சனி, 26 மார்ச், 2016

புறச்சூழல் என்னவாக இருந்தாலும் நம்முடைய முயற்சியில்,நம்முடைய செயலில் மட்டும் மிககவணமாக கருத்தூன்றி வெற்றிபெற முயற்சி செய்க


யானை ஒன்று ஆறு ஒன்றில் கட்டப்பட்டிருந்த ஒருபாளத்தின் வழியாக ஆற்றின் அடுத்த கரைக்கு செல்லவிரும்பி அந்த பாளத்தின் முகப்பில் நடக்க ஆரம்பித்தது. கொசுஒன்று அவ்வாறே ஆற்றின் அடுத்த கரைக்கு செல்ல விரும்பியது. ஆனால் அந்த கொசுவினால் அவ்வளவு தூரம் பறந்த செல்ல இயலவில்லை. அதனால் இந்த யானையின் முதுகில் கொசுவானது உட்கார்ந்து கொண்டு "யானையாரே நாமிருவரும் மிக அதிக எடையுடையவர்கள் அதனால் நாம் நடந்து செல்லும் போது இந்த ஆற்றின் பாளம் உடைந்துவிடப்போகின்றது அதனால் கவணமாக பார்த்து மெதுவாக நடந்து போங்கள்" என உத்திரவு இட்டது. யானை ஒன்றும் கண்டு கொள்ளாமல் நடந்துகொண்டிருந்தது.

யானையானது அந்த ஆற்றப்பாளத்தி நடுவில் நடந்து கொண்டிருந்தது. "ஐயோ இந்த ஆற்றில் எவ்வளவு வேகமாக வெள்ளம் சுழன்றோடு கின்றது யானையாரே பார்த்து மெதுவாக செல்லுங்கள்" என அந்த கொசுவானது உயிர்பயத்துடன் கத்தி உத்திரவிட்டது. அப்போதும் யானை எதையும் சட்டை செய்யாமல் நடந்துகொண்டிருந்தது.

ஒருவழியாக ஆற்றின் அடுத்த கரையை யானை சென்றடடைந்தது. உடன் கொசுவானது "யானையாரே பார்த்தாயா இவ்வளவு வேகமாக வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஆற்றின் அந்த கரையிலிருந்து இந்த கரைக்கு பாளத்தின் வழியாக பத்திரமாக நாமிருவரும் வந்து சேருவதற்காக நான் மிகச்சரியாக வழிகாட்டிவந்ததால் பிரச்சினை ஏதுமில்லாமல் நாமும் பாதுகாப்பாக வந்த சேர்ந்தோம். என்னை உன்னுடைய முதுகில் ஏற்றி வந்ததற்கு மிக்க நன்றி" எனக்கூறி விடைபெற்றது. அப்போதும் அந்த யானையானது அந்த ஆற்றின் மறுகரையில் எதனையும் சட்டை செய்திடாமல் தன்னுடைய இரையை தேட சென்றுகொண்டிருந்தது .

இதே போன்று நம்முடைய வாழ்வில் நாம் வாழும் இந்த சமூகத்தில் நம்முடைய செயலைபற்றியும் நம்முடைய பணியை பற்றியும் பலரும் பல்வேறுவிதமாக அவர்வர்கள் மனதில் தோன்றியவாறு தவறாக மதிப்பீடு செய்து தாங்கள்தான் நம்மை மிகச்சரியாக வழிநடத்தி செல்வதாகவும் நம்முடைய வெற்றிக்கு தங்களுடைய அறிவுரையே காரணம் என்றும் வெட்டிபந்தா காட்டிகொள்வார்கள். இவ்வாறான நிலையில் நாமும் அவ்வாறான எதனையும் கவணத்தில் கொள்ளாமல் நம்முடைய முயற்சியில்,நம்முடைய செயலில் மட்டும் மிககவணமாக கருத்தூன்றி வெற்றிபெற முயற்சி செய்க.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...