ஞாயிறு, 6 மே, 2012

நம்முடைய திறனை அவ்வப்போது புதுப்பித்து வளர்த்து கொண்டே இருந்திட வேண்டும்


ஒரு மரவியாபாரியிடம் நல்ல திடகாத்திரமான மரம் வெட்டும் தொழிலாளி ஒருவர் தனக்கு மரம் வெட்டும்பணியை வழங்குமாறு கோரினார் உடன் மரவியாபாரியும் நல்ல கோடாரி ஒன்றை அவரிடம் கொடுத்து நாளொன்றுக்கும் அதிகபட்சம் எவ்வளவு மரங்களை மரம் அந்த மரம்வெட்டும் தொழிலாளி வெட்டுகின்றாரோ அந்த அளவிற்கு தாம் அவருக்கு கூலி வழங்குவதாக கூறியதை தொடர்ந்து அந்த மரம்வெட்டும் தொழிலாளியும் அதனை ஏற்றுகொண்டு அன்று 15 மரங்களை வெட்டினார் பரவாயில்லை நன்றாக மரம் வெட்டுகின்றாய் இவ்வாறே தினமும் மரம் வெட்டும் பணியை செய்திடுமாறு பாராட்டி அதற்கேற்ற கூலியையும் மரவியாபாரி வழங்கினார்

அதற்கடுத்த நாளில் மரம்வெட்டும் தொழிலாளியால் 12 மரங்களை மட்டுமே வெட்டமுடிந்தது

மூன்றாவது நாளில் 10 மரங்களை மட்டுமே அந்த மரம்வெட்டும் தொழிலாளியால் வெட்டமுடிந்தது

இவ்வாறு ஒவ்வொருநாளும் மரம்வெட்டும் தொழிலாளியால் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது என்னடா இது சோதனை நமக்கு மரம் வெட்டும் திறன் குறைந்து விட்டதோ என எண்ணி அந்த மரம் வெட்டும் தொழிலாளி மனம் கலங்கினார்

பின்னர் நேரடியாக மரவியாபாரியிடம் சென்று தன்னால் தற்போது முதல் நாளில் வெட்டிய அளவிற்கு மரங்களை வெட்டமுடியவில்லை அதற்காக மன்னித்து கொள்ளுமாறு வேண்டினார்

அதற்கு அம்மரவியாபாரி “உனக்கு வழங்கபட்ட கோடாரியை எப்போது கூர் தீட்டினாய் “ என வினவியதற்கு “கோடாரிக்கு கூர் தீட்டுவதா மரம் வெட்டுவதற்கே எனக்கு நேரம் போதுமானதாகஇல்லை இதில் கோடாரிக்கு கூர் தீட்டுவதற்கெல்லாம் நேரமே இல்லை “ என மரம்வெட்டும் தொழிலாளி கூறினார்

“அடடா முதலில் உன்னிடம் கொடுத்த கோடாரிக்கு கூர் தீட்டு “என்று அம்மரவியாபாரி கூறியபின் அவ்வாறே மரம்வெட்டும் தொழிலாளியும் தனக்கு வழங்கிய கோடாரிக்கு கூர் தீட்டியபின் அன்று மிகுதி பொழுது 5 மரங்களை வெட்டினார்

முன்பே இந்த ஆலோசனை தெரியாமல் போய்விட்டதே என எண்ணி அதன்பின்னர் தமக்கு வழங்கிய கோடாரிக்கு அவ்வப்போது கூர் தீட்டி அதிக எண்ணிக்கையில் அதாவது முதல் நாளில் வெட்டிய அதே அதே அளவு மரங்களை ஒவ்வொரு நாளிலும் மரங்களை வெட்டி போதுமான கூலியை பெற்று நிம்மதியாக வாழ்ந்துவந்தார்

இவ்வாறே நாமும் நம்முடைய திறனை மழுங்கிட விட்டிடாமல் அவ்வப்போது போதுமான அளவிற்கு புதுப்பித்து வளர்த்து கொண்டே இருந்தால் தான் இந்த போட்டிமிகுந்த உலகில் நம்மால் தலைநிமிர்ந்து வாழமுடியும்

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற

கருத்துகள் இல்லை: