ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

RBI இன் எண்ணிம நாணயத்தினை பற்றிய கட்டுக்கதைகளும் &உண்மையும்

 2022-23 மத்திய பட்ஜெட்டின் ஒரு பகுதியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் முன்வைத்த அனைத்து திட்டங்களிலும்,எண்ணிம நாணயத்தினை (Digital Currency(DC)) அறிமுகப்படுத்துவது என்பது குறித்த அறிவிப்பு கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களின் வாழ்க்கையையும் தொடும் திறன் கொண்டது. எண்ணிம நாணயம் பற்றி நீண்ட காலமாக ஊகங்கள் இருந்தபோதிலும், அதன் வரையறை பற்றி இதுவரையில் யாருக்கும் தெரியாமலேயே இருந்துவந்தது. நிதியமைச்சர் தனது உரையில், எண்ணிம நாணயம் அல்லது மத்திய வங்கியின் எண்ணிம நாணயம் (CBDC),ஆனது மறையாக்க நாணயம் (bitcoin) , பிற பிரபலமான மறையாக்க நாணயம் ஆகியவைகளுக்குப் பின்புலத்தில் உள்ள எண்ணிம கட்டமைப்பிற்கு இணையான சமீபத்திய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது என்று மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமர்ப்பிக்கும்போது, இந்திய மத்திய வங்கி (RBI ) தனது எண்ணிம நாணயத்தை விரைவில் வெளியிடும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மத்திய வங்கியின் எண்ணிம நாணயத்தினை (CBDC), RBI இன் எண்ணிம நாணயமாக 2023 இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. "மத்திய வங்கியின் எண்ணிம நாணயத்தின் அறிமுகமானது எண்ணிம பொருளாதா ரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். எண்ணிம நாணயம் மிகவும் திறமையான , மலிவான நாணயத்திற்கு வழிவகுக்கின்ற. மேலாண்மை அமைப்பாகும்" என்று சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறினார். மறையாக்க நாணயம் எண்ணிம நாணயம் ஆகிய இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா என்றும் .அவை  வெவ்வேறு எனில்; அவ்விரண்டிற்கும் இடையிலான  வேறுபாடு என்ன? ;அவை நமக்கு தேவையா? என்பன போன்று  பலர் குழப்ப மடைகின்றனர். மேலும் அதைச் பற்றிய கட்டுக்கதைகளும் நம்மிடைய ஏராளமாக வலம் வருகின்றன அதைபற்றிய உண்மைகள் என்ன? அவற்றை சுருக்கமாக இங்கு விவாதிப்போம்.
மத்திய வங்கியின் எண்ணிம நாணயம் (CBDC) என்றால் என்ன?
மத்திய வங்கியின் எண்ணிம நாணயம் (CBDC) என்பது இந்திய அரசின் மத்திய வங்கியால் வழங்கப்படுகின்ற சட்டப்பூர்வ நாணயத்தின் எண்ணிம வடிவமாகும். இது ஃபியட் நாணயத்திற்குச் சமமானது இதனை நம்முடைய வழக்கமான பணப்பரிமாற்றத்தினை போன்றே ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளலாம் ஆனால் தொட்டுணரக்கூடிய வடிவத்தில் அன்று அதற்குபதிலாக  மின்னணு வடிவத்தில். ஒரு இறையாண்மைமிக்க நாணயமானது ஒருநாட்டின் மத்திய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில் ஒரு பொறுப்பாக (புழக்கத்தில் உள்ள நாணயம்) தோன்றும். மேலும் இந்த CBDC நாணயங்களை தொட்டுணரக்கூடிய பணமாக மாற்றுவது சாத்தியமாக இருக்க வேண்டும்.
 மின்னணு நாணயத்தின் பயன்பாட்டை பிரபலப்படுத்துதல் மறையாக்க நாணயங்கள் போன்ற தனியார் எண்ணிம சொத்துக்கள் தோன்றுவதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உலகெங்கிலும் உள்ள நாடுகளின் மத்திய வங்கிகள் எண்ணிம நாணயங்களை ஊக்குவிக்கின்றன.
DeFi அல்லது பரவலாக்கப்பட்ட நிதி அனுமதிசீட்டுகளான பிற மறையாக்க நாணயங்களைப் போலல்லாமல், மற்ற எல்லா ஃபியட் நாணயங்களையும் போன்றே CBDC களும் மத்திய வங்கியின் கையிருப்புக்களால் ஆதரிக்கப்படும். எண்ணிம நாணயம் என்பது இந்திய அரசின் மத்திய வங்கியின் (RBI) ஆதரவுடன் ஒரு நணயத்தின் எண்ணிம பிரதிநிதித்துவமாக இருக்கும்.
CBDC , Crypto ஆகிய இரு நாணயங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு


மத்திய வங்கியின் எண்ணிம நாணயம் (CBDC)

.மறையாக்க(Crypto) நாணயம்

தொடர்பு இல்லாத பரிமாற்றங்களில் பயன்படுத்தப்படுகின்ற ஃபியட் நாணயத்தின் மின்னணு வடிவமே எண்ணிம நாணயமாகும் .

.Crypto நாணயம் என்பது மறையாக்கத்தால் பாதுகாக்கப்படுகின்ற மதிப்பின் சேமிப்பாகும்.

ஒரு மத்திய அமைப்பு எண்ணிம நாணயத்தை (இந்தியாவிற்கான RBI) மேற்பார்வை செய்கிறது.

.Crypto நாணயம் கட்டுப்பாடற்றது பரவலாக்கப்பட்டது.

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணிம நாணயங்களின் மதிப்பு நிலையானது.

.மறையாக்கநாணயங்களின் மதிப்பு மிகவும் மாறக்கூடிய, மேலும் பொதுவாக இவைஇன்னும் மத்திய வங்கிகளின் எண்ணிம நாணயங்களால் அங்கீகரிக்கப் படவில்லை.

அனுப்புபவர், பெறுபவர் மத்திய வங்கி ஆகியமூன்று நபர்களுக்கு மட்டுமே எண்ணிம நாணய பரிமாற்ற விவரங்கள் தெரியும்.

பரவலாக்கப்பட்ட பேரேட்டில், மறையாக்கநாணய பரிமாற்றங்கள் அனைவருக்கும் தெரியுமாறு பகிரங்கமாக அறிவிக்கப்படுகின்றன.

எண்ணிம பணப்பைகள், வங்கி பயன்பாடுகள், கடனட்டைகள் பற்றட்டைகளைப் பாதுகாக்க வலுவான கடவுச்சொற்கள் தேவை.

மறைகுறியாக்கம் ஆனது மறையாக்க நாணயங்களைப் பாதுகாக்கிறது.


