திங்கள், 30 ஜூலை, 2012

உலகப்பொருளாதாரம் பற்றிய ஒரு சாதாரணமான விளக்கம்


வழக்கமான பொருளாதாரம் நம்மிடம் இரண்டு பசுக்கள் உள்ளன எனில் அவற்றுள் ஒன்றை மட்டும் விற்பனைசெய்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு காளை மாட்டை வாங்கி பயன்படுத்தினால் நமக்கு அவைகள் ஒன்றிற்கும் மேற்பட்ட கன்றுகளை ஈனும் அதன்மூலம் நமக்கு அருந்துவதற்கு பாலும் பால் பண்ணை பெருகுவதற்கான பசுமாடு அல்லது உழவு மற்றும் இதர வேலைக்காக எருதும் பெருகிகொண்டே யிருக்கும் அதனால் கிடைக்கும் வருமானத்தில் நாம் நிம்மதியாக வாழமுடியும்

இந்திய பொருளாதாரம் நம்மிடம் இரு பசுமாடுகள் உள்ளன அவற்றுள் ஒன்றினை நாம் ஏற்கனவே வாங்கியிருந்த கடனை தீர்வு செய்வதற்காக விற்பனை செய்துவிட்டோம் மிகுதி ஒன்றை கடவுளாக போற்றி துதித்து வருகின்றோம் ஆனால் நாம் வாழுவதற்கான வருமானம் மட்டும் கிடைக்கும் வழிதான் கேள்விக்குறியாக உள்ளது

பாகிஸ்தான் பொருளாதாரம் நம்மிடம் பசுக்கள் எதுவுமில்லை ஆனாலும் இந்தியா வைத்துள்ள மிகுதி ஒரு பசுமாடு நம்முடையது என அடாவடியாக உரிமைகொண்டாடிகொண்டு அவ்வப்போது எல்லைகடந்து ஆக்கிரப்பாளர்களையும் தீவிரவாதிகளையும் இந்தியாவிற்குள் அனுப்பி அந்த ஒரு பசுமாட்டினை அபகரித்திட கடும் முயற்சி செய்து வருகின்றோம் இதற்கான செலவுத்தொகையை அமெரிக்கா நமக்கு அவ்வப்போது வேறுஒரு காரணத்திற்காக வழங்கிடும் பொருள்உதவியை நாம் தவறாக பயன்படுத்திவருகின்றோம்

அமெரிக்க பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன அவற்றுள் ஒன்றினை விற்பனை செய்துவிட்டு மிகுதியாக இருக்கும் ஒன்றினை நான்கு பசுக்கள் அளவிற்கு பால் கொடுக்கும்படி அதனை துன்புறுத்தி அதற்கு அதிக நெருக்குதல் கொடுத்து வருகின்றோம் அதனால் அது இறந்து போகும் சூழல் ஏற்படுகின்றது உடன் நாம் போலியாக அடடா இந்த பசு எவ்வாறு இறந்தது யாரோ ஒரு தீவிரவாதியால்தான இறந்திருக்கும் என பாசாங்கு செய்து அடாவடியாக ஏமாந்த நாட்டின்மீது பொருளாதாரம் தடையும் அதற்கடுத்ததாக மற்ற நாடுகளின் துனையுடன் இராணுவ ஆக்கிரமிப்பு போரும் ஏற்படுத்துகின்றோம்

பிரிட்டன் பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன அவையிரண்டும் பைத்தியம் பிடித்து மதிமயங்கியுள்ளன இருந்தாலும் அமெரிக்காவோடு சேர்ந்து மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து நமக்கு கிடைக்கவேண்டிய வருமானத்தை உறுதிபடுத்திகொண்டுள்ளோம்

ஆஸ்திரேலியன் பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன அவையிரண்டில் ஒன்றுமட்டும் அமெரிக்காவும் பிரிட்டனும் அனுமதியளித்தால் மட்டும் நமக்கு அது பால்கொடுக்கும் மற்றொரு பசுவோ மிகமிக சோம்பேறியானது பால் கொடுப்பதை பற்றியே கவலை படாது அதனால் நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய முழுநேர உணவாக விஸ்கி பிராந்தியைமட்டும் நம்பியுள்ளனர் தொடர்ந்து அந்தஒரு பசுமட்டும்நீண்டநாட்கள் உயிரோடு இருப்பதற்கு அரும்பாடுபடுகின்றனர்

இத்தாலிய பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன ஆனால் அவையிரண்டும் நமக்கு எங்கேயிருகின்றன என்று மட்டும் தெரியவில்லை ஒருவேளை நம்முடைய மதிய உணவிற்காக அதனைகொன்று கறிசமைத்துவிட்டோமோ என சந்தேகமாக உள்ளது

சீனப்பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன நம்மிடம் உள்ள நூற்றுகணக்கான மக்களுக்கும் அந்த இரண்டு பசுக்களில் இருந்துமட்டும் பால்கொடுக்கவேண்டும் என பெருமுயற்சி செய்துவருகின்றோம் மக்கள்அனைவருக்கும் போதுமான வேலைவாய்ப்பு அளிக்கபட்டுள்ளன என்றும் மக்கள் அனைவரும் எருதினை போன்று கடுமையாக உழைத்து அந்த இரு பசுக்களிலிருந்து அனைவருக்கும் தேவையான பாலினைபெறவேண்டும் என்றும் கடுமையான உத்திரவிடபட்டு அதனை நடைமுறைபடுத்திவருகின்றோம் உண்மைநிலையை யாராவது சுட்டிகாட்டினால் அவரை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைத்துவிடும் வழக்கம் நம்மிடம் உள்ளது

மத்திய மற்றும் கீழைநாடுகளின் பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன நாம் அமெரிக்காவிற்கும் பிரிட்டனிற்கும் இராணுவப்படைகளின்மூலம் அவ்விரு பசுக்களையும் பாதுகாப்பு அளிப்பதற்கான அனுமதியை அளித்துவிட்டோம் அவ்வாறு பாதுகாப்பதற்காக வந்திருந்த இராணுவ படைவீரர்கள் அவ்விரண்டு பசுக்களையும் தம்முடைய மதிய உணவிற்காக அடித்து கொன்று பயன்படுத்திகொண்டனர் மிகுதி அவைகளின் எலும்புகளை மட்டும் நமக்கு திருப்பிதந்துவிட்டு தவறுதலாக இவ்வாறான செயல் ஏற்பட்டுவிட்டதென்றும் ஆயினும் அப்பசுக்களுக்கு பதிலாக அவர்களுக்கு இரு F16போர்விமானத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்

இலங்கை பொருளாதாரம் நம்மிடம் இரு பசுக்கள் உள்ளன ஆனால் அவ்விரண்டிற்கு பதிலாக இரு காளைமாட்டை பண்டமாற்று செய்து பெற்றுகொண்டோம் அக்காளைமாடுகளில் ஒன்றை நாட்டின் தலைமை நிருவாகியான ஜனாதிபதிக்கும் மற்றொன்றை எதிர்கட்சித்தலைவருக்கும் வழங்கிவிட்டோம் அவ்விரண்டு காளைகளும் நிலத்தில் முளைந்துள்ள புல்லை மேய்ந்து ஏர் உழும்நபணியை செய்வதற்கு பதிலாக நாட்டையே மேய்ந்துவிட்டன

சனி, 28 ஜூலை, 2012

நன்பரின் சிக்கலை களைந்து ஆற்றுபடுத்துதல்


என்னுடைய நண்பர் ஒருவர் ஒருநாள் பின்வருமாறு என்னிடம் உதவி கோரினார் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் பணி புரிந்துவந்தேன். இக்காலத்தில் நான் அனுபவம் நிறைய பெற்றும் என்னுடை பணியை அனுபவித்தும் வந்தேன். மேலும், நான் எனது வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு செய்வது மட்டுமல்லாது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் எனது வேலையை முடித்து வந்தேன், மேலும் கூடுதலாக என்னுடைய உதவி தேவைப்படும் போதெல்லாம் என்னுடைய உடனடி மேலதிகாரி அதனை எனக்கு தெரியப்படுத்தியவுடன் நான் எப்போதும் அதனை செய்வதற்கு தயாராக இருந்துவந்தேன். நான் என்னுடைய வேலையில் ஒரு படைப்பு ஆற்றல் கொண்ட அணுகுமுறையை பின்பற்றிவந்தேன் , அதனால் நிறுவனத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மிகவும் பயனுள்ள வழிகளில் தீர்வுசெய்து நிரூபித்துவந்தேன் . என்னுடைய பிரச்சனை என்னவென்றால், எங்களுடைய நிறுவனத்தில் சில முக்கியமான சிக்கலான பிரச்சினை வரும்போதெல்லாம் அதனை தீர்வுசெய்வதற்கான ஆலோசனைகளை அவ்வப்போது நான் என்னுடைய உடனடி மேலதிகாரியிடம் கூறியவுடன் அதனை அவர்செயற்படுத்தி தான்மட்டுமே அந்த தீர்வு ஏற்படுவதற்கு காரணமானவர் என்றும் அந்த பிரச்சினை மிகசுலபமாக தீர்வுசெய்வதற்கு தம்முடைய பங்களிப்பே மிகமுக்கிய காரணம் என்றும் எங்களுடைய மேல்அதிகாரிகளிடம் நல்லபெயரை எனக்கு கிடைப்பதற்கு பதிலாக அவர் தட்டிசெல்வார் இவ்வாறு பலமுறை நடைபெற்றுள்ளன. இது மட்டுமன்றி, அடிக்கடி எனக்கு கூடுதல் பணியை அளித்து உடன்முடித்து தரும்படி என்னுடைய உடனடி மேலதிகாரி கோரியபோதெல்லாம் நான் சோர்ந்து போகாமலும் காலநேரம் பார்க்காமலும் என்னுடைய பணியை செய்துவந்துள்ளேன்

ஆனால் அதற்கு பதிலாக என்னுடைய உடனடி மேலதிகாரியானவர் என் முயற்சிகளை முற்றிலும் புறக்கணித்து விடுவது மட்டமின்றி என் கடின உழைப்பை அங்கீகரிப்பதுகூட கிடையாது, . நான் இவ்வாறு கூடுதல்பணியை சுனக்கமின்றி செய்தது மற்றும் முன்முயற்சி எடுத்துவந்தது தவறு ஒன்றும் இல்லை ,

ஆனால் என்னுடைய உடனடி மேலதிகாரியானவர் இந்த என்னுடைய முயற்சியையும் கடினஉழைப்பையும் அவரது சொந்த முயற்சியாகவும் தன்னுடைய கடின உழைப்பால் இந்த விளைவு ஏற்பட்டதாகவும் எங்களுடைய மேலதிகாரிகளிடம் இதனை காண்பித்து தட்டிபறித்து செல்லும் செயல் எனக்கு துரோகம் செய்வதாகவும் எனக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் நிலையும் உருவாகின்றது இவ்வாறான சிக்கலான சூழலில் குறைந்த பட்சம் அவர் தனது சொந்த பணியை நிறைவேற்ற முடியாதநிலையில் இருந்தும் நான்தான் அதனைசெய்ததாக ஒப்புக்கொண்டிருந்தால்கூட மிகநன்றாக இருந்திருக்கும், இவ்வாறு தொடர்ந்து என்னுடைய கடின உழைப்பை எல்லாம் தன்னுடைய கடினஉழைப்பாக தட்டிபறித்துசெல்வது கண்டிப்பாக நான் என்னுடைய பணியின் நோக்கம் மற்றும் வேலையை துறக்கும்நிலை எனக்கு ஏற்படுத்துகின்றது . நான் இந்த நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்று எனக்கு தெரியாது. நான் என்னுடைய உடனடிமேலதிகாரியிடம் பேச வேண்டுமா அல்லது நான் அவரது மேலதிகாரிகளிடம் சென்று அவரது தவறான நடத்தை பற்றி கூற வேண்டுமா? நான் என்னுடைய இந்த வேலையை விட்டுவெளியேறி வேறொரு புதிய ஒன்றை தேடலாம் என இருக்கின்றேன். நான் முற்றிலும் குழம்பியுள்ளேன் தயவு செய்து. எனக்கு சரியான வழிகாட்டி உதவும்படியும் இந்த குழப்பத்திலிருந்து என்னை விடுவிக்கும்படியும் கேட்டுக் கொள்கின்றேன்,

அதற்கு நான் பின்வருமாறு பதிலை அவருக்கு விளக்கமாக அளித்து ஆற்றுபடுத்துதல் செய்தேன்

நம்முடைய இந்த கடின உயர்ந்த உழைப்பை தன்னுடையதாக தட்டிபறித்துசெல்லும் நம்முடைய உடனடி மேலதிகாரியின் செயலினால் நாம் விரக்தியடைந்தும் கலங்கியுள்ளதுமான நிலை முற்றிலும் அனுதாபத்துடன் புரிந்துகொள்ளக்கூடியதாகும், ஆனால் நாம் இந்நிலைமையை மிகநன்றாக திறமையாக சமாளிக்க வேண்டும். முதலில், நம்முடைய மேலதிகாரிகளிடம் உடனடி அதிகாரிகாரியினுடைய இவ்வாறான தவறான செயலை பற்றி அவருடைய முதுகிற்கு பின்னால் சென்று புகார் கூறுவது மிக அபத்தமான செயலாகும் மேலும் நாம் இதனை மேலதிகாரியிடம் இவ்வாறு காட்டிகொடுத்தோம் என விரைவில் அவரால் மிகஎளிதாக கண்டு பிடித்து விட முடியும் அதனைதொடர்ந்து அவர் செய்யும் அனைத்து செயல்களும் நிகழ்வுகளும் நம்முடைய நிலைமையை இன்னும் மோசமானதாக ஆக்கிவிடும் இது ஒரு மோசமான யோசனை ஆகும். மேலும், உடனடி மேலதிகாரி யானவர் நாம் இந்நிறுவனத்திற்கும் அவருக்கும் விசுவாசமாக செயல்படவில்லை என்றும் நாம் நம்முடைய ஆலோசனைகளை மற்றவர்களுடன் பகிர்த்துகொள்வதற்கு பதிலாக நம்முடைய தனிப்பட்ட உயர்வைமட்டுமே நாம் கருத்தில் கொண்டுள்ளதாகவும் ஆகிய தவறான எண்ணத்திற்கு இட்டுசெல்லும் வழிஏற்பட வாய்ப்புள்ளது எனவே பின்வரும் ஒருசில ஆலோசனைகளை இவ்வாறான சூழலில் முயற்சிசெய்து பின்பற்றி இந்த சிக்கலில் இருந்து விடுபடமுயலற்சி செய்யலாம்

உடனடிமேலதிகாரிஏன்அவ்வாறு செய்தார் என நம்முடையஉடனடி மேலதிகாரியிடம் நேரடியாக கேள்விஎழுப்பலாம் அவ்வாறு கேள்வியை எழுப்பும்போது மிகஅமைதியாக கோபம் எதுவும் நமக்கு ஏற்படாமல் பாதுகாக்கவேண்டும் நம்முடைய பேச்சுத்த தொனி மோதல்போக்கு கொண்டதாக இருக்க கூடாது மேலும் பின் கதவு வழியாக சென்று நம்முடைய இந்த கருத்துகளுக்கான அவருடைய பதில்செயல் என்னவாக இருக்கும் என அறிந்துகொள்வது இதற்கு மிகச்சிறந்த தீர்வு ஆகும் . நம்முடைய ஆலோசனைக்கும் முயற்சிகளுக்கும் நாம் எதிர்பார்க்கும் யோசனைக்கும் இந்நிறுவனமேலதிகாரிகள் என்னவகையான ஒப்புதலை வழங்கவிருக்கிறார்கள் என நம்முடைய உடனடிமேலதிகாரிமூலம் அறிந்துகொள்ள முடியும் நம்முடை கடினஉழைப்பிற்கும் முயற்சிக்கும் உடனடியாக அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றாலும் உடனடிமேலதிகாரி யானவர் நம்முடைய இந்த முயற்சியையும் ஆலோசனையும் கருத்தில் கொணடு நம்முடைய பதவிஉயர்வு கிடைப்பதற்கான காலங்களில் அதனை மிகவிரைவில் கிடைத்திட ஆவன செய்வதற்கான வாய்ப்பை குறிப்பால் நாம் அறிந்துகொள்ளமுடியும்

மற்றொரு வழிமுறையில் சிக்கலை தீர்வுசெய்வதற்கான யோசனைகள் நமக்கு தோன்றியவுடன் அப்படியே அதனை உடனடியாக வெளியிடாமல் தகுந்த நேரம் காலம் வரும்வரை காத்திருந்து அந்நிறுவனத்தின் ஆலோசனைகூட்டம் நடைபெறும் போது அல்லது நம்மைசுற்றி நம்மோடு பணிபுரியும் மற்ற சகபணியாளர்கள் கூட்டமாக குழுமிமற்றவர்கள் கூறுவதை கேட்கதயாரக உள்ள நேரத்தில் மட்டுமே நமது நிறுவனத்தின் சிக்கலை தீர்வுசெய்வதற்கான நம்முடைய சொந்த கருத்துக்களை கூற வேண்டும். இந்த வழியில் நம்முடைய உடனடி அதிகாரியானவர் நம்மை தட்டிகழித்து நம்முடைய ஆலோசனைகளை தம்முடையதாக காண்பித்து நமக்கு கிடைக்கவேண்டிய பாராட்டுகளை அவருடையதாக தட்டிபறிக்கமுடியாது அப்படியே இருந்தாலும், குழுமியிருந்த மற்ற பணியாளர்கள் நம்முடைய கடின உழைப்பாலும் ஆலோசனையாலும் மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வுஏற்பட்டுள்ளதாக தெரிந்துகொள்வார்கள் முடிவில் நிறுவனத்தின் உயர்அதிகாரியும் இந்த மேலான உண்மையை தெரிந்து நமக்கு தகுந்த சமயத்தில் பாராட்டுதலும் தக்க சன்மானமும் அவரால் நமக்கு கிடைக்கும் நிலை ஏற்படும்.

குறிப்பு இந்த குறிப்புகள் எந்தபணியாளரும் தன்னுடைய பணியின்போது தாம் எதிர்கொள்ளும் இவ்வாறான சிக்கலை தீர்க்க உதவும் என நம்புகின்றேன்.

வியாழன், 26 ஜூலை, 2012

பங்குசந்தை விளக்கம்


முன்னொரு சமயத்தில் கிராமம் ஒன்றிற்கு வியாபாரியொருவர் வந்து அந்தவூர்மக்களிடம் குரங்கு ஒன்றிற்கு ரூபாய்பத்துவீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் தான் வாங்கி கொள்வதாக அறிவிப்பு செய்தார் உடன் அந்தவூர் கிராமமக்கள் அனைவரும் ஊர்முழுவதும் தேடிபிடித்து குரங்குகளை கொண்டுவந்து அவ்வியாபாரியிடம் குரங்கு ஒன்றிற்கு ரூபாய்பத்துவீதம் விற்றனர் குறிப்பிட்டநாளிற்கு பிறகு குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியை கைவிட்டனர்

பின்னர் அதேவியாபாரி குரங்கு ஒன்றிற்கு ரூபாய் இருபது வீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் வாங்கி கொள்வதாக மறுஅறிவிப்பு செய்தார் மீண்டும் மக்கள் புதுஉத்வேகம் பெற்று ஊருக்குஅருகிலிருக்கும் தம்முடைய நிலங்களில் சுற்றிதிரிந்த குரங்குகளை தேடிபிடித்து கொண்டுவந்து குரங்கு ஒன்றிற்கு ரூபாய் இருபது வீதம் விற்பனை செய்தனர் குறிப்பிட்டநாளிற்கு பிறகு குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியை கைவிட்டனர்

அதன்பின்னர் அதேவியாபாரி மூன்றாவது முறையாக குரங்கு ஒன்றிற்கு ரூபாய் முப்பது வீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் வாங்கி கொள்வதாக மூன்றாவது முறையாக மறுஅறிவிப்பு செய்தார் மூன்றாவதுமுறையாக மீண்டும் மக்கள் புதுஉத்வேகம் பெற்று தம்முடைய நிலங்களுக்கு அருகிலிருக்கும் காடுகளில் சுற்றிதிரிந்த குரங்குகளை தேடிபிடித்து கொண்டுவந்து குரங்கு ஒன்றிற்கு ரூபாய் முப்பது வீதம் விற்பனை செய்தனர் குறிப்பிட்டநாளிற்கு பிறகு குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியை கைவிட்டனர்

அதன்பின்னர் அதேவியாபாரி நான்காவது முறையாக குரங்கு ஒன்றிற்கு ரூபாய் நாற்பது வீதம் எத்தனை குரங்குள் வேண்டுமானாலும் வாங்கி கொள்வதாக நான்காவது முறையாக மறுஅறிவிப்பு செய்தார் நான்காவது முறையாக மீண்டும் மக்கள் புதுஉத்வேகம் பெற்று தம்முடைய ஊரின் அனைத்து இடங்களிலும் தேடியும் ஒருசிலகுரங்குகளே கிடைத்தன அதனை கொண்டுவந்து குரங்கு ஒன்றிற்கு ரூபாய் நாற்பது வீதம் விற்பனை செய்தனர் அதற்கு மேலும் குரங்கு எதுவும் கிடைக்கவில்லை என இந்த குரங்குபிடித்துகொண்டுவந்து விற்கும் பணியையே கைவிட்டனர்

இந்நிலையில் அந்த குரங்கு வாங்கும் வியாபாரி தம்முடைய உதவியாளரை அழைத்து தமக்குபதிலாக இந்த குரங்கு வாங்கும் பணியை பார்த்துகொள்ளுமாறும் தான் தம்முடைய ஊருக்கு சென்றுவருவதாகவும் கூறி சென்றார்

மறுநாள் அவ்வியாபாரியின் உதவியாளர் அவ்வூர் மக்களிடம் தான் பாதுகாத்து வைத்துள்ள குரங்குகளை குரங்குஒன்றிற்கு முப்பதுவீதம் விற்பனைசெய்யவிருப்பதாகவும் தம்முடைய முதலாளி வந்தால் அதே குரங்குகளை குரங்குஒன்றிற்கு நாற்பதுவீதம் வாங்கிகொள்வார் என்றும் புதிய அறிவிப்பினை வெளியிட்டார்

இந்த புதியஅறிவிப்பினை கேள்விபட்ட அவ்வூர் மக்கள் அனைவரும் இன்று அக்குரங்களை வாங்கி அதேகுரங்களை நாளை அந்த வியாபாரியிடம் விற்பனைசெய்தால் நமக்கு ஒரேநாளில் குரங்கு ஒன்றிற்கு பத்துரூபாயும் அலைந்து திரிந்து தேடிபிடிக்கும் சிரமம் எதுவுமில்லாமல் கிடைக்குமே என்ற பேராசை கொண்டு தம்முடைய சேமிப்புகள் அனைத்தையும் ஒன்றுசேர்த்து கூண்டிலிருந்த அனைத்து குரங்குகளையும் குரங்குஒன்றிற்கு முப்பதுவீதம் வாங்கிகொண்டனர்

அவ்வாறு அனைத்து குரங்குகளும் விற்றவுடன் அதாவது அவ்வூர் மக்களிடம் பொருட்களை வாங்கி அவ்வூர் மக்களிடமே அதிக இலாபத்துடன் விற்பனை செய்த பணத்தினை எடுத்துகொண்டு அவ்வியாபாரியின் உதவியாளர் அன்று சாயுங்காலமே மறுநாள் தம்முடைய முதலாளி வருவார் என உறுதிகூறி தம்முடைய ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்

பிறகு மறுநாள் அக்குரங்கு வியாபாரி திரும்பி வரவேயில்லை மறுநாள் மட்டுமல்லாது எப்போதுமே அக்குரங்கு வியாபாரியும் அவருடைய உதவியாளரும் அவ்வூர்பக்கம் திரும்பி வந்ததேயில்லை பழையபடி குரங்குகள் மட்டுமே அவ்வூர்முழுவதும் சுற்றிதிரிந்தன இதுதான் ஒருபங்கு சந்தையின் நடைமுறையாகும்

ஒரு விவசாயியின் எதிர்காலம்?


எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு சிறு விவசாயி. அவருக்கு ஏரிப் பாசனத்தில் நிலமிருந்தது. ஏரிக்கு நீர் வரும் வழிகளில் கல்குவாரிக்காக பள்ளம் தோண்டி கற்களை வெட்டியெடுத்ததால் ஏரியானது முழுவதுமாக நிரம்பி பல ஆண்டுகளாகிவிட்டன. அதனால் விவசாயம் செய்வதற்குச் சிரமமான நிலையில் இருந்தபோது நிலவள வங்கியொன்று புதிய குழாய் கிணறு அமைப்பதற்கு அவருக்கு கடன் கொடுத்தது. டீசல் விற்கும் விலையில் நீர் இறைக்க டீசல் எஞ்சினைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் கையும்காலும்கூட மிஞ்சாது என்பதால் குழாய் கிணற்றிலிருந்து நீர் இறைக்க மின் மோட்டார் அமைத்தால் நல்லது என எண்ணினார்.

மின்வாரியமானது தொழில்துறைகளுக்கெல்லாம் கேட்டவுடன் மின் இணைப்பு கொடுத்துவிடும். ஆனால் ஒரு விவசாயி விண்ணப்பிக்கும்போது மட்டும் வரிசை முன்னுரிமைப்படி தோராயமாக பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் மின் இணைப்பு கொடுப்பதற்கு உத்தரவிடுவார்கள். இதற்கு மாற்று வழியாக மின்வாரியத்தில் ரூ. 25 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தினால் உடனடியாக இணைப்பு கிடைக்கும் என்பதால் மின்மோட்டார், இதர உபகரணங்கள் மற்றும் மின்வாரிய வைப்புத்தொகையையும் சேர்த்து நிலவள வங்கியில் நீண்டகாலக் கடனாகப் பெற்று குழாய் கிணறு தோண்டி மின் மோட்டாரும் அமைத்தார்.

அந்த ஆண்டு சிறிதளவு கூடுதலாக மழை பொழிந்தால் நன்செய் பயிர் செய்யலாமே என நெற்பயிரை நட்டு பராமரித்து வந்தார். இதற்கான நடைமுறை மூலதனமாக கைமாற்று வாங்கி சரி செய்தார். நெல் அறுவடையாகி களத்து மேட்டிற்கு வரும்போது கைமாற்றாக வாங்கிய கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்தும்படி நெருக்கியதால் விளைந்து வந்த நெல்லை வேறுவழியின்றி மிகக் குறைந்த விலைக்கு விற்று கடனைத் தீர்த்தார்.

சரி நிலவள வங்கி மற்றும் இதுபோன்ற கடன் தொல்லையைத் தீர்ப்பதற்கு பணப்பயிரான கரும்பைப் பயிரிட விரும்பினார். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே கரும்புப் பயிரைப் பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. எனவே தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல விலை கொடுக்கின்றனரே என்று பதிவில்லாமல் பயிரிடலாமே என மனைவியின் காதில் மூக்கில் இருந்த நகைகளை அடமானம் வைத்துப் பயிரிட்டார். அந்த ஆண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததாலும் சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாது கரும்பைப் பயிரிட்டதாலும் “அடிமாட்டு விலைக்கு’ விற்றார்.

கரும்பும் பழி வாங்கிவிட்டது என கலங்கி கரும்பின் வேர்கட்டையை பறித்துப் போட்டு விட்டு, நிலத்தை உழுது, எள்ளைத்தான் விதைத்துப் பார்ப்போமே என முடிவெடுத்தார். அறுவடையின்போது இதுவும் (எள்ளும்) சரியான விலையில் விற்பனை ஆகாததால் வேறு கூடுதல் பணியாக ஆடு வளர்க்கலாம் என்று நிலவள வங்கியிலிருந்து மேலும் கடன் பெற்று ஆடுகள் வாங்கி வளர்த்தார். அந்த ஆடு முழுவதும் நோய் வந்து இறந்து போனதால் இழப்பை ஈடுகட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனத்தை அணுகியபோது பிரிமீயத் தொகை வாங்குவதற்கு மட்டும் குழைய குழையத் தேடி வந்தவர்கள் இழப்பீடு கேட்கும்போது மட்டும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வரியில் இதற்கான விதி சேர்க்கப்படவில்லை என்றும் அதனால் இந்த இழப்பீடு தொகை கிடைக்காது எனவும் கூறி கைவிரித்து விட்டனர்.

சரி வேறு என்னதான் செய்வது என எண்ணி மீண்டும் தன்னுடைய நிலத்தில் கத்தரி பயிரிட்டார். திருஷ்டிபடும்படி கத்தரி செடி ஆள் உயரம் வளர்ந்து நல்ல காய் காய்த்தது. இவருடைய துரதிர்ஷ்டம் அந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்ததால் காய் பறித்த கூலி, ஏற்றிச் சென்ற பேருந்துக் கட்டணம் மற்றும் இறக்குக் கூலியைக் கூட கத்தரிக்காயின் விற்பனை வருவாயில் சரிக்கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்காக இவருடைய நிலத்திற்கு அருகில் சென்ற ஓடையில் பெரிய குழாய்க் கிணறு ஒன்றை அமைத்து நீரை உறிஞ்சியதால் இவருடைய சிறிய குழாய்க் கிணற்றில் நீர் வற்றிவிட்டது. அரசு நிர்வாகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு அந்த அளவுக்கு ஆழமாக குழாய்க் கிணறு அமைக்க வசதி இல்லாததாலும் நிலவள வங்கிக் கடனை உடனே திரும்பச் செலுத்தவேண்டிய நிர்பந்தத்தினாலும் என்ன செய்வது என்று தத்தளித்தார். இச்சமயத்தில் நிலவள வங்கியில் கடன் பெற்று நிலுவையாக உள்ளவர்களின் கடனுக்கான வட்டியில் பாதியையும் மற்றும் அசல் தொகை முழுவதையும் செலுத்தினால் எஞ்சிய பாதி வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. உடனடியாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சுற்றத்தாரிடம் கைமாற்றுக் கடன் வாங்கி கால்பங்கு தொகையை அவர் செலுத்தினார். குழாய்க் கிணற்றில் நீர்வற்றிவிட்டதால் தொடர்ந்து நிலத்தில் பயிரிட முடியவில்லை; என்ன செய்வது என நிலத்தை விற்று நிலவள வங்கி மற்றும் இதர கடன்களையாவது தீர்த்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என எண்ணினார். இதுதான் சமயம் என அவருடைய நிலத்தை மிகக் குறைந்த விலைக்குக் கேட்டனர். கடனை மட்டும் சரி செய்கிற அளவுக்காவது தொகை வந்தால் போதும் என்று நிலத்தை விற்று கடன் அனைத்தையும் தீர்த்துவிட்டார்.

இந்த நடவடிக்கை முடிந்த சமயத்தில் புதியதாகப் பொறுப்பேற்ற அரசு நிலவள வங்கியில் நிலுவையில் உள்ள கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்தது. அது மட்டுமன்றி, அவருடைய ஊரின் அருகாமையிலுள்ள தரிசு நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப் போவதாகவும் அறிவித்தது. அதனால் அவர் விற்ற நிலத்தை அவரிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கியவர் “யானை விலை குதிரை விலையாக’ மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் கண்டார். ஆனால் இவரோ இப்போது ஒரு நிலமற்ற ஏழை கூலி விவசாயத் தொழிலாளியாகப் பிழைப்பைத் தேடி நகரத்தை நோக்கிச் சென்றார்.

இவருடைய இந்த நிலைமையை யாரிடம் சென்று முறையிடுவது? இத்தகைய விவசாயிகளைக் காப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொரு கிராமத்திலும் அறுவடை சமயத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை நல்ல விலை கிடைக்கும்போது விற்பதற்கு ஏதுவாக சிறிது காலம் பாதுகாப்பாக விளைபொருள்களை வைத்திருப்பதற்கான குளிர்பதன கிடங்கை அமைக்க வேண்டும். அதுவரையில் நடைமுறைச் செலவை ஈடுகட்டுவதற்காகக் குறைந்த வட்டியில் இந்த விளைபொருள்களை அடமானம் வைத்துக் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் இவரைப் போன்ற விவசாயிகளுக்கு விளைவித்த பயிர்களிலிருந்து முழு வருமானமும் கிடைக்கும். அவர்களின் வாழ்வும் ஏற்றும் பெறும். வங்கிகள் நடைமுறை மூலதனம் வழங்கும்போது பயிர்கள் மூலம் சரியான வருமானம் கிடைக்காதபோது அடுத்த பயிருக்கான கடனை முந்தைய கடனை அடைத்தால்தான் மறுபடியும் கடன் கொடுக்க முடியும் என மறுக்கக் கூடாது.

அதற்குப் பதிலாக மேலும் சிறிது கடனைக் கொடுத்து நொடிந்த விவசாயிகளை கைதூக்க உதவ வேண்டும். விவசாயிகளின் பயிர்கள், கால்நடைகள் போன்றவற்றுக்கு இழப்பு ஏற்படும்போது காப்பீட்டு நிறுவனங்கள் சரியான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க தகுந்த ஏற்பாடு செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும். அதை மட்டும் செய்தாலே போதும். விவசாயிகள் தற்கொலை பெருமளவில் தடுக்கப்பட்டுவிடும்

(கட்டுரையாளர்: தலைமைக் கணக்கர், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு). நன்றி. தினமனி

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...