இந்தியாவின் கடந்த ஐந்தாண்டுகளின் களநிலவரங்களானவை சிறு வணிக நிறுவனங்களுக்கும் முறைசாரா தொழிலாளர்களுக்கு மான 100 மீட்டர் தொடர் ஓட்டபந்தயங்களாக நமக்குத் தோன்றுகின்றன. பணமதிப்பு நீக்கம், அல்லது சரக்கு சேவை வரி அல்லது முழுஅடைப்பு என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் இந்தியாவின் "உன்னதமான இலக்கினை" அடைவதற்காக, தங்களுடைய வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் குறுக்கிடுகின்ற தடைகளையும் தற்காலிக இன்னல்களையும், சகித்துக்கொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும் சிலநேரங்களில் “அச்சே தின்”, “டிஜிட்டல் இந்தியா”, “கருப்புப் பணத்தின் மீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக்( surgical strike)”, “ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ. 15-லட்சம்”, “மேக் இன் இந்தியா”, “ஆத்ம நிர்பார் பாரத்”, “ஐந்து டிரில்லியன் பொருளாதாரம்” - என ஒவ்வொரு முறையும் பந்தயத்தில் பொதுமக்கள் எனும் ஓடுகின்ற குதிரைக்கு முன்புறம் காட்டுகின்ற கேரட்டானது மாறிகொண்டே இருக்கின்றது. ஊடக செய்தி அறைகளில் சொற்பொழிவு, வணிகசின்னங்கள் , அதிக கூச்சல்கள் ஆகிய சரியான கலவையுடன் இவை ஒவ்வொன்றும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன, இதுவே நம்மை வாழ்வில் குறுக்கிடுகின்ற குறுகிய தடைகளுடனும், குறுகிய நினைவுகளுடனும் வாழும் மக்களாக மாற்றியுள்ளன.
இவ்வாறாக தயாரிக்கப்பட்ட மகிழ்ச்சியான தோற்றமுடைய காட்சியானது, பெரிய அபாயகரமான படத்தை மறைக்கின்ற ஒரு புகைபோன்ற திரையாகப் பயன்படுத்தப்படுகிறது - இது "சப்கா சாத் சப்கா விகாஸ்" என்ற முழக்கத்துடன் கொடிகட்டிப் பறந்த ஒரு இனத்தின் முடிவடையபோகின்ற ஒரு மாரத்தான் ஓட்டப் பந்தயமாகும், ஆனால் பல ஆண்டுகளாக இந்த பந்தயத்தில் கலந்துகொள்கின்ற சிறு தொழில் முனைவோர்களையும், முறைசாரா துறைகளையும் பெரிய நிறுவனத்திற்கு ஆதரவாக அழிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுவருகின்றது.
பணமதிப்பிழப்புஎனும்முதல் அலை: சிறு வணிகங்களின் பாதைகளில் குறுக்கே எழுப்பப்பட்ட தடைகளில் ஒன்று பணமதிப்பு நீக்கமாகும். ஐந்தாண்டுகளுக்கு முன், ஒரே இரவில் பயன்பாட்டில்இருந்த ரூ.500 , ரூ.1,000 ஆகிய பணத்தாள்கள் தடைசெய்யப்படுகின்றன எனும் அறிவிப்பானது இந்தியாவின் 86% பணபரிமாற்றத்தினை செல்லாததாக ஆக்கியது. அதாவது நவம்பர் 7, 2016 அன்று இரவு 8 மணிக்கு வெளியான பயன்பாட்டில்இருந்த ரூ.500 , ரூ.1,000 ஆகிய பணத்தாள்கள் தடைசெய்யப்படுகின்றன எனும் ஆச்சரியமான அறிவிப்பு, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் பொதுமக்களின் வாழ்க்கையையும் அழித்து கேள்விக்குறியாக்குவதற்கான முதல் அடியாக அமைந்தது.
இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான நடைமுறைபைப் பற்றி எதுவும் அந்த அறிவிப்பின்போது கூறவில்லை, ஆனால் பொதுமக்களின் தனிப்பட்ட இன்னல்களைத் தாண்டி நம்முடைய நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும் என்றும், கருப்புப் பணம், பயங்கரவாதம், ரொக்கபணத்தின் தீமை ஆகியவற்றிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக வெறும் 50 நாட்களுக்கு மட்டும் பொதுமக்கள் இந்தவலியைத் தாங்கிகொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாகஅந்த அறிவிப்புகோரியது. ஆயினும் கறுப்புப் பணத்தின் மீதான துணிச்சலான "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" என்றும் பணம் இருக்குமிடத்தை அறிவதற்கான சில்லுகள் கொண்ட புதிய ரூ. 2,000 நோட்டுகளின் வெளியீடு என்றும் பலகட்டுக்கதைகள் எப்போதும் விசுவாசமுள்ள ஊடகங்களுக்கு போதுமானதாக இருந்தன. மேலும் இது குறித்து கேள்வி கேட்ட எவரும் இந்தியாின் "உன்னத இலக்கினை" அடைவதற்கான பாதையில் குறுக்கிடுகின்ற தேச விரோதியாக முத்திரை குத்தப்பட்டனர்.
கறுப்புப் பணத்தின் மீதான "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" என்ற கேலிக்கூத்துக்குப் பின்புலத்தில், கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருப்பது, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, சிட்டி அறக்கட்டளை, ஃபோர்டு அறக்கட்டளை, மாஸ்டர்கார்டு, ஓமிடியார்வலைபின்னல் விஸாஇன்க் ஆகிய உலகளாவியஅமெரிக்க முகவர்களின் நிதியளிப்பின் வாயிலான ஒப்பந்தத்தின் மூலம் ரொக்கபணத்தை விட மின்னனு பரிமாற்றமே சிறந்தது எனபெரும் மூலதனத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட ரொக்கப் பணபரிமாற்றத்தின் மீதான உலகளாவியப் போர் ஆகும். இதுபணமதிப்பு நீக்கத்திற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இந்திய அரசுடன் இணைந்த ஏற்படுத்தப்பட்டகூட்டணிஆகும்.
"இந்தியாவின் 70% க்கும் அதிகமான தொழிலாளர்களை பணிக்கு பயன்படுத்திகொண்டாலும், முறைசாரா துறையில் பணிபுரிபவர்களை அத்துக்கூலிகளாக அவர்களுடைய வாழ்க்கையையே சாத்தியமற்ற தாக்குவதுதான் இந்த பணமில்லா நடவடிக்கைகளுக்கான அடிப்படை நோக்கமாகும்" என்பதே இதற்கான விளக்கம் என டோனி ஜோசப் கூறுகின்றார் ,.
மேலும் பணமில்லாப் பொருளாதாரத்தை ஆதரிப்பவர்கள் முறைசாரா துறையினை கொண்ட இந்தியா போன்ற அதிகமக்கள்தொகை கொண்டஒரு நாட்டிற்கு இதுபோன்ற கட்டாய பணமில்லா மின்னனு மயமாக்கலால் மிகப்பெரிய அளவில் பணி இழப்பு, நிச்சயமற்ற தன்மை ஆகியவையே ஏற்படக்கூடிய விளைவாகும் என்றும் இவர் நம்மிடம் எச்சரிக்கிறார். உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பிறகு இந்தியாவில் நாம் காண்கின்றவிளைவுகள் இதுதான்.
ரொக்கபண நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்ட அமைப்பு சாரா துறைக்கு, பணமதிப்பு நீக்கம் என்பது அதனுடைய ஆணிவேரையே வெட்டி விடுவதற்கு சமமாக இருந்தது. நடைமுறை மூலதனத்தின் பற்றாக் குறையால், சிறு தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிந்த பனியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தன, அதனால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரிவதற்காக குடிபெயர்ந்த சிறு நகரங்களையும் பெருநகரங்களையும் கைவிட்டு தங்களுடைய சொந்தகிராமங்களுக்கே திரும்பிசென்றனர்.
2016 டிசம்பரில், 95% புலம்பெயர்ந்தோர் தங்கள் முதலாளிகளிடம் சம்பளம் கொடுக்க பணம் இல்லாததால் வீடு திரும்பியதாகபீகாரின் நிதியமைச்சர் கூறினார். டிசம்பர் 2016இன் போதான ஒருஆய்வில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முதல் 50 நாட்களில் 40 வயது முதல் 55 வயது வரையிலும் உள்ளவர்களில் 40% பணிஇழப்புகளும், 22 முதல் 30 வயது வரையிலும் உள்ளவர்களில் 32% பணி இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வாண்டின் இறுதியில், சிறிய நிறுவனங்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடியவை என்பது தெளிவாகத் தெரிந்தது. அதாவது, சிறிய அளவிலான வணிகநிறுவனங்கள், சிறுவணிகர்கள் , குறுந்தொழில்கள் ஆகியவை 60% பணியாளர் இழப்பைக் கண்டன மேலும் இவை தங்களுடைய வருவாயில் 47% சரிவைச் சந்தித்தன, அதே நேரத்தில் பெரிய அளவிலான தொழில்கள் 2% வேலை இழப்பையும் 3% வருவாய் சரிவை மட்டுமே சந்தித்தன.
சசேவ எனும் அடிப்படை கட்டமைப்பிலான அடி: அதற்கடுத்துதாக சரக்கு சேவை வரி என்ற பெயரில், புதியதாக மற்றொரு தடையை பாதையில் எழுப்பிய போது, அமைப்புசாரா துறையினர் பந்தயத்தில் மீண்டும் தங்களுடைய காலை வைக்க முடியாத நிலை உருவானது. அது மீண்டும் பொருளா தாரத்தை பின்னோக்கித் தள்ளியது. அப்போது மீண்டும், இவ்வாறான பாதிப்புகள் குறுகிய காலத்திற்குமட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் இது நீண்ட காலநோக்கில் நாட்டை புதிய உயரத் திற்கு கொண்டு செல்லும் என்றும் கூறப்பட்டது இந்த காரணத்திற் காக இதனை நடைமுறைப் படுத்துவதை பொதுமக்கள் ஏற்று கொள்வது நல்லது என மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்ளப்பட்டது. முந்தைய பணமதிப்பு நீக்கத்தின் போதான அலையின் அதிர்ச்சியை விட, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் , சிறு தொழில் முனைவோர்களுக்கும் சரக்கு , சேவை வரி எனும் கட்டமைப்பு ரீதியிலான அடியானது உண்மையில் மிகப்பெரியாகதாக இருந்தது. மேலும் இந்த சசேவ ஆனது பொருளாதார கட்டமைப்பில் ஈடுபாடுடையசிறிய ஓட்டப்பந்தய வீரர்களின் உயிர் வாழ்விற்கு எதிராக முற்றிலும் திசைதிருப்பப்பட்டது அதுமட்டுமல்லாது சந்தைப் பங்கைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்கள் அமைப்பு சாராதா சிறுநிறுவனங்களின் பங்கினை அபகரித்து கொள்வதற்கும் பெரிய ஒழுங்கமைக்கப் பட்ட சில்லறை வர்த்தக வணிகச்சின்னங்களின் பாதையை அகலமாக அதிகரித்து கொள்வதற்கும் உதவியது. பல்வேறு பொருளாதார வல்லுனர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி, பொதுமக்கள் அருகிலுள்ள சிறுதொழில்கள் அல்லது உள்ளூர் சேவை வழங்குநர்கள், அகியோர்களை பெரும்பாலும் இணைக்கமாக சார்ந்துள்ளதை இல்லாமல் ஆக்கிவிட்டது, ஏனெனில் இதன் மூலம் மட்டுமே போட்டிக்கான விலையை நிர்ணையிக்க முடியும். பெரிய ஒட்டபந்தய வீரர்களுடன் உத்தியோகபூர்வ விகிதங்களுக்கு அவர்களை உட்படுத்துவதும் இணக்கச் செலவினை அதிகபடுத்துவதும் அடிப்படையில் அவர்களில் பெரும்பாலானவர்களை பந்தயத்திலிருந்தே வெளியேற்றுவதாக ஆக்கிவிட்டது. அதுதான் இந்த சசேவின் வாயிலாக நடைபெற்ற துல்லியமானதாக்குதலாகும்
ப்ரெஸ்டீஜ் குழுமத்தின் செயல் தலைவர் , இந்திய அரசு புதிய சசேவ நடைமுறைபடுத்தியதிற்கு நன்றி என்றும் இதன்மூலம் ஒழுங்கமைக்கப் படாத நிறுவனங்களுடனான போட்டி குறைகிறது.என்றும் மூன்று அல்லது நான்கு ஒழுங்கமைக்கப்பட்ட வீரர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். மிகுதியாக உள்ளவர்களால் இந்த பந்தயத்தைத் தொடர முடியவில்லை. என்றும் அதனால்தான் சசேவ(GST), என்பது ஓட்டபந்தய தளத்தினை சூடாக்குகின்ற வரி (Ground Scorching Tax ) எனஅழைக்கலாம் என்றும் கூறுவதைக் காணலாம்- ஒரு பேட்டியில் “இது தள மட்டத்தில் பொருளாதாரத்தினை அதிக சேதமடையச் செய்கிறது" என பொருளாதார நிபுணரும் எழுத்தாளருமான அருண் குமார் கூறினார்.
முழுஅடைப்புஎனும் அபாயகரமான வீழ்ச்சி: டிரான்ஸ்யூனியன் சிபில், சிட்பிஆகியவற்றின் அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டின் இறுதியில், ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையிலான வருமானங்களைக் கொண்ட சிறு ,குறு, நடுத்தர நிறுவனங்கள், ஏறத்தாழ பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய நிலைக்கு மீண்டுவிட்டன, ஆனால் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான வருமானங்களை கொண்டவை இன்னும் எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே நோயாளிகளாக இருந்தன
தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் முழுஅடைப்பு என மற்றொரு தடையை ஏற்படுத்தியபோது, அமைப்புசாரா துறையானது அதிலிருந்து மீண்டு எழுவதற்காக மிகவும் தீவிரமாக முயன்றன. இந்த முறை அவர்களை வீழ்த்திய கொடிய தடை கோவிட்-19 எனும் தீநுன்மிக்கான வேறொரு தடையாகும் - . மனித வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகக் கடுமையான அரசால் விதிக்கப்பட்ட கோவிட்-19 இற்கான முழுஅடைப்பு ஆனது, வெறும் 4 மணி நேர கால அவகாசத் துடன், நாட்டை அசையாத நிலைக்குக் கொண்டு வந்து, அமைதியாக இருக்குமாறுஅறிவிக்கப்பட்டது.
தீநுன்மிக்கு எதிரான இந்தபோரில் நாடு வலுவாக முன்னேறுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு சகிப்புத்தன்மையின் பாடலைப் பிரச்சாரமாக பாடுவதற்கு அரசுஇயந்திரம் மீண்டும் கட்டவிழ்த் துவிடப்பட்டது, நாம் இரண்டாவது அலை போரின் தோல்வியிலிருந்து மீண்டுஎழமுயற்ச்சி நேரத்தில். முழுஅடைப்பு எனும் மூன்றாவது அலையானது இந்திய பொருளாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்தது, அதாவது ஏற்கனவே பணமதிப்பிழப்பு , சசேவஆகியஇரண்டின் அடிகளால் முடங்கிய அமைப்புசாரா துறையால் இந்த மூன்றாவது அலையின்போது குற்றுயிராக வீழ்வதற்காக மீண்டும் அதிக விலை கொடுக்கப்பட்டது. இதன் விளைவு குறிப்பாக தொழிலாளர்களாக பணிபுரிகின்ற பெண்களுக்கு எதிரானதாகும். ஒரு ஆய்வின்படி, 19% பெண்கள் மட்டுமே தொடர்ந்து பணியில் இருந்தனர், 47% பேர்கள் 2020 இறுதி வரை பணிக்குத் திரும்பவேயில்லை. அவர்களில், வீட்டுப் பணியாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வ தரவுகளில் கண்ணுக்குத் தெரியாதது என்றாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெண்கள் தங்களுடைய சிறுசேமிப்பை எவ்வாறு இழந்தார்கள் என்பதும், குடும்ப வன்முறையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதும் பரவலாகஅறி்துகொள்ளலாம்
பாதிக்கப்பட்டஅமைப்புசாரா தொழிலாளர்கள் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பானது மற்ற ஒன்பது தொழில் சங்கங்களுடன் இணைந்து 42,000க்கும் மேற்பட்ட சுயதொழில் செய்பவர்களிடமும், குறுந்தொழில் முனைவோர்களிடமும் நடத்திய ஆய்வில், அவர்களின் தொழில்கள் மூன்றில் ஒரு பகுதி ஏறக்குறைய மூடப்படும் தருவாயில் இருப்பதைக் கண்டறிந்தனர். இவற்றில் 70% க்கும் அதிகமானவைகளில் தங்களின் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடத்தப்பட்ட 400 நிறுவனங்களின் விரிவான ஆய்வில், குறுந்தொழில் நிறுவனங்கள் ஆண்டு விற்பனை வருமானத்தில் 20% இழந்ததாகவும், நடுத்தர பெரிய நிறுவனங்கள் சுமார் 11% மட்டுமே விற்பனைவருமானம் இழந்ததாகவும் கண்டறியப்பட்டது. சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களில் 37% மட்டுமே தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்று ஆய்வு மதிப்பிட்டுள்ளது, அதே நேரத்தில் பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை 57% ஆகும். இந்த தகவல் இரண்டாவது அலை கரைக்கு வந்து சேருவதற்கு முந்தையதாகும்
எடுத்துக்காட்டாக இரும்பினை பயன்படுத்தி சிறுதொழில் செய்திடு பவரின் கணக்கு வேறுமாதிரியாக இருந்தது. , தொற்றுநோய் பாதிப்பானது ஏற்கனவே இயக்கத்தில் இருந்த தொழிலினை முடக்குவதாக அமைந்து விட்டது. "பெரும்பாலான மக்கள் அமேசானில் இருந்து துருப்பிடிக்காத பொருட்களை வாங்குகிறார்கள், மேலும் இந்த தொற்றுநோய் சிறுதொழில் செய்பவரின் சேவை தற்போது தேவையே யில்லாமல் ஆக்கிவிட்டது" என்றநிலை உருவாகிவிட்டது.
தேசிய சிறுதொழில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சக்திமான் கோஷ் ஒரு பேட்டியில், நாடு தழுவிய முழுஅடைப்பின் போது பழங்கள், காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்கும் வியாபாரிகளில் 10% மட்டுமே செயல்பட முடிந்தது எனக் கூறினார். 80%க்கும் அதிகமான வியாபாரிகள் தங்கள் கடைகளைதற்காலிகக் கூட திறக்க முடியவில்லை. அதைவிட தங்கள் அன்றாட வருமானத்தை கொண்டு வாய்க்கும் கைக்குமாக ஏறக்குறைய 60% நடைபாதை வியாபாரிகள் தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்தனர், இந்த முழுஅடைப்பு அவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி யது. தொற்றுநோயைக் கையாளுவதற்கு இதுபோன்ற கடுமையான முழு அடைப்பு சரியான வழியா என்பது குறித்து கடுமையான விவாதததிற்கு வித்திட்டது, மேலும் இரண்டாவது அலையின் பயங்கர பாதிப்புகளால் பொதுமக்களின் வாழ்க்கையே பாதிக்கப்பட்டது. ஆனால் ஒன்று நிச்சயம், ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருக்கும் சிறிய பந்தய வீரர்களான, வியாபாரிகள் , பயண சேவை வழங்குநர்கள் மீது மின்னனு மயமாக்கலானது சில்லறை விற்பனையின் அடித்தளத்தை அசைத்து வீழ்த்துவதை மேலும் உறுதிப்படுத்தியது.
எடுத்துக்காட்டாக, 2020 இல் புதிய பயனாளர்களில், 64% பேர் முதல் முறையாக இணையத்தின் நேரடி மளிகைக் கடைகளைஅனுகுபவர்களாக இருந்ததாகவும், 20% பேர் மின்-வணிககங்களுடனான முதல் இடைமுகம் என்றும் ஆய்வு கூறுகின்றது. முழுமுடக்கத்திற்குப் பிறகு 50% புதிய பயனாளர்களாகியதைப் பற்றி Flipkart எனும் பெருநிறுவனம் பெருமிதம் கொள்வதாக கூறுகிறது, மேலும் அவர்களில் பெரும்பாலானோர் இதுவரை தட்டிக்கழிக்கப்படாத மூன்றாவது அடுக்கு நகரங்களில் இருந்து வந்தவர்கள், முழுமுடக்கம் இணையத்தின் நேரடி சில்லறை வணிகத்திற்கான ஒரு நெகிழ்வு புள்ளியாக தனித்து நிற்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பணமதிப்பு நீக்கம்அல்லது சசேவ அல்லது முழுமுடக்கம் ஆகியவை உண்மையில் குறுகிய ஓட்டப் பந்தயங்களின் தடைகள் அல்ல - ஆனால் அவை ஒரு தொடர்ச்சியான - ஐந்தாண்டு கால மாரத்தான் ஓட்டபந்தய பாதைகளில் ஏற்படுத்தபட்ட தடைகளாகும்- இவை முறைசாரா தொழிலாளர்களின் பெரும்பகுதியைப் பயன்படுத்துகின்ற சிறு வணிகங்களுக்கு ஒரு மரணப் பொறியாக மாறியுள்ளன. அவை ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளை வாங்கிவிட்டன அல்லது அவற்றின் சந்தைப் பங்கு பெருவணிகத்தால் அபகரிக்கப்ட்டு சீராக அழிக்கப்பட்டுவிட்டது. கோவிட் எனும் தொற்றுநோய் ஆண்டான 2020 ஆனது இந்தியாவில் விவசாயிகளை விட சிறு வணிகர்கள் அதிக தற்கொலைகளைக் கண்டுள்ளது என சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு தற்கொலை முடிவு எடுத்தவர்களில் பெரும்பாலும் விற்பனையாளர்கள் (36%) , வர்த்தகர்கள் (37%) உள்ளனர். வெறுப்பு, மதவெறி , கவணமாக மறைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஆகியவை இந்த அப்பட்டமான உண்மைகளிலிருந்து நம்மைத் திசைதிருப்ப வைத்திருக்கிறது அல்லது ஒரு தவறான பெருமைக்காக நம்மை உற்சாகப்படுத்துகிறது.
அடுத்த என்னஅறிவிப்பு வருமோ நம்முடைய நடைமுறை வாழ்க்கை என்ன ஆகுமோ என அரைகுறையாக உயிர் ஒட்டிகொண்டு காலந்தள்ளு கின்ற சிறு நிறுவனங்கள் அமைப்புசாரா நிறுவனங்கள் ஆகியன தங்களுடைய காலத்தை கழித்து கொண்டிருக்கின்ற இந்த மரணப் பந்தயத்தை எவ்வளவு காலத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வரமுடியும்? என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்விக்குறியாகும்
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022
பணமதிப்பு நீக்கம், சசேவரி, முழுஅடைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் சிறு வணிகங்கள் எவ்வாறு சிதைத்தன?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக