சனி, 17 செப்டம்பர், 2022

சகோதரர்களிடையே சொத்து தகராறு

 தங்களுடைய தந்தையின் சொத்தையும் நிலத்தையும் பிரிப்பதில்  இரு மகன்களுக்கு இடையே தகராறு ஆகிவிட்டது, மிகமுக்கியமாக தாங்கள் வாழும் ஒரு வீட்டைப் பற்றிய தகராறு மிகப்பெரியதாக இருந்தது.
இந்த சொத்துகளை பிரி்ப்பதில் எழுந்த தகராறின் தொடரச்சியாக ஒரு நாள் அண்ணன் தம்பி ஆகிய இருவரும் எந்த நேரத்திலும் ஒருவரை ஒருவர் கொன்றுவிடத் தயார் என சண்டை போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில் அவர்களுடைய தந்தை தம்முடைய மகன்களைப் பார்த்து சத்தமிட்டு சிரித்தார்.
 தங்களுடைய தந்தை இவ்வாறு சிரிப்பதைக் கண்டு அண்ணன் தம்பிகள் இருவரும் சண்டையை நிறுத்திவிட்டு அவரிடம் அவ்வாறு  சிரித்ததற்குக் காரணத்தை வினவினர்.
உடன் அவர்களுடைய தந்தை, “ஒரு சிறிய வீ்ட்டிற்காகவும் நிலத்திறகாகவும் நீங்கள் இருவரும் இவ்வளவு சண்டை போடுகின்றீர்கள். முதலில் இருவரும் இந்த சண்டையை நிறுத்திவிட்டு என்னுடன் வாருங்கள், நான் உங்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற புதையலைக் காட்டுகிறேன்.
ஆனால் ஒரு நிபந்தனை , நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டால், நான் உங்கள் இருவரையும் புதையல் இருக்குமிடத்திறகு அழைத்துச் செல்ல மாட்டேன்,” எனக்கூறினார்
  “நாங்கள் நிபந்தனை மீறினால் உடன் திரும்பி விடுவோம்.என்ன நடந்தாலும் நாங்கள் இருவரும் சண்டை போட மாட்டோம், உங்களுடனேயே பயணம் செய்வோம்,” என்றுகூறி மகன்கள் இருவரும் புதையலை கண்டடைவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதன்பிறகு வீட்டை விட்டு வெளியேறி புதையல் இருக்குமிடத்திற்கு செல்வதற்காக, மகன்கள் இருவரும் தந்தையுடன் ஒரு பேருந்தில் ஏறி பயனம் செய்தனர். சுமார் பத்து மணி நேரம் பயணம் செய்து ஒரு கிராமத்தை அடைந்தனர்.
 அக்கிராமத்தில் எல்லாப் பக்கங்களிலிருந்தும் வெறிச்சோடியிருந்த மிகப் பெரிய மாளிகைக்கு தந்தை தன்னுடைய மகன்கள் இருவரையும் அழைத்துச் சென்றார். அவர்கள் மிகப்பழையதான மாளிகைக்குள் நுழைந்தபோது, அந்த மாளிகையில் பல இடங்களில் புறாக்கள் கூடு கட்டியிருப்பதைக் கண்ட தந்தை, அழஆரம்பித்தார்.
 உடன், "அப்பா! என்ன நடந்தது? ஏன் நீங்கள் அழுகின்றீர்கள்?" என மகன்கள் இருவரும் தந்தையிடம் காரணம் கோரினர்
தந்தை அழுதுகொண்டே, “பி்ள்ளைகளே இந்த மாளிகையை கவனமாகப் பாருங்கள், நீங்கள் இருவரும் இங்கு கழித்த குழந்தைப் பருவத்தை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஞாபகம் இருக்காது ஆனால் நீங்கள் சிறுவயதில் இருந்த போது நான் இந்த மாளிகைக்காக என் அண்ணனுடன் நிறைய சண்டையிட்டேன்  சண்டையில் நான்வென்றேன், இந்த மாளிகையை பெற்றேன் ஆனால் என் சகோதரனை என்றென்றும் இழந்தேன், ஏனென்றால் அவர் என்னுடன் உறவை துண்டித்து கொண்டு பிழைப்பை தேடி. தொலைதூர நாட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் காலம் மாறியது, ஒரு நாள் நாமும் இந்த மாளிகையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது " நடந்ததை கூறினார்.
மகன்கள் இருவரும் மிககவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது தந்தை கேட்டார், “பிள்ளைகளே, நாம் இங்கு வருவதற்காக பயனம் செய்த பேருந்தில் எந்த இருக்கையில் அமர்ந்திருந்தோம் என்று சொல்லுங்கள்? அந்த இருக்கை என்றைக்கும் நமதாக இருக்குமா?" என வினவினார்
உடன் மகன்கள் இருவரும் சேர்ந்து, “எப்படி எப்போதும் அந்த பேருந்து இருக்கை நமக்கு சொந்தமாக இருக்க முடியும்? பேருந்தின் பயணம் தொடர்கிறது, நாம் கீழிறங்கியவுடன் வேறு சிலர் அந்த இருக்கையில் உட்காருவார்கள், நாம் பயனம் செய்த சிறிது நேரம் மட்டுமே நாம் உட்கார்ந்து பயனித்த இருக்கை நமக்கு எவ்வாறு சொந்தமாக முடியும் "என மிகநன்றாக விவரித்தனர்
  தொடர்ந்து தந்தை சிரித்துவிட்டு , “இதைத்தான் நான் உங்களுக்கு விளக்க முயன்றேன். சிறிது காலம் மட்டுமே உங்களுக்கு சொந்தமாக இருக்கபோகும். அந்த சொத்துகளுக்காக நீங்கள் தகராறு செய்தீர்களே. அவை உங்களுக்கு முன் அதன் உரிமையாளர் வேறொருவராக இருந்தார், சிறிது காலம் நீங்கள் இருக்கிறீர்கள், அதன் பிறகு வேறொருவர் அதன் உரிமையாளராக இருப்பார். என் அருமை பிள்ளைகளே, இந்த குறுகிய கால உரிமையாளர்களாக ஆவதற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக் கின்றீர்களே நீங்கள் இருவரும்ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!
விலைமதிப்பற்ற உறவுகளை தியாகம் செய்யாதீர்கள். வாழ்க்கையில் பண ஆசைகள் வந்தால், அந்த நேரத்தில் புறாக்கள் கூடு கட்டிய இந்த மாளிகையின் நிலையை நினைவில் கொள்ளுங்கள்,
ஒவ்வொரு நாளும் பயணிக்கும் பேருந்தின் இருக்கையை நினைவில் கொள்ளுங்கள். சிறிது நேரம் பயனம் செய்வதற்கான அந்த இருக்கைக்காக உங்கள் உறவை பலி கொடுக்காதீர்கள்..” என மிக நீண்ட விளக்கமளித்தார்
இரண்டு மகன்களும் தந்தையின் சொற்களின் அர்த்தத்தை புரிந்துகொண்டு  இனி தாங்கள் சொத்துகளுக்காகவும் நிலத்திற்காகவும் தகராறு எதுவும் செய்யமாட்டோம் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து வாழ்வதாக கூறி   தந்தையிடம் அழுது கொண்டே மன்னிப்பு கோரினர்.

கற்றல் : நம்மிடம் எந்தச் செல்வம் இருந்தாலும், அது சிறிது காலத்திற்கு மட்டுமே நமக்கானது... சிறிது காலத்திற்குப் பிறகு உரிமையாளர் மாறுகிறார்.. அதனால் செல்வங்களின் உரிமையாளர் விவகாரத்தில் விலைமதிப்பற்ற உறவை இழக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...