ஞாயிறு, 16 ஜனவரி, 2022

பொறியாளரும் மேலாளரும்.

 


ஒருமுறை ஒரு மனிதன் காற்று அடைத்த பலூனில் வானத்தின் மிகஉயரத்தில் பறந்து கொண்டிருந்தார், நீண்ட நேரம் அவ்வாறு பறந்து கொண்டிருந்தபோது தான் வழிதவறி வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்தார். அதனால் தான் தற்போது பறந்து கொண்டிருக்கும் இடம் எது என அறிந்து கொள்வதற்காக யாரையாவது கண்டுபிடிக்க முடியுமா என்று தரையில் தேடிபார்ப்பதற்காதான் பறந்து கொண்டிருந்த தனது பலூனின் உயரத்தைக் குறைத்தார். கீழே தரையில் வெகுதூரத்தில் மனிதன் ஒருவன் நடந்து சென்று கொண்டி ருப்பதைக் கண்டு அந்த மனிதனுக்கு அருகில் பறந்து சென்றார்.
அந்த மனிதனுக்கு அருகில் சென்றதும் தனது பலூனை தரை மட்டத்திற்கு வெகுஅருகில் இறக்கி பறக்குமாறு செய்து
.அவரிடம் "வணக்கம் ஐயா, தயைவு செய்து எனக்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா? அரை மணி நேரத்திற்கு முன்பு நான் எனது நண்பருக்கு அவருடைய இடத்திற்கு வந்து சேர்வதாக உறுதியளித்திருந்தேன், ஆனால்எனது நண்பரின் இடத்திற்கு இதுவரையில் சென்று சேரவில்லை இப்போது நான் எங்கு இருக்கிறேன் என்றும் எனக்குத் தெரியவில்லை.-" எனக்ோரினார்
கீழே தரையில் நின்றவர்
" வணக்கம் ஐயா கண்டிப்பாக . உங்களுக்கு என்னால் உதவ முடியும். நீங்கள் தரையிலிருந்து சுமார் 30 அடி உயரத்தில் காற்றைடத்த பலூனில் இருப்பதை நான் காண்கிறேன். உங்களுடைய தற்போதைய நிலைப்பாடு சுமார் 40 டிகிரி அட்சரேகையும் 60 டிகிரி தீர்க்கரேகையுமாகும்." என பதிலளித்தார்,
உடன் உயரே பலூனில் இருந்த மனிதன் குறுக்கிட்டு ." மிகவும் நன்றி ஐயா நீங்கள் ஒரு பொறியளரா?" என கேள்வி கேட்டார் .அதற்கு தரையில் இருந்த மனிதன் , "ஆம். ஐயா நான் ஒரு பொறியர் தான் ஆனால் உங்களுக்கு எவ்வாறு நான் ஒரு பொறியாளர் என தெரிய வந்தது?" என்ற சந்தேக கேள்வியொன்றினையும் கேட்டார்
அதனைதொடர்ந்து உயரத்தில் பலூனில் இருந்தவர் முகத்தில் ஒரு புன்னகையுடன் , ".ஏனெனில் நீங்கள் சொன்ன பதிலுள்ள தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப ரீதியாக சரியானவை, ஆனால் அந்த தகவலை கொண்டு நான் என்ன செய்வது? நான் எவ்வாறு என்னுடைய நண்பரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து செல்வது அல்லது என்னுடைய இருப்பிடத்திற்கு திரும்பி செல்வது? என்பதுதான் தற்போது எனக்குத் தெரியவில்லை, ஏனெனில் நான் எவ்வாறு நான்செல்லும் வழியைக் கண்டுபிடிப்பது என்று எனக்குத் தெரியவில்லை?. மேலும் நான் இன்னும்வழி தெரியாமல் தடுமாறி கொண்டிருக்கின்றேன்." என ஒருநீண்ட பதிலை அளித்தார்
உடன் கீழே இருந்தவர், "நீங்கள் ஒரு நிறுவனத்தின் மேலாளராக இருக்க வேண்டும்.. சரிதானே" என்று சந்தேக பதிலை எழுப்பினார்.
தரையிலிருந்தவரின் இந்த சந்தேகத்தினை கேட்டதும் பலூனில் இருந்த மனிதன் மிகவும் ஆச்சரியப்பட்டு, "மிகவும் சரி ஐயா. நான் ஒரு நிறுவனத்தின் மேலாளரதான் ஆனால் நான் ஒரு நிறுவனத்தின் மேலாளர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?" என மிகவும் ஆச்சரியத்துடன் பதில் கேள்வி எழுப்பினார்
அதனை தொடர்ந்து தரையில் இருந்தவர் , " ஏனெனில் வழிதெரியாமல் திகைத்து நின்றுவிட்டீர்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எங்கு செல்கிறீர்கள் ஆகிய எந்தவொரு விவரமும் தற்போது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வாக்குறுதி அளித்தவாறு உங்களுடைய இலக்கினை வ்வாறுஅடைவது எனபதும் உங்களுக்குத் தெரியாது .
இப்போது உங்களுக்கு உதவி தேவைப்படும்போது உங்களுடைய பிரச்சனையை நான் தீர்வுசெய்துவிடுவேன் என நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்
. உண்மை என்னவென்றால், நீங்கள் வழிதெரியாமல் தொலைந்து போனீர்கள், நீங்கள் இன்னும் தடுமாறி கொண்டிருக் கின்றீர்கள்,ஆனால் வேறு யாரோ ஒருவர் (நான்தான்) உங்களுடைய இலக்கினை அடைவதை தடுக்கின்றனர் என தவறு கண்டுபிடித்து கொண்டிருக்கின்றீர்கள்" என மிகநீண்ட பதிலை அளித்தார்

என்ன வாசகரே நீங்களாவது உயரத்தில் காற்றடைத்த பலூனில் பறந்து கொண்டிருக்கின்ற நிறுவன மேலாளருக்கு அவருடைய இலக்கினை அடைவதற்கான சரியான வழியை காட்டி உதவுங்களேன்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...