.வெளிநாட்டினை சுற்றிபார்ப்பதற்காக சுற்றுலாவாக இந்தியாவிலிருந்து ஒருவன் சென்றான் அங்கு உள்ள கடைகளில் விதவிதமான சிலைகள் இருந்ததை கண்ணுற்று அவைகளில் வெங்கலத்தால் ஆன எலியின் உருவச்சிலை பார்வையாளர்களை கவரும் வண்ணம் மிக அழகாக இருந்தது அதனை தன்னுடைய வீடடிற்கு வாங்கி செல்லலாம் என அதனுடைய விலை என்னவென அந்த கடைமுதலாளியிடம் விசாரித்தபோது அந்த வெங்கலத்தால் ஆன எலியின் உருவச்சிலையின் விலையானது பத்து டாலர் என்றும் ஆனால் அந்த எலிஉருவச்சிலை உருவாக்குவதற்கான கதைக்கான விலை மட்டும் நூறு டாலர் என்றும் கூறினார் உடன் எலியின் உருவச்சிலைக்கு மட்டும் பத்து டாலரை வழங்குவதாகவும் எலிஉருவத்தை உருவாக்குவதற்கான கதையை கடைகாரரே வைத்துகொள்ளும்படி கூறி அந்த எலிஉருவசிலையைமட்டும் வாங்கிகொண்டு கடைத்தெருவில் இறங்கி நடக்கதுவங்கினார் உடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த நகரத்தின் வீடுகளில் வாழ்ந்துவந்த எலிகள் அவரை பின்தொடர ஆரம்பித்தன அந்த நகரை தாண்டும்போது நகரில் இருந்த இலட்சகணக்கில் ஏராளமான எலிகள் அவரை பின்தொடர ஆரம்பித்தன அவர் வேகமாக நடந்தால் அந்த எலிகளும் வேகமாக அவரை பின்தொடர்ந்தன அவர் விரைவாக ஓடஆரம்பித்தால் பின்தொடரும் எலிகளும் அவரோடு வேகமாக ஓடிவர ஆரம்பித்தன. என்னடா இது ஒரு வெங்கலச்சிலை அழகாக இருக்கின்றதே என அதனை நாம் வாங்கி எடுத்து செல்லமுடிவு செய்தால் அவ்வாறு எடுத்து செல்ல முடியவில்லையே யென தவித்தார் சரி இந்த சூழலிலிருந்து தப்பிப்பதற்காக என்னசெய்யலாம் என தவித்தபோது சிறந்ததொரு ஆலோசனை அவருடைய மனதில் தோன்றியது அதன்படி அந்த நகருக்கு அருகில் கடல் இருந்ததால் கடற்கரைக்கு வேகமாக ஓடிச்சென்று கரையிலிருந்து அந்த எலியின் வெங்கல உருவச்சிலையை கடலில் தூக்கி எறிந்தார் உடன் அவரை பின்தொடர்ந்து ஓடிவந்த அனைத்து எலிகளும் கடலிற்குள் பாய்ந்து குதித்தன அப்பாடா நிம்மதியாகிவிட்டது என அவர் மட்டும் கடற்கரையிலிருந்து அந்த நகரிலிருந்த அதே கடைக்கு திரும்பி வந்து சேர்ந்தார் ஹாஹா பார்த்தீர்களா அந்த எலிஉருவச்சிலை உருவாக்கியதற்கான கதையையும் எங்களுடைய கடையிலிருந்து வாங்க வந்துவிட்டீர்கள் அல்லவா என அந்த கடைகாரர் கூறினார் அதெல்லாம் எனக்கு தேவையில்லை ஐயா எலி உருவச்சிலையை வாங்கி நான் அவஸ்தை பட்டது போதும் அதற்கு பதிலாக இந்திய அரசியல் தலைவர்களின் உருவச்சிலை ஏதேனுமிருந்தால் வாங்கலாம் என வந்தேன் உங்களுடைய கடையின் வாங்கபடும் உருவச்சிலையினால் ஏராளமான மக்கள் பின்பற்றுவார்கள் அல்லவா அதனால்நான் தனிஅரசியல்கட்சி ஆரம்பிக்கலாம் அல்லவா என அரசியல் கட்சியினுடை தலைவர்களின் உருவச்சிலை இருக்கின்றதாவென அந்த கடையில் தேடஆரம்பித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக