செவ்வாய், 8 மே, 2012

மற்றவர்களிடம் குறைகாண்பதைவிட அந்த குறையை நாமே எவ்வாறு சரிசெய்வது என தெரிந்து செயல்படுக


ஓவியம் வரைவதற்கு கற்றுகொடுக்கும் குருவிடம் பயிற்சி ஓவியர் ஒருவர் நன்குபயிற்சி பெற்று கற்று தேர்ந்தபின் இரண்டொரு நாட்கள் மிக கடுமையாக முயற்சி செய்து இந்த பயிற்சி ஓவியர் ஓவியம் ஒன்றைவரைந்து முடித்தார் தான் புதியதாக வரைந்த ஓவியத்தை பற்றி மக்கள் எந்தவிதமான கருத்துகளை கொணடுள்ளனர் என தெரிந்துகொள்ள விரும்பினார் அதனால் அப்பயிற்சி ஓவியர் வாழ்ந்துவரும் அவருடைய நகரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மையப்பகுதியில் அந்த ஓவியத்தை ஒருநாள் காலை நேரத்தில் வைத்து இந்த ஓவியத்தை காண்பவர்கள் இதில் குறை ஏதேனுமிருந்தால் அருகிலுள்ள வரைவு கருவியால் ஒரு பெருக்கல் குறியை வரைந்து குறிப்பிடும் படி அறிவிப்பு செய்திருந்தார்

பிறகு அன்றுமாலை தன்னுடைய ஓவியத்தில் பார்வையாளர்கள் குறைஏதேனும் கண்டு பிடித்தார்களா என தெரிந்து கொள்ள பயிற்சி ஓவியர் தன்னுடைய ஓவியத்தை சென்று பார்வையிட்டார்

என்ன கொடுமை அவருடைய ஓவியம் முழுவதும் பார்வையாளர்கள் பெருக்கல் குறியால் பூசி மெழுகியிருந்தனர் உடன் பதை பதைப்புடன் தனக்கு பயிற்சியளித்த குறுவிடம் சென்று அழுதபடியே தன்னுடைய ஓவியம் முழுவதும் குறையுள்ளதாக பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளதை காண்பித்தார்

உடன் குருவானவர் வருத்தபடாதே மீண்டும் மற்றொரு ஓவியத்தை வரைந்து கொண்டுவா என்று கூறியதை தொடர்ந்து அவ்வாறே பயிற்சிஓவியரும் மற்றொரு ஓவியத்தை வரைந்து குருவிடம் எடுத்துசென்றார்

குருவானவர் அந்த பயிற்சி ஓவியரை அழைத்து கொண்டு ஏற்கனவே பார்வையாளர்களுக்காக பயிற்சி ஓவியரின் ஓவியத்தை வைத்திருந்த அதே இடத்தில் மறுநாள் விடியற்காலை எடுத்து சென்று வைத்துவிட்டு அதனுடன் இந்த ஓவியத்தில் தவறுஏதேனுமிருந்தால் பார்வையாளர்கள் திருத்தம் செய்யலாம் தவறு எதுவுமில்லை யெனில் பார்வையாளர்கள் ஒன்றும் செய்யாது செல்லலாம் என அறிவிப்பு பலகையை வைத்து சென்றனர்

அதன்பிறகு அன்று மாலை பயிற்சி ஓவியர் தன்னுடைய ஓவியத்தில் பார்வையாளர்கள் ஏதேனும் திருத்தம் செய்துள்ளனரா என பார்வையிட்டார் என்ன ஆச்சரியம் அவருடைய ஓவியத்தில் எந்த திருத்தமும் யாரும் செய்யவில்லை மறுநாளும் அதற்கடுத்தநாளும் அவர்வைத்தஓவியம் அப்படியேதான் இருந்தது

பயிற்சி ஓவியர் தன்னுடைய குருவிடம் இதுஎவ்வாறு சாத்தியமாயிற்று என வினவினார் பொதுவாக மக்கள் அனைவரும் மற்றவர்கள்மீது எப்போதும் குறை காண்பதில் மட்டும் முனைப்பாகவும் முன்னிலையிலும் இருப்பார்களே தவிர அந்த குறையை எவ்வாறு நிவர்த்திசெய்வது எனும்போது மட்டும் இதே மக்கள் யாருவம் முன்வராமல் பின்வாங்கிவிடுவார்கள் என்ற அடிப்படை கருத்தினை கூறினார்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...