திங்கள், 5 செப்டம்பர், 2022

காய்கறி விற்பனையாளருக்கு உதவுதல்

ஒரு சிறுவன் தன்னுடைய தாய் தினமும் வழக்கமாக தங்களுடைய வீட்டின் வாயிலிற்கு  வருகின்ற காய்கறி விற்பணை செய்திடும் பெண்ணிடம் காய்கறிகள் வாங்குவதைப் பார்த்துக் கொண்டிருப்பான் ,
 ஒரு குறிப்பிட்ட நாள், அந்த காய்கறி விற்கும் பெண் கீரை கட்டுகளை கூடையில் கொண்டு வந்து அவர்களுடைய வீட்டின் வாயிலில் இறக்கி வைத்தார், அந்த கீரைக்கட்டுகளின் விலை என்ன வென்று அந்த சிறவனின் தாய் வினவியபோது கீரை கட்டு ஒன்றின் விலை 6 ரூபாய் எனக்கூறினார். உடன் சிறுவனின்  தாய் அ்நத விலையில் பாதிவிலைதான் தரமுடியும் என பேரம்பேசுவதை அந்த சிறுவன் கண்டான். மேலும் சிறுவனின் தாய் தான் கோரிய விலையில் கீரைகட்டுகளை கொடுப்பதாக இருந்தால் 4 கட்டுகளை வாங்கி கொள்வதாக கூறினார்.
சிறிது நேரம் இருவரும் கீரைகட்டின் விலையைப் பற்றி விவாதித்தனர்.கடைசியாக காய்கறி விற்பனையாளர் அந்த சிறுவனின் தாய் கோரும் விலையில் விற்க முடியாது என்று பணிவுடன் மறுத்துவிட்டார், ஏனெனில் அதை வாங்குவதற்கான செலவைக் கூட  ஈடுசெய்ய முடியாது எனக்கூறி. கீரைக் கூடையை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
அந்த காய்கறி விற்பணை செய்யும் பெண் சிலஅடிகள் நடந்த பிறகு,  திரும்பி வந்து அந்த சிறுவனின் தாயிடம், “கீரைகட்டு ஒன்று 4.50 ரூபாய் என்ற விலையில் தருகிறேன்” என்றாள்.
சிறுவனின் தாய் அந்த விலையை ஏற்க மறுப்பதாக தன் தலையை ஆட்டினார். இதை பார்த்த காய்கறி விற்பணைசெய்திடும் பெண்  திரும்பிநடந்து சென்றார்.
சிறிது நேரம் கழித்து, அந்த காய்கறி விற்கும் பெண் மீண்டும் திரும்பி வந்தார், கடைசியாக அந்த சிறுவனின் தாய் கூறிய விலைக்கே 4 கட்டுகீரைகளை  தருவதாக ஒப்புக்கொண்டு கீரைக்கூடையை தரையில் இறக்கி வைத்தார்.  சிறுவனின் தாய்  கூடையிலிருந்த கீரைகட்டுகளில்  ஒவ்வொரு கட்டாக எடுத்து சரிபார்த்து,  4 கீரைகட்டுகளைத் திருப்தியாக தேர்ந்தெடுத்தார்.
காய்கறி விற்பவருக்கு தேவையான  பணமும்  கொடுத்தார். காய்கறி விற்பனையாளர் சிறுவனின் தாய் கொடுத்த பணத்தை எண்ணிக்கூட பார்க்காமல் தன்னுடைய சுருக்குபையில் வைத்துக்கொண்டு கிளம்புவதற்காக எழுந்தார். உடன் சிறுவனின் தாய் அந்த காய்கறி விற்பவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, காலையில் உணவு சாப்பிட்டாயா என்று கேட்டார், அதனை தொடர்ந்து காய்கறி விற்பவர், "இன்றைய சம்பாத்தியத்தில், வீட்டிற்குச் செல்லும் வழியில் கொஞ்சம் அரிசி வாங்கி கொண்டு சென்ற கஞ்சி காய்ச்சிதான் சாப்பிடவேண்டும்" என்று பதிலளித்தார். இதைக் கேட்ட சிறுவனின் தாய் அந்த காய்கறி விற்பணை செய்திடும் பெண்ணை உட்காரச் சொல்லிவிட்டு, அவசரமாக உள்ளே சென்று தேவையான உணவும் தண்ணீரும்  கொண்டுவந்து கொடுத்து அந்த உணவினை உண்டு செல்லுமாறு கோரினார்.
காய்கறி விற்பனையாளர் நன்றியுடன்  சிறுவனின் தாய் கொண்டுவந்து கொடுத்த உணவினை உண்டு தண்ணீர் குடித்தார். மேலும் சிறுவனின் தாய் அந்த காய்கறி விற்பணை செய்திடும் பெண்ணிற்கு  தேநீர்  தயார் செய்து  கொடுத்தார் காய்கறி விற்பணை செய்திடும் பெண் அந்த தேநீரைக் குடித்துவிட்டு, சிறுவனின் தாயாருக்கு நன்றி  கூறினார் பின்னர்  எழுந்து, தலையில் கீரைகட்டுகளின் கூடையை தூக்கி வைத்து கொண்டு,  நடக்கஆரம்பித்தார், சிறுவன் இதையெல்லாம் பார்த்துக் குழப்பமடைந்தான். அவன் தன்னுடைய தாயிடம் சென்று , " அம்மா முன்பு இரக்கமில்லாமல் ஒரு ரூபாய்க்கு கூட கூடுதலாக தரமுடியாது என  விலையை குறைத்து கீரைகட்டுகளை வாங்கினாய் , ஆனால் இப்போது அந்த கீரை விற்பணை செய்திடும் பெண்ணிற்கு  உணவை வழங்கினாயே.. ஏன் ?" என வினவினான்
அதற்கு அந்த சிறுவனின் தாய் சிரித்துக்கொண்டே , “என் அன்பான குழந்தையே, நான் கீரைகட்டுகளை வாங்கும் போது, வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையே ஒரு வர்த்தகம் இருந்தது அதனால் கீரைகட்டின் விலையை குறைத்து வாங்கினேன், ஆனால் அந்த காய்கறி விற்ற பெண் உடல்நிலை சரியில்லாததால்  நான் உணவும் தேநீரும் வழங்கினேன்.
ஏனெனில் வர்த்தகத்தில் இரக்கம் இல்லை, இரக்கத்தில் ஒருபோதும் வர்த்தகம் இருக்காது”. என நீண்ட விளக்கமளித்தார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...