சனி, 9 மே, 2015

எதையும் மறைப்பதை தவிர்த்தால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கமுடியும்


ஒரு இனிய மாலைபொழுதில் இரண்டு பிள்ளைகள் தங்களுடைய வீட்டின்முன்புறம் காலியாக இருந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர் அவ்வாறு விளையாடியபின் சோர்வுற்றபோது அவர்கள் இருவரும் தத்தமது வீடுகளில் தங்களுக்கு அளித்த திண்பண்டங்களை தமக்குள் பங்கிட்டு தின்னலாம் என இருவரும் முடிவுசெய்து அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தனர்

அவ்விருவரில் ஒருபிள்ளை தன்னிடமிருந்த அனைத்து பொறிவிளங்காய் உருண்டைகளையும் எடுத்து பங்கிட்டு கொடுத்தவுடன் இருவரும் அதனை தின்றுமுடித்தனர்

உடன் மற்றொருபிள்ளையானது தன்னுடைய பையிலிருந்த எள்ளுருண்டைகளில் ஒன்றைமட்டும் மறைத்து வைத்து கொண்டு மிகுதியை மட்டும் பங்கிட்டு தின்றனர் .பிறகு பொழுது சாய்ந்துவிட்டதால் இருவரும் அவரவர்களுடைய வீடுகளுக்கு சென்று இரவு உணவை அருந்திவிட்டு உறங்க சென்றனர் .

முதலில் பொறிவிளங்காய் உருண்டைகள் பங்கிட்டு வழங்கிய பிள்ளையானது நன்றாக நிம்மதியாக உறங்கஆரம்பித்தது.

ஆனால்இரண்டாவதாக எள்ளுருண்டைகளில் ஒன்றை மறைத்தைவைத்து மிகுதியை பங்கிட்டு வழங்கிய பிள்ளையானது முதல் பிள்ளையானது ஏதேனும் பொறிவிளங்காய் உருண்டைகளை தன்னைபோன்று மறைத்து வைத்திருப்பானோ என சந்தேகத்தினால் தூக்கமே வராமல் இரவு நெடுநேரம் கண்விழித்தவாறு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துகொண்டிருந்தான்.

ஆம் நம்மில் பெரும்பாலானோர் இவ்வாறே எதையும் மற்றவர்களுக்கும் தெரியகூடாது அல்லது வழங்ககூடாது என மறைத்துவைத்துவிட்டு வாழ்வில்நிம்மதிஇல்லாமல் துன்புற்று அல்லல் உற்று பல்வேறு வியாதிகளின் பிடிகளில் சிக்கி தவிக்கின்றோம் அதனை தவிர்த்தால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கமுடியும் என்பதே உண்மையான நிலவரமாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...