சனி, 10 செப்டம்பர், 2022

கோபக்காரணின் செயலும் புத்தரின் போதனையும்

 பயணத்தின் போது புத்தர் ஒரு கிராமத்தை அடைந்தார். அங்கு அவரது சொற்பொழிவைக் கேட்க ஏராளமான அளவிலான மக்கள்  கூடினர். புத்தர் தன்னுடைய சொற்பொழிவில்,  "கோபம் என்பது நெருப்பு, அது மற்றவர்களை எரிப்பது மட்டுமல்லாமல், தன்னையும் எரித்து சாம்பலாக்கும். எனவே கோபத்தைத் துறந்து மன்னித்திடுக" என சகிப்புத்தன்மை  மன்னிப்பு ஆகியன பற்றி பொதுமக்களுக்கு அறிவுரை கூறிகொண்டிருந்தார்.
புத்தரின் சொற்பொழிவை கேட்க கூடியிருந்து பொதுமக்களில் அதிக கோபக்கார நபர் ஒருவரும் அமர்ந்து அந்த சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார். புத்தரின் இந்த சொற்களைக் கேட்டவுடன் கோபமாக அந்த  நபர் எழுந்து கரகரப்பான குரலில், “இப்படிப்பட்ட கபட பிச்சைக்காரனை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை. உன்னுடைய சுயநலத்திற்காக இந்த கிராமத்தில் தவறான செய்திகளை பரப்புகின்றாய். உனக்கு வெட்கமாக இல்லையா” என வினவினார்
புத்தர் இவ்வாறான சொற்களை கேட்டு ஒன்றும் பதிலளிக்காமல் முன்பு போலவே அமைதியாக இருந்தார். இதைப் பார்த்த அந்த கோபக்கார நபருக்கு கோபம் மிகவும் அதிகமாகி, புத்தரின் முகத்தில் “தூ”  எனஎச்சில் துப்பிவிட்டுச் சென்றுவிட்டார்,  புத்தர் அமைதியாக தனது சொற்பொழிவை முடித்து கொண்டு தன்னுடைய சீடர்களுடன் மற்றொரு கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
தன்னுடைய வீட்டிற்கு வந்த பிறகு, கோபமடைந்த அந்த நபர் புத்தரைப் பற்றி நீண்ட நேரம் நினைத்துக் கொண்டிருந்தார். கோபம் தணியத் தொடங்கியதும், புத்தரிடம் சொன்னதையும் செய்ததையும் நினைத்து வருந்தத் தொடங்கினார்
அதனால் உடனடியாக புத்தரை நேரில் சந்தித்திடஅவர் சொற்பொழிவு செய்து கொண்டிருந்த பகுதிக்கு விரைவாக சென்றார். ஆனால் அங்கு சென்றபோது புத்தர் அடுத்த கிராமத்திற்கு சென்றுவிட்ட செய்தி கிடைத்தது. அதனால் புத்தரை நேரில் சந்திக்க இயலாமல் தன்னுடைய வீட்டிற்கே திரும்புவந்து இரவு முழுவதும்  தன்னைத்தானே திட்டிக் கொண்டே இருந்தார். அடுத்த நாள், காலை புத்தரைத் தேடி பக்கத்து கிராமத்திற்குச் சென்றார்
அங்கு புத்தர் அந்த கிராம மக்களுக்கு சொற்பொழிவு செய்து கொண்டிருப்பதைக் கண்டார்., புத்தரிடம் சென்று, அழுதுகொண்டே அவரது கால்களைப் பிடித்து, அவரிடம் மன்னிப்பு கேட்கத் தொடங்கினார்
புத்தர் வியப்புடன் அந்த நபரைப் பார்த்து, ‘ ஐயா முதலில் நீங்கள் எழுந்திருங்கள் ,‘யார் நீங்கள்? ஏன் என்னிடம் மன்னிப்பு கோருகின்றீர்கள்? ." என வினவினார்
அதற்கு அந்த மனிதன், “உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? | நான் நேற்று உங்களிடம் மிககோபமாக பேசி நடந்து கொண்டவன். நான் செய்தது தவறு. | உங்களிடம் மன்னிப்பு கோர வந்தேன்". எனக்கூறினார்
புத்தர் நிதானமாக, “அண்ணா, நேற்று நீங்கள் பேசிக்கொண்டிருந்தது கடந்தகாலம்  | நேற்றைய அனைத்து சம்பவங்களும் செயல்களும் நம்மை விட்டு சென்றுவிட்டன. இப்போது நாம் இருப்பது நிகழ்காலம் .
நீங்கள் ஏன் நேற்றைய நிகழ்விலேயே நின்று கொண்டிருக்கின்றீர்கள்?  இப்போது அந்த செய்திகளையும் செயல்களையும் அங்கேயே விட்டுவிட்டு நிகழ்காலத்தில் வந்து நல்ல செயல்களைச் செய்து உங்கள் நிகழ்காலத்தை மேம்படுத்துங்கள். கடந்த காலத்தை நினைவுகூருவதன் மூலம் உங்கள் நிகழ்காலத்தை ஏன் அழிக்க வேண்டும்." என அறிவுரைக்கூறினார்
புத்தரின் அந்த சொற்களைக் கேட்டதும் அந்த மனிதனின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. அந்தநபர் புத்தரை வணங்கி, “இனிமேல் நான் கோபத்தைத் துறந்து அன்பையும் கருணையையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொள்வேன்,என்னுடைய வாழ்க்கையை சிறப்பாக ஆக்குவேன், ” என உறுதி கூறினார்.
 கற்றல் : நாம்  வாழ்க்கையில் செய்த தவறுகளை நம்முடைய மனதில் வைத்துக்கொண்டு, அந்த குற்றச் சுமையை வாழ்க்கை முழுவதும் சுமந்துகொண்டு, வருத்தத்தின் நெருப்பில் எரிந்துகொண்டே இருக்கிறோம். ஏற்கனவே ஏற்பட்ட பிழையை சரிசெய்ய முடியாது.
எனவே, அதை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது என்ற உறுதியுடன் நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கடந்து போனவற்றின் மீது நமக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நிகழ்காலம் நமது கட்டுப்பாட்டில் உள்ளது.
நல்ல செயல்களைச் செய்வதன் மூலம்  நிகழ்காலத்தை ஏன் சிறப்பாக மாற்றக்கூடாது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...