ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

சந்தைப்படுத்தலின் யுக்தி மூலம் மண்ணையும் கற்களையும் கூடவிற்க முடியும்

 ஒருவரால்  கல்லையும்மண்ணையும்  கூட மற்றவர்களுக்கு எவ்வாறு விற்க முடியும் என்ற இந்த  செய்தியை கண்டு வாசகர்கள் ஆச்சரியப்படலாம்.
குறிப்பு: இந்த கட்டுரை வீடுகளை கட்டி விற்பனைசெய்வதை பற்றி விளக்கம் அன்று என்ற செய்தியை மனதில் கொண்டு தொடர்ந்திடுக
 இந்த சொல் விசித்திரமாக இருக்கிறதா? வர்த்தகப் பின்னணியில் இருந்து வருபவரகளின் 'சந்தைபடுத்துதல்' என்பது நாம் பொதுவாக அன்றாடம் காதால் கேட்கும் சொல்லாகும். இன்றைய நவீண காலச்சூழலில் சரியான சந்தைபடுத்திடும் யுக்தி மூலம் கல் மண்  காற்று ஆகிய எதையும் விற்க முடியும் என்பதே உண்மையான நிலவரமாகும். முதலில், சந்தைப்படுத்தல் என்றால் என்ன? என்ற கேள்விக்கான பதிலை அறிந்து கொள்வோம் .சந்தைப்படுத்தல் என்பது சந்தை வாய்ப்புகளை பகுப்பாய்வு செய்வது, இலக்கு சந்தைகளைத் தேர்ந்தெடுப்பது,  இவை யனைத்தையும் கலந்து உருவாக்குதலே சந்தைப்படுத்தல் ஆகும் . சந்தை படுத்திடும் முயற்சியை நிர்வகித்தல்.என்பதுதான் ஒவ்வொரு மாணவரும் தங்கள் வணிக பயன்பாட்டில் படிக்க வேண்டிய முக்கிய வரையறையாகும். ஆனால் உண்மையில் இதற்கான விளக்கம் புத்தகங்களில் விளக்கமளிக்கப் பட்டுள்ளதை விட மிகப்பெரியது என்ற செய்தியை மனதில் கொள்க.பொதுவாக சந்தைப் படுத்துதலானது இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டுள்ளது
1. வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை வழங்குதல் சந்தைப்படுத்தலால் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த மதிப்பை உருவாக்க முடியாது. இதை நிறை வேற்ற மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வாடிக்கை யாளர்களை மையமாகக் கொண்டு அனைத்து துறைகளும் சவால்களை வெற்றி கொள்வதற்கான வழிகளைக் சந்தையாளர்கள் கண்டறியவேண்டும். வாடிக்கை யாளர்களே சந்தையின் அரசர்கள்ஆவார்கள் என்ற கருத்தினை மனதில் கொள்க
2. வாடிக்கையாளர்களுடன் இணைதல் இன்றைய போட்டி நிறைந்தச் சந்தையில் வெற்றிபெற, நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். அவர்கள் போட்டியாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்களை வென்றெடுக்க வேண்டும் அதிக மதிப்பை வழங்குவதன் மூலம் தக்கவைத்து கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட சந்தையில் அனைத்து வாடிக்கை யாளர்களையும் திருப்திப்படுத்த முடியாது என்பதால்,  மொத்த சந்தையைப் பாகுபடுத்தி பிரித்து, தங்கள் இலக்கு சந்தையைத் தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப் பட்ட சந்தைக்கான உத்திகளை வடிவமைக்க வேண்டும். சந்தையில் தங்கள் நிலைப்பாட்டை உருவாக்க சிறந்த சந்தைப்படுத்தல் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களில் இருந்து எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.
 Amul ஒரு சிறந்த உதாரணமாகும்,  தேசிய அல்லது உலகளாவிய பிரச்சினையாக இருந்தாலும், அவர்கள் எப்போதும் சந்தைபோக்குகளைப் பின்பற்றுகிறார்கள். அமுலில் புகழ்பெற்ற நீல நிற ஹேர்டு , போல்கா உடையணிந்த பெண் இந்தியாவின் சமூக, அரசியல் ,கலாச்சார நிகழ்வுகளை பல்வேறு கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் பிரதிபலிக்கின்றார்.
ZOMATOவும் அந்த வரிசையில் உள்ளது. இது எப்போதும் நவநாகரீகமான தலைப்புகள் , மீம்களை தேர்ந்தெடுத்து நம்முடைய கைபேசிகளில் தொடர்புடைய அறிவிப்புகளுடன் வருகிறது.  உணவுப் பிரியராக இருந்தால், Zomatoவின் சந்தைப்படுத்தல் உத்தியை  நன்றாகப் புரிந்து கொள்ளலாம்
PARLE-G நமது குழந்தைப் பருவத்திலிருந்தே அறியப்பட்டஇது வணிகமுத்திரை விழிப்புணர்விற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வழிகளையும் கொண்டுள்ளது.
 BEWAKOOF.COM, வாடிக்கையாளர்கள் மறக்க முடியாத வணிகமுத்திரையின் பெயர். அவை பெரும்பாலும் மீம்ஸ் , நாகரிகம் பற்றிய பேச்சுக்களை உள்ளடக்கியதாகும்.
  சரியான தயாரிப்புகள், சிறந்த சந்தைபடுத்துல் உத்தி மூலம்,   சந்தையில் இடம் பெறலாம். வேறு ஏதேனும் காரணிகள் உள்ளன, ஆனால் இவை முக்கிய காரணிகளாகும். நவீனசந்தைபடுததுதல் நுட்பங்களைத் தவிர, இன்னும் சில பாரம்பரிய நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. சமூக சந்தைப்படுத்தல், இதில் மரம் வளர்ப்பு, அனைவருக்கும் கல்வி போன்ற இலக்குடன்  , ஏதேனும் பாதிப்பு, அல்லது நடைமுறைசிக்கல்களுக்கான சமூக ஆலோசனைகள் ஆகியவற்றின் ஏற்றுக்கொள்ளும் தன்மையை அதிகரிக்க விரும்பும் திட்டங்களை செயல்படுத்துதல், கட்டுப்படுத்துதல் கொணேடுள்ளது. இந்த கருத்தமைவு நிறுவனத்தின் கீழ் வேறுபட்ட சந்தைப்படுத்தல் பல சந்தைப் பிரிவுகளை குறிவைத்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தயாரிப்புகளை வடிவமைக்க முடிவு செய்கிறது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் இதற்கு முன்னணி உதாரணங்களில் ஒன்றாகும், இதில் லைஃப்பாய், லக்ஸ் ஆகியன பிரபலமானவை , பிரீமியம் பிரிவில் டவ், பியர்ல் ஆகியவை உள்ளன. ஒரு பொருளின் தேவை பருவகாலத்தின் காரணமாக ஒழுங்கற்றதாக இருக்கும் போது, அல்லது சில வெளிப்புற காரணிகள் காரணமாக நிறுவனங்கள் நெகிழ்வான விலை , பிற சலுகைகள் மூலம் தேவைகளை மாற்றுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.
   படைப்பாற்றலின் கலவையான  சந்தைபடுத்துதலை உண்மையில்அதிகரிக்க முடியும். பிரபலங்கள், ஊடக விளம்பரங்களும் விளம்பரத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் தற்போது சமூக ஊடகங்கள், மீம்ஸ் , நகைச்சுவை ஆகியவை அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கின்றன என்பதே உண்மையான களநிலவரமாகும் என்ற செய்தியை மனதில் கொள்க.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...