சனி, 14 ஆகஸ்ட், 2021

குளத்தின் சேற்றில் சிக்கிய யானை

 

 

 ஒரு மன்னனுக்கு பல யானைகளை கொண்ட யானைப்படை ஒன்று இருந்தது. அவைகளுள் ஒன்று மட்டும் மிகவும் சக்திவாய்ந்த்கவும் போர்களத்தில் திறமையாகவும் அரசனுக்கீழ்ப்படிந்து செயல்படுவதில் முதன்மையானதாகவும் இருந்தது. அது பல போர்களில் அரசனுக்காக மிகசிறப்பாக பணியாற்றியது, மேலும் அரசனுக்கு  மிகவும் பிடித்தமான யானையாகஇருந்தது.அந்த, யானைக்கு வயதாகிவிட்டதால், அரசன் இனி அதனை போருக்கு அழைத்துச் செல்லவோண்டாம் என முடிவுசெய்தார் ஆயினும் அந்த யானையை மட்டும் தனியாக ஒரு உதவியாளரை கொண்டு நன்கு கவனித்து பராமரித்துக் கொண்டுவரப்பட்டது, . ஒரு நாள், அந்த யானை தண்ணீர் குடிக்க அருகிலிருந்த குளத்திற்கு சென்றது தண்ணீரை குடித்து திரும்பவெளியேற முயற்சி செய்தபோது அதனுடைய கால்கள் அந்த குளத்தின் சேற்றில் மாட்டிக்கொண்டது. எவ்வளவு தான் முயற்சித்தாலும் அந்தயானையால் குளத்திலிருந்து வெளியேற முடியவில்லை. உதவியாளர்கள் பலர் சென்று முயற்சிசெய்தும் அந்த குளத்தின் சேற்றிலிருந்து யானையை வெளியில் கொண்டுவர முடியவில்லை. யானை குளத்தின் சேற்றில் சிக்கிய செய்தி மன்னரை அடைந்தது. அந்த அரசனுடன் பலர் அங்கு வந்து  முயன்று பார்த்தனர், தொடர்ந்து அந்த குளத்தின் சேற்றிலிருந்து யானையை வெளியேற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால்  அனைத்து முயற்சிகளும் வீணாகின. அந்த நேரத்தில், கௌதம புத்தர் அந்த வழியாக வேறு எங்கோநடந்து சென்று கொண்டிருந்தார். அரசன்  அவரிடம் சென்று தன்னுடைய யானையை குளத்தின் சேற்றிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வருவதற்கு தகுந்த ஆலோசனை கூறிடுமாறு  கேட்டார். கௌதம புத்தரும் அந்த யானை யை பற்றிய அனைத்து விவரங்களை  விசாரித்து அறிந்து கொண்டார பின்னர் அந்த இடத்தையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் அரசனை நோக்கி, “போர்வீர்கள் அனைவரும் போர்க்களத்தினை நோக்கி புறப்படுவதற்கான மேளங்களையும் கருவிகளையும் இசைக்குமாறு எக்காளங்களை முழங்கிடுமாறு” கூறினார். அரசனும்  தனது ஊழியர்களிடம் போர்க்களத்திற்கு புறப்படுவதற்கான மேளங்களையும் கருவிகளையும் கொண்டு வரும்படியும் செயல்படுத்திடுமாறு உத்திரவிட்டார், ,என்ன ஆச்சரியம் போர்க்களத்தினை நோக்கிபுறப்படுவதற்கான கருவிகள் எக்காளமுழக்கம் கேட்டவுடன் குளத்தின் சேற்றில் மாட்டிகொண்டிருந்த யானையானது வெகுஉற்சாகத்துடன் யாருடைய உதவியும் இல்லாமலேயே தானாக  குளத்திலிருந்து வெளியேறிவந்து சேர்ந்தது அனைவரும் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு புத்தரிடம், “இவ்வளவு நேரம் நாங்கள் மிகவும் எவ்வளவோ முயற்சித்தோம், ஆனால் அந்த யானையை மட்டும் சேற்றிலிருந்து வெளியே கொண்டு வரமுடியவில்லை, ஆனால் இப்போது யானை தானாக வெளியே வந்தது. இது எப்படி சாத்தியம்?" எனக்கோரியபோது புத்தர் , “நம் அனைவருக்கும் நல்ல உடல் திறன் மனத் திறன் ஆகிய எதற்கு ம் பஞ்சமில்லை, ஆனால் அதனை ஊக்குவிக்க ஏதேனும் ஒன்று தேவையாகும் அந்த ஊக்குவிப்புதான் யானைக்கு செய்யப்பட்டது. ஏனென்றால் யானை போர்களத்திற்கு சென்று  பழகியதால் போர்களத்திற்குசெல்லாமல் தனது உற்சாகத்தினை இழந்துவிட்டது போர்களகளத்திற்கு புறப்படுவதற்கான ஓசையானது அதனுடைய பழையஉற்சாகத்தைத் திரும்பப் பெற உதவியது. " எனக்கூறினார்.

சனி, 7 ஆகஸ்ட், 2021

மரத்தின் கிளை ஒன்றில் தொடர்ந்து உட்கார்ந்திடும் ஒரு கழுகு

 

முன்னொரு காலத்தில் , ஒருவழிபோக்கன் இரண்டு கழுகு குஞ்சுகளை ஒரு அரசனுக்கு பரிசாக வழங்கினர். அவை மிகவும் நல்ல இனத்தைச் சேர்ந்தகழுகு குஞ்சுகளாகும், அரசன் இதற்கு முன்பு இதுபோன்ற அற்புதமான கழுகுகளைப் பார்த்ததில்லை. அதனால் அவைகளை நன்கு கவனித்து வளர்ப்பதற்காக  அவ்வரசன் ஒரு அனுபவமிக்க மனிதரை நியமித்தார். சில மாதங்கள் கடந்துவிட்ட பிறகு, அரசன் அந்த கழுகு குஞ்சுகள் எவ்வாறு வளர்ந்துள்ளன எனப் பார்க்க விரும்பி, அவைகளை வளர்த்துவந்த இடத்திற்கு சென்று அடைந்தார். அங்கு இரண்டு கழுகு குஞ்சுகளும் மிகப் பெரிய கழுகாக வளர்ந்திருப்பதை  கண்டு மிகமகிழ்ச்சி யுற்றார், அவை இப்போது முன்பை விட அழகாகத் தோன்றின. அவைகளை கவனித்துக் கொண்டிருந்த மனிதனிடம், “நான் அவைகளை வானத்தில் பறப்பதை காண விரும்புகிறேன்” என்றார் அரசன். அதனை தொடர்ந்து அந்த கழுகுகளை பராமரித்து வளர்த்திடும்  நபர்அதனுடைய கூண்டினை திறந்து விட்டார். உடன் அவ்விரண்டு கழுகுகளும் உயரே வானத்தில் பறக்க ஆரம்பித்தன. ஒரு கழுகு வானத்தின் மிக உயரத்தைத் தொட்டபோது, மற்றொன்று  கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் திரும்பி கீழே வந்து, அங்கிருந்த ஒருமரத்தின் கிளையில் அமர்ந்தது. இதைப் பார்த்த அரசன் ஏதோ விசித்திரமாக இருப்பதை உணர்ந்தார். அதனால், “ஏன்? அவற்றுள் ஒன்று மட்டும் நன்றாக வானத்தில் உயரே பறக்கிறது, மற்றொன்று வானத்தில் உயரே பறக்கவில்லை. " என அரசன் கேட்டபோது அவைகளை பராமரிக்கும் மனிதன் , "ஐயா, நான் எல்லா வகைகளிலும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன், ஆனால் அந்த ஒரு கழுகு மட்டும் வானத்தின் உயரத்தில் பறக்க விரும்புவதாகத் தெரியவில்லை." என பதில் கூறினார்  ஆயினும் அரசன் அவ்விரு கழுகுகளையும் சமமாக நேசித்தார், அதனால் அவ்விரண்டு கழுகுகளும் வானத்தின் உயரத்தில் பறப்பதைக் காண விரும்பினார். எனவே, அடுத்த நாள் அந்த கழுகை வானத்தின் உயரத்தில் பறக்க செய்யக்கூடிய நபருக்கு ஏராளமாக  பரிசுகள் வழங்கப்படும் என நாடு முழுவதிலும் அறிவிக்கப் பட்டது , .அதனைதொடர்ந்து  பல அறிஞர்களும் அனுபவசாலிகளும் அங்கு வந்து உயரத்தில் பறந்து செல்லாத அந்த ஒரு கழுகினை  வானத்தின் உயரத்தில் பறக்க செய்வதற்கு பல்வேறு வழிகளிலும் கடுமையாக  முயன்று பார்த்தனர், ஆனால் பலநாட்கள் கடந்த பின்னரும் அந்த ஒரு கழுகு மட்டும்  வானத்தின் உயரத்தில் எழுந்து பறந்து செல்லாமல் இன்னும் அதே நிலையில் அதாவது வானத்தில் கொஞ்சம்தூரம் பறந்து மீண்டும்திரும்பி வந்து அந்த மரத்தின் கிளையிலேயே அமர்ந்து கொள்வது என்றவாறே இருந்தது, ஆனால் ஒரு நாள், அவ்விரண்டு கழுகுகளும் வானத்தின் உயரத்தில் மிக அழகாக பறப்பதை அரசன் கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றார். அவ்வரசனுக்கு தன்னுடைய கண்களால் காண்பதை  நம்ப முடியவில்லை, உடனடியாக இந்த சாதனையைச் செய்த நபரைக் கண்டுபிடிக்கும்படி உத்திரவிட்டார், அடுத்த நாள், அந்த நபர் அரச சபைக்கு நேரில் வந்து சேர்ந்தார். அவருக்கு ஏராளமாக தங்க நாணயங்களை வெகுமதியாக வழங்கிய பின்னர், அரசன் அம்மனிதரிடம், "பெரிய அறிஞர்களாலும் அனுபவசாலிகளாலும் செய்ய முடியாததை நீங்கள் எப்படி செய்தீர்கள்?" என கேட்டபோது அம்மனிதன், “ஐயா | நான் ஒரு எளிய விவசாயி, எனக்கு அதிக கல்வி அறிவு  எதுவும் இல்லை.  ஆயினும் அனுபவ அறிவு சிறிதுமட்டும உண்டு அதனை கொண்டு நான் அந்த கழுகு உட்கார்ந்திருந்த கிளையை வெட்டிவிட்டேன். தான் வழக்கமாக உட்கார்ந்திருக்கின்ற இடமான கிளையை வெட்டிவிட்டதால் தான் உட்காருவதற்கு வேறுஇடம்இல்லாது போது அந்தகழுகானது உட்காருவதற்கு தனக்கு வேறுஎதுவும் இல்லையென அதன் கூட்டாளியுடன் வானத்தில் உயரே பறக்கத் தொடங்கியது. ”என்றார் 

 ஆம் நாம் அனைவரும் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை பிடிப்பதற்காக முயற்சி செய்கின்றோம், ஆனால் சில சமயங்களில் நாம் என்னவாக இருக்கிறோம்என தெரிந்து கொள்ளாமல் அல்லது அறிந்து கொள்ளாமல் தொடர்ந்து முயற்ச்சி செய்திடாமல்அவ்வாறான   திறனை மறந்து விடுகின்றோம்.அதனால் அதற்கான முயற்சி செய்வதை தக்கவைத்து கொள்ளாமல் நம்முடைய பாதுகாப்பான பழையநிலைக்கு மீண்டும் திரும்பசென்றுவிடுகின்றோம்  வேறு வழிஇல்லை என்ற இக்கட்டு வரும்போதுதான் நாம் நமக்கான வாழ்க் கை பாதையை கண்டுபிடித்து செயல்படுவதற்காக  வாழ்க்கையை துவங்குகின்றோம் என்பதே உண்மைநிலவரமாகும்.

சனி, 31 ஜூலை, 2021

தந்திரமான அதிகாரியும் அவரது உதவியாளரும்

 


 ஒருமுறை வாடிக்கையாளர் ஒருவர் தனது மேலதிகாரிக்கு பரிசாக வறுத்த கோழியையும் புதிய பழச்சாறு பாட்டில் ஒன்றையும் வழங்கினார். மேலதிகாரியானவர் இவ்விரண்டு பரிசுபொருட்களையும் தனது உதவியாளர் மூலம் தனது வீட்டிற்கு அனுப்ப விரும்பினார் அதனால் தனது உதவியாளரை அழைத்தார். மேலதிகாரியானவர் மிகவும் தந்திரமானவர், அவருடைய உதவியாளர் இந்த உணவைப் பற்றிய விவரம்  தெரிந்து கொள்ள வேண்டாம் என விரும்பினார், ஆகவே, அவ்வுதவியாளரிடம் அவற்றை கொடுக்கும்போது, ​​“இவற்றை என் வீட்டிற்கு எடுத்துச் செல்க, ஆனால் இந்த பொருட்களின் மீது மூடியுள்ள துணியை மட்டும் அகற்ற வேண்டாம் என்பதை நினைவில் கொள்க அவ்வாறு துனியை திறந்துவிட்டால் உடன் இதிலுள்ள  பறவையானது வெளியே  பறந்து சென்றுவிடும், அவ்வாறே இந்த பாட்டிலையும் திறக்க வேண்டாம் இந்த பாட்டிலில் விஷம் உள்ளது தப்பித்தவறி இந்த பாட்டிலை திறந்து அதிலுள்ளதை குடித்துவிட்டால் அதனுடைய விஷத்தால் நீ இறந்தாலும் இறந்துவிட நேரும். என்ன நான் கூறுவது புரிந்தா ?" என விவரமாக கூறி அனுப்பிவைத்தார். உதவியாளரும் ​​“சரி ஐயா நீங்கள் கூறியவாறு பத்திரமாக எடுத்து சென்று உங்களுடைய வீட்டு அம்மாவிடம் கொடுத்துவருகின்றேன் ஐயா "என தலையாட்டி ஆமோதித்தான். ஆயினும் அவ்வுதவியாளர் தனது மேலதிகாரியை பற்றி  நன்கு விவரமாக அறிந்தவனாவான், அதனால்" இந்த பொருட்களை பத்திரமாக தன்னுடைய வீட்டிற்கு கொண்டு சென்று சேர்" என்று கூறுகின்றாரே " இதில் ஏதோ மறைவாக பொருட்கள்உள்ளன"  என  சந்தேகப்பட்டான். எனவே அவ்வுதவியாளர் மேலதிகாரியின் வீட்டிற்கு அவைகளை எடுத்து செல்லும் வழியில், அவன் ஒரு இடத்தினை கண்டுபிடித்து நன்கு வசதியாக அமர்ந்து கொண்டு அவை என்னவென காண. துணியை அகற்றியபோது துனிமூடிய பாத்திரத்தில் வறுத்த கோழியும் பழச்சாறு பாட்டிலும் இருப்பதைக் கண்டான். உடன் வறுத்த கோழி முழுவதையும் சாப்பிட்டுமுடித்தான் மேலும் ,  பாட்டிலிலிருந்த பழச்சாறுமுழுவதையும் குடித்தபின்னர் தான் பணிபுரியும் இடத்திற்கு மெதுவாக திரும்பிவந்துசேர்ந்தான்., மேலதிகாரியானவர் மதிய உணவிற்காக தனது வீட்டை அடைந்து தனது மனைவியிடம் மதிய உணவினை பரிமாறும்படி கோரினார். அவரது மனைவி, ‘சிறிது நேரம் காத்திருங்கள். சாம்பார் இன்னும் தயாராக வில்லை. ” என பதில் கூறியவுடன் மேலதிகாரியானவர், “உதவியாளர் மூலம் நான் அனுப்பிய வறுத்தகோழி, பாட்டில் சாறு ஆகிய இரண்டையும் கொண்டுவா. அது போதும். ”என கூறினார் உடன் அவரது மனைவி ” நம்முடைய வீட்டிற்கு உங்களுடைய.  உதவியாளரும் இன்னும் வந்துசேரவில்லை நீங்கள் அனுப்பிய பொருட்களும் வந்து சேரவில்லை” என்று பதிலளித்தார். ணேலதிகாரிக்கு மிகவும் அதிககோபம் வந்தது அதனால் தன்னுடைய மனைவியிடம் எதுவும் சொல்லாமலும் மதிய உணவினை சாப்பிடாமலும்  தான் பணிபுரியும் இடத்திற்குச் திரும்பி சென்றுசேர்ந்தார் தனது உதவியாளரை அழைத்தபோது அவ்வுதவியாளர் நன்கு நிம்மதியாக தூங்குவதைக் கண்டார்.அதனால் மேலதிகாரியின் கோபம் மிகவும் அதிகமானது தூங்கி கொண்டிருந்த தன்னுடைய உதவியாளரை  எழுப்பி, ‘எங்களுடைய வீட்டிற்கு கொண்டுசெல்லுமாறு நான்  கொடுத்த பொருட்கள் எங்கே?’ என கேள்வி எழுப்பினார் அதற்கு அவ்வுதவியாளர், “ஐயா, நான் அந்த பொருட்களை உங்களுடைய வீட்டிற்கு எடுத்தச் செல்லும்போது,  காற்று அதிகமாக வீசி அடித்ததுஅதனால் அந்த பொருளின்மீது மூடியிருந்து துனி காற்றில் திறந்து கொண்டது. அவ்வாறு அந்த பாத்திரத்தில் மூடியிருந்த துனி திறந்து கொண்டதால் உடன் பறவை ஒன்று உயரே பறந்து போய்விட்டது  , துனியானது காற்றில் திறந்தவுடன் நீங்கள் சொன்னது போல, பறவையும் வானத்தில் பறந்து போய்விட்டதைப் பார்த்து நீங்கள் என்னை கண்டிப்பாக த் தண்டிப்பீர்கள் ஏதாவது தண்டனை கொடுப்பீர்கள் என்று பயந்தேன், அதனால் நான் அந்த பாட்டிலைத் திறந்து அதிலிருந்த விஷம் முழுவதுமாக குடித்தேன் இப்போது அந்த விஷத்தினால் எனக்கு எப்போது இறப்பு வரும் என நான் இங்கே  எனக்கு அந்த மரணம் வருவதற்காக  காத்திருக்கிறேன்.ஐயா " என மிகவும் அப்பாவித்தனமாக பதில் கூறினார் என்ன வாசகரே அந்த உதவியாளருக்கு நீங்களாவது சென்று ஆறுதல் கூறுங்களேன்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...