ஒருகிராமத்தில் வாழ்ந்தவந்த மனிதன் தன்னுடைய மகன்கள் நால்வருக்கும் நல்லதொரு வாழ்க்கைமுறைகளையும் மிகச்சரியாக முடிவெடுக்கும் திறனையும் கற்றுதர விரும்பினார் அதனால் முதல் மகனை அழைத்து அருகிலிருந்த காட்டிற்கு இலையுதிர் காலத்தில் சென்று பார்வையிட்டுவருமாறு கூறினார் அவ்வாறே பார்வையிட்ட முதல்மகன் “மரங்கள்முழுவதும் இலைகள் கீழே உதிர்ந்து மொட்டையாக இருக்கின்றது வெயிலிற்கு ஒதுங்ககூட நிழல் எதுவும் இல்லை பொட்டல்வெளிபோன்று இருக்கின்றது” எனவிவரித்தான்.
இரண்டாவது மகனை அதற்கடுத்த இளவேனிற்காலத்தில் அனுப்பி பார்வையிட்டு வருமாறு கூறினார், இரண்டாவது மகன் பார்வையிட்டு வந்து “அப்பா காடுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் துளிர்த்து இளந்துளிர்களுடன் உள்ளன என்னஅருமையான காட்சி” என விவரித்தான் அடுத்துமூன்றாவது மகனை அதற்கடுத்த பருவத்தில் அதே காட்டினை பார்வையிட்டு வருமாறு கூறியதை தொடர்ந்து மூன்றாவது மகனும் “அப்பா காடுகளில் உள்ள மரங்கள் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகின்றன தேனீக்களின் ரீங்கார சப்தம் ஒலித்துகொண்டே உள்ளன என்ன அருமையான காட்சி” என மெய்மறந்து கூறினான் அதற்கடுத்ததாக நான்காவது மகனை அதற்கடுத்த பருவத்தில் காட்டினை பார்வையிட்டுவருமாறு அனுப்பிவைத்தார் நான்காவதுமகன் “அப்பா காடுகளில் உள்ளமரங்களில் ஏராளமான பழங்கள் காய்த்து தொங்குகின்றன பறவைகளும் விலங்குகளும் அந்த பழங்களை உண்ணுவதற்கு ஓடியும் பறந்தும் செல்கின்றன காட்டிலேயே இன்னும் சிலநாட்கள் இருந்து நாமும் அந்த பழங்களை சாப்பிட்டு இருக்கலாம் என்ற அவா எனக்கு தோன்றியது” என விவரித்தான்
உடன் அம்மனிதன் தன்னுடைய அனைத்து மகன்களையும் ஒன்றாக அழைத்து பிள்ளைகளே நீங்கள் அனைவரும் இந்த காட்டினை குறிப்பிட்டபருவத்தில் மட்டும் பார்வையிட்டு உங்களுடைய கருத்தினை கூறினீர்கள் அதற்குபதிலாக அனைத்து பருவத்திலும் அதே காட்டினை பார்வையிட்டு பொதுவான ஒட்டுமொத்த கருத்தினை கூறுவதுதான் சரியான முடிவான கருத்தாகும் அவ்வாறே உங்களுடைய வாழ்விலும் குறிப்பிட்ட காட்சியை அல்லது நிலையை மட்டும் வைத்து உடன் முடிவெடுத்துவிடாதீர்கள் அதனுடைய மற்றொரு பக்கத்தையும் நன்கு பார்வையிட்டு இறுதியாக உங்களுடைய கருத்துகளை முடிவுசெய்திடுங்கள் என அறிவுரைகூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக