முன்னொரு காலத்தில் ஒருஅரசனுக்கு உதவியாளர் ஒருவர் தேவைப் பட்டார். , அதனால் அவரது அமைச்சர் தகுதியான ஒருநபரை தேடிபிடித்து அவ்வரசனின் உதவியாளராக பணியமர்த்தினார். அதனை தொடர்ந்து அந்த நபர் அரசனின் உதவியாளராக பணி செய்யத் தொடங்கினார், பின்னர் அவ்வரசன் அமைச்சரிடம் , "இந்த உதவியாளரின் பணி நன்றாக இருந்தாலும் அந்த நபருடைய தோற்றம் நன்றாக இல்லையே." என குறைகூறினார்.
அமைச்சர் அரசனின் சொற்களை விசித்திரமாக உணர்ந்தார், ஆனால் அமைதியாக இருந்தார். அது ஒரு கோடைக்காலம், அரசன் தன் உதவியாளரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருமாறு கோரினார். அப்போது அமைச்சரும் அரசனுடன் இருந்தார். அந்தஉதவியாளர் அரசனின் அரண்மனைக்குள் சென்று தங்கப் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துகொண்டு திரும்பி வந்தது அரசனிடம் கொடுத்தார் . அரசன் அந்த தங்கபாத்திரத்தின் தண்ணீரைக் குடித்தபோது,சிறிது சூடாக இருந்தது. அதனால் அவ்வரசன் உடனே வாயிலிருந்த தண்ணீரைத் கீழே தரையில் துப்பிவிட்டு, “இப்படிப்பட்ட வெந்நீரை.. அதுவும் இந்த வெயிலில் குடிப்பதற்கு கொண்டுவருகின்றாயே நீயெல்லாம் ஒரு உதவியாளரா” எனத்திட்டினார்.
உடனிருந்த அமைச்சர் அந்த உதவியாளரிடம் , ஒரு மண் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வருமாறு உத்திரிவிட்டார், உடன் அந்த உதவியாளரும் மண்பாத்திரத்தில் தண்ணீரை அரசனுக்கு கொண்டுவந்த கொடுத்தவுடன் அந்த மண் பாத்திரத்தின் தண்ணீரை குடித்த அரசன் மிக திருப்தி அடைந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர், “அரசே, அவர் முன்பு தங்கப் பாத்திரத்தில் தண்ணீரை கொண்டுவந்தார் அந்த பாத்திரம் மிக விலைமதிப்பற்றதாகவும் அழகாகவும் இருந்தது, ஆனால் அதிலிருந்த தண்ணீருக்கு குளிர்ச்சியை அளிக்கும் தன்மை அந்த பாத்திரத்திற்கு இல்லாததாக இருந்தது, அதன்பிறகு அடுத்தமுறை, அதே உதவியாளர் எளிமையான ஒரு மண் பாத்திரத்தில் தண்ணீரை கொண்டுவந்தார் அதில் கொண்டுந்த தண்ணீர் கோடைகாலத்திற்கு பொருத்தமான குளிர்ந்த தண்ணீராக இருந்தது.
எனவே, ஒரு நபரின் நற்பண்புகளை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும், அவருடைய தோற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவது தவறு" என மிக நீண்ட விளக்கமளித்தார் .உடன் அமைச்சரின் சொற்களுக்கான பொருள் என்ன என்பதை அரசர் உணர்ந்தார், அன்றிலிருந்து மன்னரின் அணுகுமுறை மாறியது:
கற்றல்
பலர் வெளியில் அழகாக இருந்தாலும் செயலில் மோசமாக இருப்பார்கள். வெளியில் அழகாக இல்லாதவர்கள் இருந்தாலும், அவர்களின் உணர்வுகளின் தூய்மை செயல்களில் இருக்கும், அவர்களின் ஆளுமை காந்தமாகமற்றவர்களை கவர்ந்திழுக்கின்றது. அழகான தோற்றத்தையும் நல்ல செயலையும் ஒப்பீடு செய்யமுடியாது.
ஒரு மனிதன் நல்லொழுக்கங்களால் மட்டுமே முழுமை பெறுகிறான், அவனுடைய தோற்றத்தால் அன்று. ஒருமனிதனின் செயலின் அழகு மனதின் தூய்மையிலிருந்து வெளிப்படுகிறது, ஏனெனில் அழகு என்பது ஒருவரின் தோற்றத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, அவரின் செயலும் சேர்ந்ததேயாகும் .
சனி, 27 ஆகஸ்ட், 2022
பணியாளரின் தோற்றத்துடன் அவரின் செயலைஒப்பிடமுடியாது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக