ஒருமனிதன் அருகிலிருந்த மற்றொரு ஊருக்கு சென்றுகொண்டிருந்தான் அவ்வாறு அவன் சென்றுகொண்டிருந்த போது நடைபாதையில் கல்ஒன்று குறுக்காக இருந்து அவனுடைய கால் பாதத்தில் தடுத்ததால் உடன் அம்மனிதன் தடுமாறி விழஇருந்தவன் சமாளித்து நின்றபின் “கொடுமை! கொடுமை! நம்முடைய அரசாங்கம் இந்த சாலையை சரியாகவே பராமரிக்கவில்லையே!” என திட்டிகொண்டு அந்த கல்லை தாண்டி சென்றான்.
அவ்வாறே அன்று முழுவதும் ஏறத்தாழ பத்து அல்லது பதினைந்து நபர்களும் அந்த கல் தடுத்ததால் தடுமாறி விழுவதும் அல்லது விழாமல் சமாளித்து நின்று அந்த கல்லை தாண்டி செல்வதுமாக இருந்தனர் மேலும் அவ்வனைவரும் அரசாங்கத்தை மட்டுமல்லாது அந்த சாலையை உருவாக்கியவனையும் பாரமரித்தவனையும் கடுமையான சொற்களால் திட்டிகொண்டே சென்றனர் ஆயினும் அவர்கள் எவரும் வேறுஎதுவும் செய்யவில்லை
இந்த நிலையில் வேறொரு நல்லமனிதன் அதே பாதை வழியாக செல்லும்போது அவனுடைய காலில் அதே கல்இடறியது உடன் அம்மனிதன் மற்றவர்களை போல அரசாங்கத்தையும் சாலையை உருவாக்கியவனையும் பாரமரித்தவனையும் கடுமையான சொற்களால் திட்டாமல் நம்மை போன்ற இந்த பாதையின் வழியாக நடந்து வருபவர்களுக்கு அந்த கல்லால் துன்பம் ஏற்படக்கூடாது என குனிந்து அந்த கல்லை மிகமுயன்று பிடுங்கி அப்புறபடுத்தினான்
அப்போது அந்த கல்லின் அடியில் ஒருதுண்டுசீட்டு இருந்தது அதனைபிரி்த்து படித்தான் அதில் “ஏ! மனிதனே! மற்றவர்களை போன்றில்லாமல் மற்றமனிதர்கள்யாரும் துன்பம் அடையாமல் இருப்பதற்காக கல்லை இந்த பாதையிலிருந்து எடுத்து அப்புற படுத்தினாயே! நீதான் இந்த நாட்டின் உண்மையான செல்வம். உன்னை போன்றவர்கள்தான் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் மிகமுக்கியமானஅடிக்கல் போன்றவர்கள் ஆவீர்கள்” என குறிப்பிடபட்டிருந்தது.
பொதுவாக ஒருசிலர் எப்போதும் பேசிகொண்டும் மற்றவர்களை திட்டிகொண்டும் இருப்பார்கள் ஆயினும் வேறுசிலர் எப்போதும் செயலைமட்டும் செய்து கொண்டு இருப்பார்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவர்களைவிட செயலை செய்பவர்களே நாட்டின் உண்மையான செல்வமாகும்.
ஆம் இந்தஇரண்டுவகை மனிதர்களில் நாம் எந்தவகையை சார்ந்தவர்கள் என முடிவுசெய்து கொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக