வியாழன், 22 ஆகஸ்ட், 2013

பிரச்சினை என்னவென்று அதன் அடிப்படையை தெரிந்து கொள்ளாமலேயே தவறான முடிவை எடுத்துவிடுகின்றோம்



     புதியதாக கணினியின் மென்பொருள் அறிவியல் பட்டம் பெற்ற ஒரு மாணவன்  பிரபலமான கணினிமென்பொருள் மேம்படுத்தும் ஒரு நிறுவனத்தின் நிரல் தொடர்கட்டளை எழுதிடும் வல்லுநர் பணியில் சேருவதற்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டபோது அந்நிறுவனத்தின் வயது முதிர்ந்த தேர்வாளர் தம்பி!  நீ கணினி மென்பொருளின் தருக்கமுறைமை பற்றி நல்ல அறிவு பெற்றிருக்கின்றாயா ? “ என வினவியபோது  அதிலென்ன சந்தேகம் ஐயா!” என பதிலிருத்தான் அப்படியானால் சரி! நான் புதிர்  ஒன்றை கூறுகின்றேன் அதற்கான விடையை மிகச்சரியாக கூறுகின்றாயா?  என பார்த்தபின்னரே உன்னை இந்த நிறுவனத்தில் பணிக்கு எடுப்பது பற்றி முடிவுசெய்யமுடியும் எனக்கூறினார்.
 1தொடர்ந்து  இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என அந்த தேர்வாளர் வினவினார்.
 உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளியேஎன பதிலிருத்தான்  தவறு!   முகத்தில்  கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியே, தன்னுடைய முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார் . ஏனெனில் முகத்தில்  கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளி எதிரில் உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது சுத்தமாக இருப்பதை அறிந்து நம்முடைய முகமும் சுத்தமாக இருக்கும் என எண்ணி விட்டுவிடுவார்.ஆனால், முகத்தில்  கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியானவர்  எதிரில்உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது அந்த  முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருப்பதை கண்டு தன்னுடைய முகமும் அவ்வாறே இருக்கும் என எண்ணி தன்னுடைய முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார். எனக்கூறினார் அந்த தேர்வாளர். .  

   2ஐயா! வேறு ஒரு வாய்ப்பினை வழங்குங்கள் என அந்த மாணவன் கூறியபோது
 சரி! இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என இரண்டாவது முறை அந்த தேர்வாளர் வினவினார்.
  உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர் முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியேஎன பதிலிருத்தான்
தவறு!   இருவருமே தத்தமது முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார்கள்  ஏனெனில்  முகத்தில்  கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியானவர்  எதிரில்உள்ள தொழிலாளியின் முகத்தை பார்க்கும்போது அந்த  முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருப்பதை கண்டு தன்னுடைய முகமும் அவ்வாறே இருக்கும் என எண்ணி தன்னுடைய முகத்தினை  கழுவி தூய்மை  செய்வார் .அதனை கண்டு முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளியே தன்னுடைய முகத்தை கழுவி சுத்தபடுத்திடும்போது ,ஏன் நாமும் நம்முடைய முகத்தை கழுவி சுத்தபடபடுத்திடக்கூடாது? என அவரும் தன்னுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்திகொள்வார் எனக்கூறினார் அந்த தேர்வாளர்.
 3 ஐயா! மற்றொரு வாய்பிபினை வழங்குங்கள் என அம்மாணவன் வேண்டியபோது மீண்டும் மூன்றாவது முறையாக   
இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என மூன்றாவது முறை அந்த தேர்வாளர் வினவினார்.
  உடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர் இரண்டு தொழிலாளியுமே தங்களுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்திகொள்வார்கள் என பதிலிறுத்தபோது
  தவறு!  இருவருமே தங்களுடைய முகத்தினை கழுவமாட்டார்கள். ஏனெனில்  முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருக்கும் தொழிலாளி எதிரில் இருக்கும் தொழிலாளியின் முகம் தூய்மையாக  இருப்பதை பார்த்து தன்னுடைய முகமும் தூய்மையாக இருக்கும் என தன்னுடைய முகத்தை கழுவி சுத்தபடுத்திடமாட்டார்.   ஆனால் முகத்தில் கரியும் சாம்பலும் படியாத தொழிலாளி எதிரில் இருக்கும் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்த தொழிலாளியே தன்னுடைய முகத்தினை கழுவி சுத்தபடுத்தாதபோது நாம் மட்டும் ஏன் கழுவவேண்டும் என விட்டுவிடுவார் எனகூறினார். அன்த தேர்வாளர்.
4சரி! ஐயா! இறுதிவாய்ப்பாக  ஒரு கேள்வியை கேளுங்கள் ஐயா!” என அந்த மாணவன் வேண்டியபோது
  இரு தொழிலாளர்கள் ஒரு கொதிகலணின் புகைபோக்கியிலிருந்து இறங்கி வந்தார்கள் அவர்களில் ஒருவர் முகத்தில் கரியும் சாம்பலும் படிந்திருந்தது மற்றொருவர் முகம் அவ்வாறு  எதுவும் படியாமல் சுத்தமாக இருந்தது  இருவரில் யார் முகத்தினை கழுவி தூய்மை  செய்வார் என இறுதியாக நான்காவதுமுறை அந்த தேர்வாளர் வினவியபோது
  என்னடாஇது ?எப்படி பதில் கூறினாலும் தருக்க முறையில் தவறு என வேறு பதிலையே இந்த தேர்வாளர் கூறுகின்றாரே எனத்தடுமாறி ஐயா இந்த கேள்விக்கான பதிலை என்னால் கூறஇயலவில்லை  நான் தருக்கஇயலில் கரைகண்டவன் அன்று ஒருமாணவன் மட்டுமே என மிகபணிவுடன்கூறியபோது
  அதனாலெனென்ன தம்பி!பரவாயில்லை ! ஒரு கொதிகலணின் புகை போக்கியில்இருந்து இருவர் இறங்கி வரும்போது எவ்வாறு ஒருவர்முகத்தில் மட்டும் கரியும் சாம்பலும் படிந்திருக்கும்? இருவர் முகத்திலுமே கரியும் சாம்பலும் படிந்திருக்கும்.என்ற அடிப்படை உண்மையை தெரிந்துகொள் . அதனால் முதலில் பிரச்சினை என்ன அதனுடைய அடிப்படையான இயல்பு, குணநலன் என்னவென தெரிந்து கொள் அதன்பின் தருக்கவியலை அதில்புகுத்தி அந்த பிரச்சினைக்கான விடையை கண்டுபடிக்க முயற்சிசெய் என விடை கொடுத்து அனுப்பினார் அந்த தேர்வாளர்.
   ஆம்,ஆம். நம்மில் பலரும்இதேபோன்றே எந்தவொரு நிகழ்வையும முழுவதுமாக அதனுடைய இயற்கை அமைவை பற்றியும் அந்நிகழ்வு ஏற்படுவதற்கான அடிப்படை  உண்மைகளை பற்றியும்  முழுவதும் தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக அறிந்துகொண்டு தவறான முடிவெடுத்து நம்முடைய வாழ்வில் அல்லல்படுகின்றோம். என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

எந்த நிகழ்வு நடந்தாலும் அதனை ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகின்றோம்


ஒருநாள் இரண்டாவது தளத்தில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கொத்தனாரை மூன்றாவது தளத்திலிருந்து மேற்பார்வையாளர் உடனடியாக அவரை நேரில் அழைத்து ஒருசில ஆலோசனைகளை செயற்படுத்துமாறு கூறுவதற்காக அந்த கொத்தனாரின் பெயரிட்டுஅழைத்தபோது அந்த கொத்தனார் திரும்பி பார்க்காததால் அந்த கொத்தனாரின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டு ஒரு பத்து ரூபாய் தாளை வீசி ஏறிந்தார் உடன் கொத்தனாரும் ஏதோ காற்றில் ரூபாய் தாள் தவறி வந்துவிட்டது போலும் நம்முடைய அதிருஷ்டம்தான் என எண்ணி அந்த பத்து ரூபாய் தாளை எடுத்து சட்டைபயில் வைத்து கொண்டு தன்னுடைய பணியை தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்

பின்னர் மேற்பார்வையாளர் நூறு ரூபாய் தாளையும் அதன்பின்னர் ஐந்நூறு ரூபாய் தாளையும் வீசி எறிந்தபோதும் அதே நிலைமை தொடர்ந்தது

அதனால் எரிச்சலுற்ற மேற்பார்வையாளர் சிறு கல் ஒன்றை எடுத்து கொத்தனாரை நோக்கி வீசிஎறிந்தபோது மிகச்சரியாக அந்த சிறு கல்லானது கொத்தனாரின் தலையில் விழுந்தவுடனே வலிபொறுக்கமுடியாமல் தலையை தடவிகொண்டே மேல்தளத்தை நோக்கி திரும்பினார் அங்கு அவருடைய மேற்பார்வையாளர் அவரை மேலே வருமாறு அழைத்ததை தொடர்ந்து அங்கு சென்றார்

இவ்வாறே நாமும் நம்முடைய வாழ்வில் ஏதேனும் சிறு நல்ல நிகழ்வு நடந்தால் அதனை நம்முடைய அதிருஷ்டம் என எண்ணி மகிழ்கின்றோம் அது ஏன் நடந்தது என ஆராய்ந்து பார்க்க தவறிவிடுகின்றோம் ஆனால் துன்ப நிகழ்வு ஏற்படும்போது மட்டும் நாம் உடனே எனக்குமட்டும் ஏன் இவ்வாறான துன்பம் ஏற்படுகின்றதுஎன அதை தீர்வு செய்வதற்கான நடவடிக்கை எதுவும் செய்திடாமல் மனச்சோர்வு அடைந்துவிடுகின்றோம்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

யாரையும் ஆளின் தோற்றத்தை வைத்து தவறாக முடிவுசெய்திட வேண்டாம்


மனநல மனைக்கு தேவையான பொருட்களை வழக்கமாக ஏற்றிவரும் சுமைஉந்துவண்டியின் ஓட்டுநர் பொருட்களை இறக்கியபின் தன்னுடைய வண்டியின் அனைத்து சக்கரங்களின் டயர்களும் நல்லநிலையில் உள்ளதாவென சரிபார்த்தபோது ஒருசக்கரத்தில் காற்றில்லாமல் மிகமேசமாக இருப்பதை கண்டு உடனடியாக அதனை கழற்றி தயார்நிலையில் உள்ள மாற்று சக்கரத்தை மாற்றியமைக்கலாம் என முனையும்போது அந்த சக்கர்த்தை பொருத்துவதற்கான திருகாணிகள் அனைத்தும் தவறி அருகில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடைநீரில் விழுந்துவிட்டன

அய்யோ திருகாணிகள் இல்லாமல் எவ்வாறு அந்த பழுதடைந்த சக்கரத்திற்குபதிலாக மாற்று சக்கரத்தை பொருத்துவது என தவித்து நின்றபோது அந்தவ்வழியாக ஒருநமனநலன் பாதித்த ஒருநபர் கடந்து செல்லும்போது இந்த ஓட்டுநருடைய நிலையை பார்த்து என்ன நடந்து என வினவியபோது நடந்த நிகழ்வை ஓட்டுநர் அந்த மனநிலை பாதித்தநபரிடம் கூறினார்

இந்த நிகழ்விற்காகவா கலங்கியபோய் இருக்கின்றீர்கள் பயப்படவேண்டாம் மிகுதி சக்கரங்களில் இருந்து ஒவ்வொரு திருகாணிகளை கழற்றி இதில் பொருத்தி அருகில் இருக்கும் பணிமனைவரை பத்திரமாக மெதுவாக ஓட்டிசென்றுவிட்டு அங்கு உங்களுக்கு தேவையான திருகாணிகளை வாங்கி பொருத்தி வழக்கம்போன்று ஓட்டி செல்லலாமே என பதிலிருத்ததை கண்டு அடடா அருமையான ஆலோசனையாயிற்றே இவ்வளவு புத்திசாலியாக இருக்கும் நீங்கள் எப்படி இந்த மனநல மருத்தவமனைக்கு வந்து சேர்ந்தீர்கள் என இந்த ஓட்டுநர் ஆச்சரியம்க கேட்டபோது நான் மனநலன் பாதித்தவனேயன்றி முட்டாள் அன்று என கூறிசென்றார்

அதாவது யாரையும் ஆளின் தோற்றத்தை வைத்து இப்படித்தான் இருப்பார் என தவறாக முடிவுசெய்திட வேண்டாம் அவரவருடைய உண்மையான குணநலன்களையும் செயல்களையும் தெரிந்து அதன்பின் முடிவுசெய்க என்பதேயாகும்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...