 நம்முடைய சொந்த CBDC ஐ உருவாக்குவதன்மூலம், மற்றஎந்தவொரு தனியார் மெய்நிகர் நாணயங்களும்(Veirtual Currency(VC)) வழங்கக்கூடிய பயன்பாடுகளை பொதுமக்களுக்கு வழங்க முடியும்  அந்த அளவிற்கு நாணயத்திற்கான பொது வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ளலாம். இதன் வாயிலாக மெய்நிகர் நாணயங்களின் (VC)சில  அசாதாரண நிலையிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முடியும்
CBDC இன் அவசிய தேவை(need) என்ன?
 CBDC கள் மீதான ஆர்வம் இப்போது உலகளாவிய அளவில் உள்ளது என்றாலும், மிகச் சில நாடுகள் மட்டுமே தங்களுடைய  CBDC ஐ தொடங்குவதற்கான முன்னோடியான நிலையை எட்டியுள்ளன. மத்திய வங்கிகளின் 2021 ஆண்டின்BIS கணக்கெடுப்பில், 86% ஆனவர் CBDC இக்கான சாத்தியக்கூறுகளை தீவிரமாக ஆய்வுசெய்துவருகின்றனர், 60% பேர் தொழில்நுட்பத்தைப் பரிசோதித்து வருகின்றனர், 14% பேர் முன்னோடித் திட்டங்களைப் பயன்படுத்திவருகின்றனர் என்று தெரியவருகின்றது.
ஏன் இந்த திடீர் ஆர்வம்?
பின்வரும் காரணங்களுக்காக CBDC ஏற்றுக்கொள்ளப்படுகின்றது:-
(i) காகித நாணயத்தின் பயன்பாடு குறைந்து வருவதை எதிர்கொள்ளும் மத்திய வங்கிகள், நாணயத்தின் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு வடிவத்தை பிரபலப்படுத்த முயல்கின்றன;
(ii) வெளியீட்டை மிகவும் திறம்படச் செய்ய விரும்பும் குறிப்பிடத்தக்க  ரொக்கப் பயன்பாட்டைக் கொண்ட அதிகார வரம்புகளை தக்கவைத்துக்கொள்ள விரும்புகின்றன;
(iii) தனியார் மெய்நிகர் நாணயங்களின் அதிகரித்து வரும் பயன்பாட்டில் வெளிப்படும் எண்ணிம நாணயங்களுக்கான பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய வங்கிகள் முயல்கின்றன.
   CBDC ஆனது மற்ற எண்ணிம கட்டண முறைகளை விட சில தெளிவான நன்மைகளைக் கொண்டுள்ளன - CBDC ஐப் பயன்படுத்தி பணம் செலுத்துவது இறுதியானது, இதனால் நிதி அமைப்பில் தீர்வு அபாயத்தைக் குறைக்கிறது.
   வங்கி நிலுவைகளுக்குப் பதிலாக CBDC பரிமாற்றங்கள் செய்யப்படும் ஒரு UPI அமைப்பை கற்பனை செய்து பார்த்திடுக, பணத்தை ஒப்படைப்பது போன்ற - வங்கிகளுக்கு இடையேயான தீர்வுக்கான தேவை மறைந்துவிடும். CBDCஇன், கட்டண முறைகளின் நிகழ்நேர  செலவு குறைந்த உலகமயமாக்கலையும் சாத்தியமாக்கக்கூடும். ஒரு இந்திய இறக்குமதியாளர் தனது அமெரிக்க ஏற்றுமதியாளருக்கு நிகழ்நேர அடிப்படையில் எண்ணிம டாலர்களில் இடைத்தரகர் தேவையில்லாமல் பணம் செலுத்துவது சிந்திக்கத்தக்கது. இந்த பரிமாற்றம் இறுதியானது, இது ரொக்கமாக டாலர்களை ஒப்படைப்பது போன்று இருக்கும், மேலும் அமெரிக்க ஒன்றியவங்கி அமைப்பு இந்த தீர்விற்காக திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாணய தீர்வுகளில் நேர மண்டல வேறுபாடு இனி முக்கியமில்லை - '(Settlement)' ஆபத்து இருக்காது.
இந்தியாவில் CBDC தேவையா?
 எண்ணிம வழங்குதலின்(Payment)  கண்டுபிடிப்புகளில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. அதன் கட்டண முறைகள் எப்போதும் எந்தநேரத்திலும் (24X7) கிடைக்கின்றன, சில்லறை விற்பணையாளர், மொத்தவிற்பணையாளர்  ஆகிய வாடிக்கையாளர்களுக்கு எளிதாகக் கிடைக்கும், அவை பெரும்பாலும் நிகழ்நேரத்தில் உள்ளன, பரிமாற்றங்களுக்கான செலவு உலகிலேயே மிகக் குறைவாக இருக்கலாம், பயனாளர்கள் பரிமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகளின் ஈர்க்கக்கூடிய பட்டியலைக் கொண்டுள்ளனர் , எண்ணிம கொடுப்பனவுகள் வளர்ந்துவருகின்றன. ஈர்க்கக்கூடிய CAGR ஆனது 55% (கடந்த ஐந்து ஆண்டுகளில்). ஒரு ரொக்க பணபரிமாற்றத்திற்கு அனுமதிக்கும் UPI போன்ற மற்றொரு கட்டண முறையைக் கண்டுபிடிப்பது கடினம்.
குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய வங்கியின் CBDC இன் மற்றொரு நன்மை என்னவென்றால், CBDC அறிமுகத்தின் மூலம் பணப் பயன்பாடு குறைக்கப்பட்டால், இந்தியாவின் உயர் நாணயமும் GDP விகிதமும் குறைக்கப்படலாம். UPI மூலம் எண்ணிம வழங்குதல்களில்(Payment)  இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டாலும், பணத்தின் குறிப்பிடத்தக்க இடமாற்றம் இன்னும் ஒரு சவாலாக உள்ளது.
 டிசம்பர் 2018 , ஜனவரி 2019 க்கு இடையில் ஆறு நகரங்களில் உள்ள தனிநபர்களின் சில்லறைப் பணம் செலுத்தும் பழக்கம் குறித்து இந்திய மத்திய வங்கி நடத்திய ஒரு முன்னோடி கணக்கெடுப்பு, ஏப்ரல், 2021 இல் வெளியிடப் பட்டமத்திய வங்கியின் அறிவிக்கையில் ரொக்க பண வாய்ப்பின் வழி முறையில் பணம் செலுத்துவதைக் குறிக்கிறது.  வழக்கமான செலவு களுக்கு பணம் பெறுவதற்காக. சிறிய மதிப்புள்ள பரிமாற்றங்களுக்கு (₹500 வரையிலான தொகையுடன்) ரொக்கம் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
பணத்திற்கான வாய்ப்பு எண்ணிம முறையில் பணம் செலுத்துவதற்கான அசௌகரியத்தை பிரதிபலிக்கும் அளவிற்கு, CBDC அத்தகைய பணப் பயன்பாட்டை மாற்ற வாய்ப்பில்லை.ஆனால்,பெயர் குறிப்பிடாமல் அனாம தேயமாக இருப்பதற்கான பணத்திற்கான வாய்ப்பாகும், உதாரணமாக, பெயர் தெரியாதது உறுதிசெய்யப்படும் வரை, CBDCஐ ஏற்றுக்கொள்வதற்குத் திருப்பிவிடலாம்.
புதிய CBDC யின் ஒரு பகுதியாக இந்த அம்சத்தை அச்சுறுத்தாத வகையில் நிவர்த்தி செய்வது, பணத்தால் இயக்கப்படும் மீச்சிறு-பொருளாதாரங்களில் வெகுஜன தத்தெடுப்பை ஊக்குவிக்கும், இது மொத்த நாணயத்திற்கான ஒட்டுமொத்த தேவையை குறைக்கும். இது கணிசமான, நேர்மறையாக தொட்டுணரக்கூடிய நாணயத்தை அச்சிடுதல், கொண்டு செல்லுதல், சேமித்தல் , விநியோகத்தல் ஆகிய பணிகளை செய்வதற்கான பெரும் செலவினங்களை தவிர்க்கலாம், இந்த CBDC யை பிரதான நீரோட்டத்தில் ஏற்றுக்கொள்வது இந்தியாவை எண்ணிம அதிகாரம் பெற்ற நாடாக மாற்றுவதற்கும், தொட்டணரக் கூடிய ரொக்க பணமில்லா பொருளாதாரத்தை அடைவதற்கான அரசின் பார்வையை அடைவதற்கும் ஒரு மாபெரும்செயலின் முதல்படியாகும். . இது ஒரு பயன் பாட்டினை மாற்றுபவராக இருக்கலாம், வங்கி , பணம் செலுத்தும் சூழல் அமைப்பில் மேலும் விரைவான மாற்றங்களைக் கொண்டுவரும்.

1.CBDC ஐ பற்றிய கட்டுக்கதைகள்  தவறான கருத்துகளை நீக்குதல் CBDC ஒரு புதிய கருத்தமைவா?
 கடந்த காலத்தில், பின்லாந்துநாட்டில் இதற்காக Avant எனும் அட்டையை அறிமுகப்படுத்திய 1990 களில் மத்திய வங்கியின் எண்ணிம நாணயம் (சில்லறை வடிவத்தில்) இருந்தது. இருப்பினும், மத்திய வங்கியின் சில்லறை இட்டுவைப்புகள் நீக்கம் செய்யப்பட்டன, இதனால் மத்திய வங்கியானது மற்ற நிதி அமைப்புகளுடன் போட்டியிடாது. மேலும் Avant எனும் அட்டை பயனாளர்களின் வலைபின்னல்கள் மிகவும் சிறியதாக இருந்ததால் தோல்வி யடைந்தது. எனவே, புதியதான CBDC அவ்வாறானது அன்று, ஆனால் அது இப்போது நவீன எண்ணிம வலைபின்னல்களில் தம்மை விரைவாக நிலைநிறுத்திக் கொள்ள முடியும், அதனை வாங்கு பவர்களும் விற்பவர்களும் சிரமமின்றி அதனை அணுக முடியும்.
2.பிரபலமான மறையாக்கநாணயத்திற்கு(Cryptocurrency), CBDCஆனது மாற்றா?
இல்லை, இந்தியாவில் எண்ணிம நாணயத்தைப் பயன்படுத்துவதற்கான வழக்கங்கள் ஏராளமாக உள்ளன. உணவு மானியங்கள் போன்ற குறிப்பிட்ட மானியங்களை வழங்குவது மிகவும் எளிமையானது. அரசாங்கம் CBDC மூலம் மானியத்தை பயனாளிக்கு எளிதாக மாற்றலாம், குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே குடிமை பொருட்கள் வாங்குவதற்காக மாற்றப்பட்ட CBDCயை வாடகை செலுத்த பயன்படுத்த முடியாது. பணம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று நமக்குத் தெரியாத வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்வதை விட இது சிறந்தது.
மானியங்கள் மட்டுமல்ல. பொருளாதாரத்தில் தூண்டுதல்களை உருவாக்க CBDC ஐ பயன்படுத்தி கொள்ளலாம். அரசாங்கம் பொருளாதாரத்தின் ஒரு பகுதியை உயர்த்த முடிவு செய்கிறது என்று வைத்துக்கொள்க அதாவது பயணப்படியை. பயணம் செய்தால் மட்டுமே பயன்படுத்த அரசுபணியாளர் அனைவருக்கும் பயணபடிக்கான CBDC ஐ அரசாங்கம் வழங்க முடியும். நிச்சயமாக, நம்மிடம் விடுமுறை போக்குவரத்து படி (LTA) உள்ளது, ஆனால் இது அதன் சொந்த சிக்கலான செயலாக்க வழிமுறைகளுடன் வருகிறது. IRTC அல்லது சில பயனஏற்பாட்டாளர்களுடன் உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய எண்ணிம எடுக்கப்பட்ட பயன்பாடுகளின் மாற்றுபவராக இருக்கலாம்.
3.ஒரே CBDCஐ அனைத்து நாடுகளும் பொதுவாகப் பயன்படுத்த முடியுமா
இதுவரையில் அனைவருக்கும் பொருந்தக்கூடிய CBDC தீர்வு எதுவும் இல்லை. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு ரூபாய் நோட்டுகள் இருப்பதைப் போலவே, வெவ்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தங்களுடைய சொந்த CBDCஐ வடிவமைக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கங்கள் , மின்வெட்டுக களைக் கணக்கிடுவதற்கு குறிப்பிட்ட இணையஇணைப்பில்லாத தேவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் ஆப்பிரிக்க மத்திய வங்கிகள் சமூகத்தின் வங்கிகிளையல்லாது பகுதிகளுக்கும் எண்ணிம கட்டணத்தை உறுதி செய்ய வேண்டும்.
4.அனைவருக்கும் மத்திய வங்கிகளில் வங்கிக் கணக்குகள் இருக்கும்!
கணக்கு அடிப்படையிலானது முதல் அனுமதிசீட்டு அடிப்படையிலான கருத்தமைவுகள் வரை பல்வேறு வகையான CBDC உள்ளன, மேலும் சில்லறை வர்த்தகத்தில் மத்திய வங்கிகள் ஈடுபடும் அளவு மாறுபடும். பெரும்பாலான நாடுகளில், மத்திய வங்கிகளின் ஈடுபாடு குறைவாகவே இருக்கும். வணிக வங்கிகள் நுகர்வோருடன் ஏற்கனவே உறவுகளைக் கொண்டிருப்பதால், அவை CBDCயை விநியோகிக்க சிறந்த வீரர்களாக திகழுக்கூடும்; CBDCஐப் பயன்படுத்து வதற்கு நீட்டிக்கப்படக்கூடிய ஏற்கனவே உள்ள பயன்பாடுகளை வழங்குகின்றன, மேலும்  வாடிக்கையாளரை அறிவது (KYC) செயல்முறைகளை எவ்வாறு நிர்வகிப்பது என  தெரிந்துகொள்ளலாம்.
5.CBDC என்பது எண்ணிம கட்டணத்தின் மற்றொரு வடிவம்!
 தற்போதுள்ள எண்ணிம கட்டண செயல்திட்டங்களுக்கு சந்தாகட்டணம்/ அல்லது வங்கிக் கணக்கு அல்லது கடனட்டை தேவை, அல்லது அவை அதற்காக கட்டணங்களை விதிக்கின்றன. மேலும், அனைத்து வணிகர்களும் ஒவ்வொரு வகையான எண்ணிம சேவை வழங்குநராலும் பணம் செலுத்துவதை ஏற்க மாட்டார்கள். இதற்கு நேர்மாறாக, CBDC என்பது மத்திய வங்கியால் ஆதரிக்கப்படும் ரொக்க பணத்தின் அதே செயல்பாடுகளைக் கொண்ட அதிகாரப்பூர்வ சட்டப்பூர்வ நாணயமாக இருக்கும். எந்தவொரு வணிகரும் அல்லது நபரும் அதை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும், இதுவே உண்மையான ஒன்றோடொன்று இணைந்து இயங்கக்கூடிய முதல் எண்ணிம முறையாக இருக்கும். இது பொருட்கள் , சேவைகளை மதிப்பிடுவதற்கான கணக்கின் யூனிட்டாக செயல்படுகிறது, மேலும் இது ஒரு மதிப்பின் சேமிப்பகமாகும், இதனை பின்னர் சேமிக்கவும், மீட்டெடுக்கவும் , பரிமாறிக்கொள்ளவும் முடியும்.
6.CBDC இல் பணம் செலுத்த மக்களுக்கு இணைய இணைப்பு தேவை!
CBDC சட்டப்பூர்வ நாணயமாக இருப்பதால், எந்த நேரத்திலும் பணம் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் - வலைபின்னல் அல்லது இணைய இணைப்பு அல்லது மின்சாரம் இல்லாத பகுதிகளில் கூட - எ.கா., மின் தடை ஏற்படும் போது. RBI & NPCI விரைவில் UPI ,பிற இணைய முறைகளுக்கு USSD மூலம் எண்ணிம வழங்குதல்களை  எல்லா இடங்களிலும், எந்த நேரத்திலும் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்த, தொடர்ச்சியான இணைப்பில்லாத வழங்குதல்களை  செயல்படுத்துகிறது.
7.ஒவ்வொரு CBDCஐ கட்டணத்தையும் கண்காணிக்க முடியும்!
இன்று, எண்ணிம கொடுப்பனவுகள் எப்போதும் பணம் செலுத்தும் சேவை வழங்குநர், வணிகர் அல்லது இவ்விருவர்களுக்கும் தனிப்பட்ட தரவை வெளிப்படுத்துவதை உள்ளடக்கியது. ஒரு CBDC ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை முழு அநாமதேயத்தை அனுமதிக்க வேண்டும் - பணத்தைப் போலவே. பணமோசடி அல்லது வரி ஏய்ப்பைத் தடுக்க, மத்திய வங்கியின் தேவையான சட்டப்பூர்வ , சட்டப்பூர்வ இணக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், CBDCயின் தனியுரிமை, வெளிப்படைத்தன்மையை உண்மையிலேயே சமநிலைப்படுத்தும் சாத்தியம் CBDC இன் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும்.
8.CBDC எப்போதும் Blockchain தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது!
சங்கிலிதொகுப்பு( Blockchain) என்பது ஒரு சிறந்த தொழில்நுட்பமாகும், இது சில பயன்பாட்டு நிகழ்வுகளுக்கு நன்றாக செயல்படுகிறது. இருப்பினும், ஒரு CBDC நம்பகமான நிறுவனத்தால் வழங்கப்படுவதால், சங்கிலிதொகுப்பு அதன் செயல்பாட்டிற்கு அவசியமில்லை. CBDCக்கான பல வடிவமைப்பு அளவுகோல்களை சங்கிலிதொகுப்பின், விநியோகிக்கப்பட்ட பேரேட்டு தொழில்நுட்பம் (DLT) பூர்த்தி செய்ய முடியும் என்றாலும், பாதுகாப்பான தொடர்ச்சியான இணையமில்லா கொடுப்பனவுகள், தனியுரிமை, வெளிப்படைத் தன்மையை உண்மையாக சமநிலைப்படுத்துவதற்கான சாத்தியம்  மிக உயர்ந்த பின்னடைவை உறுதி செய்தல் போன்றவற்றை அடைவதில் சிரமங்கள் இருக்கும். CBDC சசூழலில் எந்த ஒரு தோல்வி புள்ளியும் இல்லை.
  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வங்கி தனது சங்கிலிதொகுப்பு அடிப்படையிலான மத்திய வங்கி எண்ணிம நாணயமான (CBDC) எண்ணிம நாணயத்தினை மார்ச் 2023க்கு முன் தொடங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். இருப்பினும், இந்திய மத்திய வங்கியின் (RBI) செயல் இயக்குநர், T இரபி சங்கர், மத்திய வங்கி, அனைத்து தொழில்நுட்பங்களுக்கும் திறந்திருக்கிறது என்று தெளிவுபடுத்தியுள்ளர்.
முடிவுரை
இந்தியாவில் CBDC செயல்படுத்தப்படுவதற்கு, பல்வேறு அளவுருக்களில் சில திருப்புமுனை முன்முயற்சிகள் முக்கியமாக இருக்கின்றன - கிராமப்புறங்களில் சிறந்த எண்ணிம நிதி கல்வியறிவுக்கான திட்டமிடல், குறைந்த வங்கிகளி்ன் கிளைகள், வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பயன்படுத்துதல், வலுவான சட்டக் கட்டமைப்பு , கலாச்சார தடைகளை நீக்குதல். இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொள்வது, ஒரு வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதைப் பொறுத்தது, இது தொழில்நுட்பத்தை நிர்வகிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், CBDC களை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியமான தடைகளையும் தீவிரமாக நிவர்த்தி செய்யும். எண்ணிம நாணய உள்கட்டமைப்புக்கு குறிப்பிடத்தக்க முதலீடுகள் தேவைப்படுகின்றன  அதன் செயலாக்கமானது துவக்கநிலையிலான தடுமாற்றங்கள் இல்லாமல் இருக்காது. எண்ணிம நாணயம் செலுத்துதல் , நாணயங்களைச் சுற்றியுள்ள இணையக் குற்றங்களின் அச்சுறுத்தல், தத்தெடுப்பை இயக்குவதற்கு உயர் தரமான பயனாளர் அனுபவத்தை உறுதி செய்யும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தவிர, அதிநவீன இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கோருகிறது. இம்முயற்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக,அனைவரின் பங்கேற்பையும் அர்ப்பணிப்பையும் உறுதி செய்வது மிகவும் அவசியமாகும்.

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...