட்டதும்.
உணவுக
உரிமையாளர் சிரித்துக்கொண்டே
:
'அந்த
பிரச்சினையை பற்றி
பிறகு பேசுவோம்.
உங்களுக்கு
ஏதாவது குறை இருந்தால் கூறுங்கள்
தீர்வுசெய்கின்றேன் '
என
பதிலளித்தார்
அன்றும்
வழக்கம்
போன்று,
உணவு
உண்ட
பிறகு,
அந்த
குறிப்பிட்ட
மனிதர்
சுற்றுமுற்றும்
பார்த்து,
அந்த
உணவகத்தில் இருந்த அதிக
கூட்டத்தைப்
பயன்படுத்திக் கொண்டு;தான்
சாப்பிட்ட உணவிற்கு
பணம் கொடுக்காமல் அமைதியாக
வெளியே
நழுவி
சென்று
விட்டார்.
அவர்
சென்ற பிறகு;
அந்த
வாடிக்கையாளர்
அந்த உணவக
உரிமையாளரிடம்,
'இப்போது
சொல்லுங்கள் நான்
குறிப்பிட்டநபர் காட்டிகொடுத்தும்
நீங்கள் ஏன்
அந்த நபர் உணவு
உண்டபின் அதற்கான பணத்தினை
கொடுக்காமல் வெளியில்
சென்றபோது
அந்த
நபரை
தடுக்காமல்
வெளியில்
விட்டீர்கள்?'
என
வினவினார்
அதற்கு
உணவக உரிமையாளர்:
"ஐயா:
நீங்கள்
மட்டுமன்று;
இந்த
உணவகத்தின் வழக்கமான
வாடிக்கையாளர்கள் பலர்
அந்த
குறிப்பிட்டநபர்
பலநாட்களாக
பணம் கொடுக்காமல்
உணவுஉண்டு செல்வதைப்
பார்த்து அவரைப் பற்றி என்னிடம்
ஏற்கனவே
காட்டிகொடுத்துள்ளனர்.
இருந்த
போதிலும் அதனை நான்
கண்டு
கொள்வதில்லை அவர்
என் கடையின் முன் அமர்ந்து,
கொண்டு
கூட்டம்
அதிகமாக
இருப்பதைக்
கண்டு,அந்த
நேரத்தில்
அவர் இரகசியமாக
கூட்டத்தோடு
கூட்டமாக உள்ளே
வந்து தினமும்
சாப்பிடுகிறார்.
தினமும்
நான்
பார்ப்பேன்.
ஆனால்
அவரைப் அவரைத் தடுக்கவில்லை
;
அவரை
அவமதிக்க முயற்சிக்கவில்லை."என
பதிலளித்தார்
வாடிக்கையாளர்
குழப்பமடைந்து,
'ஏன்
அப்படி?
"என
வினவினார்
அதற்கு
உரிமையாளர் ,
' குறிப்பிட்டஅந்த
மனிதன் தினமும்
உணவகத்திற்கு முன்னால் உள்ள
மைதானத்தில் உட்கார்ந்து
கொண்டு என்னுடைய உணவகத்திற்கு
உணவு உண்பதற்காக ஏராளமான
வாடிக்கையாளர் வரவேண்டும்
என வேண்டிக்கொள்கின்றார்
ஏனென்றால்
இந்த கடையில் கூட்டமாக இருந்தால்
அவர் கூட்டத்தோடு
கூட்டமாக
உள்ளே வந்து சாப்பிடலாம்.
அல்லவா
அதன் பின்னர்
கூட்டம் சேர்ந்ததும் கூட்டத்தோடு
கூட்டமாக தானும் எனது
உணவகத்திற்குள் நுழைந்து
உணவினை உண்டு செல்கின்றார்
அவருடைய வேண்டுதலால்
தினமும்
எனது
உணவகத்தில்
கூட்டம் அதிகமாகஇருப்பதாக
நான் உணர்கிறேன்.
அவர்
உள்ளே வரும்போது நிச்சயமாக
கூட்டம் அதிகமாக
இருக்கும்.
அவருடைய
வேண்டுதலும்
பலிக்கின்றது
அதனால்
இடையில்
குறுக்கிட்டு துரதிர்ஷ்டத்தை
வரவழைக்க நான் விரும்பவில்லை.
நான்
அந்த
குறிப்பிட்ட நவர்
தினமும் என்னுடைய உணவகத்தில்
பணம் கொடுக்காமல் சாப்பிட்டு
செல்வதை நான் தடுக்கமாட்டேன்
,
அதற்காக
நான்அவரை
அவமானப்படுத்தவோ,
அவரிடம்
பணம்
கேட்கவோ மாட்டேன்."
என
மிக நீண்ட விளக்கமான பதிலை
அளித்தார்
என்ன வாசகரே நீங்களாவது குறிப்பிட்ட நபர் அந்த உணவகத்தில் உணவு உண்டுசெல்வதற்கான பணத்தினை கொடுத்து உதவுங்களேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக