சனி, 23 ஏப்ரல், 2016

நாம் வாழும் இந்த சமூதாய மக்களின் மனப்பாங்குகளின் வகைகள்


டைட்டானிக்கப்பல் மூழ்கி அதில் ஏராளமான பயனிகள் இறந்த செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. அந்த கப்பல் மூழ்கி கொண்டிருக்கும்போது 7 கிமீ தூரத்தில் சாம்ஸன் என்றொரு கப்பல் பயனித்துகொண்டிருந்தது அந்த கப்பலில் உள்ளவர்கள் அனுமதியில்லாமல் விதிகளுக்கு மாறாக சீல் எனும் மீன்களை பிடித்து கொண்டிருந்தனர் டைட்டானிக்கப்பலின் வெள்ளைக்கொடியையும் அதிலிருந்த பயனிகள் தாங்கள் ஆபத்தில் சிக்கிகொண்டிருப்பதால் தங்களுடைய உயிரை காத்திடுமாறு கூவிக்கொண்டிருந்த்தையும் கண்ணுற்ற சாம்ஸன் கப்பலில் இருந்தவர்கள் டைட்டானிக் கப்பலில் இருப்பவர்கள் நம்மை போன்று விதிகளுக்கு மாறாக மீன் பிடித்து மாட்டிகொண்டார்கள் அதனால் நாம் அந்த பக்கம் சென்றால் நாமும் விதிகளுக்கு மாறாக மீன் பிடித்து கொண்டிருப்பதால் நாமும் மாட்டிகொள்வோம் அதனால் நீங்களும் இங்கு வந்து எங்களை போன்று மாட்டிகொள்ளவேண்டாம் என எச்சரிக்கை செய்தியை நமக்கு கூறுகின்றனர் நாம் வேறுபக்கம் சென்று மீன்பிடிக்கலாம் என தங்களுடைய கப்பலைவேறுபக்கத்திற்கு திருப்பி சென்றனர்

இரண்டாவதாக 14 கிமீ தூரத்தில் கலிபோர்னியோ எனும் கப்பல் பயனித்துகொண்டிருந்தது ஆயினும் அவர்களுடைய கப்பலைசுற்றி பனிக்கட்டியானது மலைபோன்று இருந்ததால் டைட்டானிக்கப்பலின் வெள்ளைக்கொடியையும் அதிலிருந்த பயனிகள் தாங்கள் ஆபத்தில் சிக்கிகொண்டிருப்பதால் தங்களுடைய உயிரை காத்திடுமாறு கூவிக்கொண்டிருந்த்தையும் கண்ணுற்ற கலிபோர்னியோ எனும் கப்பலில் பயனித்தவர்கள் நம்மைவிட மிகமோசமாக பணிக்கட்டியால் அவர்களுடைய கப்பல் சூழ்ந்துள்ளது போலும் நம்முடைய கப்பலையே நகர்த்துவதற்கு சிரமபடுகின்றோம் ஒரே இருட்டாகவேறு உள்ளது அதனால் இன்று இரவு தூங்கி காலையில் எழுந்தால் பகல் வெளிச்சத்தில் ஏதாவது வழிகிடைக்கின்றதாவென தேடிப்பிடித்திடலாம் என முடிவுசெய்து அவ்வாறே அனைவரும் தூங்க சென்றனர்

கார்பாத்தியா எனும் மூன்றாவது கப்பல் 50 கிமீ அப்பால் பயனித்துகொண்டிருந்தாலும் டைட்டானிக்கப்பல் மூழ்கி கொண்டிருப்பதையும் அதில்பயனித்தவர்கள் உயிரைகாப்பாற்றும்படியுமான வானொலி வாயிலான செய்தி கிடைக்கபெற்றவுடன் அவர்கள் டைட்டானிக்கப்பலை நோக்கி விரைவாக பயனித்து 700 க்கும் மேற்பட்ட பயனிகளின் உயிர்களை காப்பாற்றினர்

இந்த மூன்று கப்பல்களில் முதல்கப்பலில் பயனித்தவர்கள் போன்று நாம் வாழும் சமூகத்தில் யார் எப்படியிருந்தாலும் அதனைபற்றி கவலைப்படாமல் தங்களுடைய பணியை மட்டும் செய்பவர்கள் ஒருசாரர் இருக்கின்றனர்

இரண்டாவது கப்பலில் உள்ளவர்கள்போன்று தங்களுடைய பாதுகாப்பினை மட்டும் கவணித்தகொண்டு மற்றவர்களை பற்றி கவலைபடாமல் இருந்திடும் மற்றோரு சாரரும் உள்ளனர்

மூன்றாவது கப்பலில் உள்ளவர்கள் போன்று நம்முடைய சமூகத்தில் எங்கு எப்போது ஆபத்து ஏற்பட்டாலும் உடனடியாக அங்கு சென்று ஆபத்தில் சிக்கிகொண்டவர்களை காத்திடும் தன்னலமில்லாதவர்கள் ஒருசிலர் இந்த சமூகத்தில் இருப்பதால்தான் இந்த சமூதாயம் ஓரளவு நன்றாக இருக்கின்றது

வயதான பெற்றோர்களின் விரும்புவதை செய்திடுக


எங்களுடைய வயதான பெற்றோர்கள் வடஇந்தியாவில் உள்ள மற்றோரு சகோதரனுடைய வீட்டிற்கு செல்லவிரும்பினர் அதற்காக வழக்கமாக தொடர்வண்டியில் பயனிப்பதற்கு பதிலாக விமானத்தின் மூலம் பயனம் செய்யலாமே என விரும்பினர் அதனால் அதிக செலவாகுமே அவ்வாறெல்லாம் முடியாது என மறுத்ததுடன் இல்லாமல் இதுதொடர்பாக நீண்டவிவாதத்திற்கு பிறகு விமானத்தின் மூலம் அவர்கள் செல்வதற்காக பயனச்சீட்டு உறுதிபடுத்தபட்டது

விமான பயனம் துவங்கும் அன்று காலையிலேயே சிறுபிள்ளைகள் போன்று வயதான எங்களுடைய பெற்றோர்கள் பயனத்திற்கு தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தையும் மிக மகிழ்ச்சியாகவும் குதூகூலத்துடனும் தயார்செய்தனர் அதுமட்டுமல்லாது விமானத்திற்குள் ஏறுவதற்காக பாதுகப்பு பரிசோதனை போன்றவைகளை துவங்கிடும்போது அவ்விருவரும் சிறுகுழந்தைகள் போன்று எங்களுடைய வாழ்நாளில் ஒருநாளாவது விமானத்தில் பயனம் செய்வோமா என்று கனவு கண்டுகொண்டிருந்ததை தம்பி நீ நிறைவேற்றி விட்டாய் என என்னுடைய கையை பிடித்துகொண்டு கண்ணீர் விட்டு மகிழ்ச்சியுடன் அழுதனர் வயதான பெற்றோர்களும் குழந்தை போன்றவர்களே

நாம் சிறுவயதாக இருக்கும்போது நாம் கோரிய அனைத்தையும் தன்னுடைய சக்திக்கு ஏற்ப தங்களை தியாகம் செய்து செயல்படுத்தியதைபோன்று நாமும் நம்முடைய பெற்றோர்களுக்கு அவர்கள் வரும்புவதை செய்வதே நம்முடைய முதல் கடமைஎன உறுதிகொள்க.

சனி, 16 ஏப்ரல், 2016

உதவிதேவைப்படு்ம் மற்றவர்களுக்கு உதவிசெய்து வாழ்வதே உண்மையான மகிழ்ச்சியும் நிம்மதியுமான வாழ்க்கையாகும்


ஏராளமானஅளவில் வீடு ,நிலம்,பணம் என அனைத்தும் இருந்தும் வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லாமல் இருந்த ஒருவன் மனநல மருத்துவரிடம் சென்று "ஐயா எனக்கு போதுமான அளவில் அனைத்து செல்வங்களும் உள்ளன ஆனால் மகிழ்ச்சிமட்டும் இல்லை அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என கோரினான்

உடன் அம்மருத்துவர் "அப்படியா தம்பி "என அங்கு தரையை பெருக்கி சுத்தம் செய்துகொரண்டிருந்த வயதானபெண்ணை அழைத்து "நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றாய் எனக்கூறு" என்றார்

உடன் அந்த பெண்மனி தான் செய்து கொண்டிருந்த பணியை அப்படியே நிறுத்திவிட்டு "என்னுடைய கணவர் நோய்வாய்பட்டு இறந்தார் அதன்பின்னர் எங்களுடைய ஒரேமகனும் பயனத்தின்போது அடிபட்டு இறந்து விட்டான் அதனைதொடர்ந்து என்னுடைய வாழக்கைக்கு துனையாரும் இல்லை அதனால் நான்வயிறார சாப்பிடவும் நன்றாக தூங்கவும் முடியவில்லை மகிழ்ச்சி யென்பது என்னுடைய வாழ்வில் இல்லை என்ற நிலையாகிவிட்டது

அந்நிலையில் ஒருநாள் சிறியபூனைகுட்டி ஒன்று நான் வெளியில் சென்று வீடுதிரும்பிவரும்போது என்னை பின்தொடர்ந்து வந்தது வெளியே ஒரே குளிராக இருந்ததால் அந்த பூனை குட்டியை வீட்டிற்குள் அனுமதித்து அதற்கு ஒரு தட்டில் பாலினை ஊற்றினேன் உடன் அந்த பூனைகுட்டி தட்டில்ஊற்றிய பாலை குடித்தபின்னர் என்னுடைய பாதத்தினை நக்கி தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டது அதனை தொடர்ந்து முதன்முதல் என்னுடைய முகத்தில் அப்போதுதான் புன்னகை தோன்றியது மனதிலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

”சாதாரனமாக ஒரு சிறிய பூனைகுட்டிக்கு உதவிசெய்ததற்கே நம்முடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுகின்றது எனில் உதவிதேவைப்படும் மற்றவர்களுக்கு நம்மாலான உதவிசெய்தால் இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் வாழ்க்கையின் அர்த்தமும் கிடைக்கும் என முடிவுசெய்தேன் அதனால் தினமும் உதவிதேவைப்படும் எந்தவொரு நபருக்கும் என்னால் முடிந்த உதவியை செய்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன் அதனை தொடர்ந்து தற்போது நான் வயிறார சாப்பிட்டு நிம்மதியாக உறங்குகின்றேன் மற்றவர்களுக்கு என்னாலான உதவியை செய்து அதன்மூலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகின்றேன் என்றார்

"அய்யய்யோ நான் இந்த உலகில் மகிழ்ச்சியையும் சேர்த்து அனைத்தையும் பணத்தின்மூலம் வாங்கிவிடலாம் என தவறாக எண்ணியிருந்தேனே" என அழுதுபுலம்பினார் அதன்பின்னர் "இன்றுமுதல் நானும் உதவிதேவைப்படு்ம் மற்றவர்களுக்கு உதவிசெய்து மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற முயற்சிசெய்வேன்" என உறுதிகூறி சென்றார்

வியாழன், 14 ஏப்ரல், 2016

நம்முடைய வாழ்வில் ஏற்படும் எதிர்ப்புகளை கண்டு சோர்வுறாமல் அவைகளை எதிர்த்து போராடி வெற்றி பெறுக


எட்டுவயது உள்ள ஒருசிறுவன் தன்னுடைய தாத்தாவிடம் வந்து “தாத்தா நான் மிகச்சிறந்த வெற்றியாளனாக வளரவிரும்புகின்றேன் அதற்கான தங்களுடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளும் கூறங்கள்,” என கோரினான்.உடன் அவரும்அந்த சிறுவன் கோரியவாறு அவனுக்கான ஆலோசனைகள் எதையும் கூறாமல் அவனுடைய கையை பிடித்து அழைத்துகொண்டு அருகிலிருந்த நாற்றங்காளிற்கு சென்றார். அங்கு மரங்களுக்கான இரு நாற்றுகளை வாங்கிகொண்டுவந்து ஒன்றினை வீட்டிற்குள் ஒருமண்தொட்டியிலும் மற்றொன்றினை வீட்டிற்கு வெளியே தோட்டத்திலும் நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினா.ர் பின்னர் தங்களுடைய பேரபிள்ளையிடம் “இவ்விரண்டில் எது மிகப்பெரிய மரமாக வளரும்?” என வினவினார். உடன் அந்த சிறவன்“அதில் என்ன சந்தேகம் தாத்தா! வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளதுதான் வளர்ந்து மரமாகும்”, என பதிலிறுத்தான். “அப்படியா! சரிபார்க்கலாம்,”என பதில்கூறினார் .கல்லூரி செல்லும் இளங்காளையாக வளர்ந்தபின்னர் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தான் அப்போது தன்னுடைய தாத்தாவிடம் வந்து “தாத்தா! நான் எட்டுவயது சிறுவனாக இருந்தபோது மிகச்சிறந்த வெற்றியாளனாக வளருவதற்கான தங்களுடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கோரினேன் இதுவரையில் தாங்கள் எனக்கு எதையும் கூறவில்லை.” என வினவியபோது, “அப்படியா! சரி வா, நாமிருவரும் நட்டுவைத்த மரக்கன்றுகளை பார்த்திடுவோம் அதன்பின்னர் நீகோரியவாறு ஆலோசனைகளை உனக்கு கூறுகின்றேன்.” என பதிலிருத்தவாறு இருவரும் வீட்டிற்குள் மண்தொட்டியில் வைத்த மரக்கன்றினையும் வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் வைத்த மரக்கன்றினையும் பார்வையிட்டனர். என்னஆச்சரியம்! வீட்டிற்குள் பாதுகாப்பான இடத்தில் வைத்த மரக்கன்று குட்டையாக வளர்ச்சியெதுவுமில்லாமல் இருந்தது.ஆனால், வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் வைத்திருந்த மரக்கன்றானது மிகப்பெரியமரமாக வளர்ந்து பூவும் காயுமாக பூத்து குலுங்கியது. “பார்த்தாயா தம்பி! பாதுகாப்பான சூழலில் வைத்த மரக்கன்று பெரியமரமாக வளராமல் இருந்ததையும் வெளியே பாதுகாப்பற்ற சூழலில் வைத்த மரக்கன்று நல்ல மரமாக வளர்ந்துள்ளதையும்; இதேபோன்று நம்முடைய வாழ்விலும் ஏராளமான எதிர்ப்புகளும் மேடுபள்ளங்களும்குறுக்கிடும் நாமும் அவைகளை கண்டு சோர்வுற்று ஒதுங்கிவிடாமல் நாம்ம அவைகளுடன் போராடி வெற்றிபெறவேண்டும் என போராடுவோம் அதனை தொடர்ந்து நம்முடைய வாழ்க்ககையானது வெற்றிகரமாக அமையும். அவ்வாறில்லாமல் பாதுகாப்பான சூழலில் வாழ்க்கையானது வெற்றிகரமாக அமையாது என்பதை தெரிந்து கொள்: நீயும் அவ்வாறே நாம் வாழும் இந்த சமூகசூழலில் எதிர்ப்படும் எந்தவொரு இக்கட்டிற்கும் மிகச்சரியான தீர்வினை கண்டு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துகொள்!” என்று அறிவுரை கூறினார்.

நல்லமனமும் நல்ல செயலும் நல்லதையே நாடும்


ஒரு ஊரில் இரு சகோதரர்கள் இருந்தனர் அவர்களுள் ஒருவன் குடிகாரனாகவும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை எப்போதும் அடித்து உதைத்துகொண்டே இருப்பவனாகவும் வாழ்ந்துவந்தான். மற்றொருவன் அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்று அனைவராலும் விரும்பும் நல்ல குடும்பத்தலைவனாகவும் சமூகத்தில் அனைவராலும் விரும்பப்படும் மிகப்பெரிய வியாபாரியாகவும் மதிக்கதக்க நல்லதலைவனாகவும் விளங்கினான்.

அதனால் அந்த ஊரில் இருந்த ஒருசிலருக்கு ஒரே தாய்தகப்பனுக்கு பிறந்து ஒரேகுடும்ப சூழலில் வளர்ந்த இருசகோதரர்களும்எவ்வாறு வெவ்வேறு தன்மையுடன் மாறி யமைந்துவிட்டனர் என்ற மிகப்பெரிய சந்தேகம் வந்தது அதனை தீர்வு செய்வதற்காக முதல் சகோதரனிடம் “தம்பி!நீஏன் இவ்வாறு மகாகுடிகாரனாக மாறி உன்னுடைய வீட்டில் உள்ளவர்களை அடித்து உதைக்கின்றவனாக இருக்கின்றாய்?” என வினவியபோது, “எங்களுடைய தந்தை மகாகுடிகாரனாக இருந்தார் எப்போதும் வீட்டிற்கு வந்துவீட்டில் உள்ளவர்களை அடித்து உதைப்பவராக வாழ்ந்துவந்ததை நான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து பார்த்து வளர்ந்து வந்தேன் அதனால் நாமும் அவ்வாறே இருக்கலாம் எனமுடிவுசெய்து அவ்வாறே தற்போது இருந்துவருகின்றேன்.” என்றான்.

இரண்டாம் சகோதரனிடம் அவ்வாறே “தம்பி! ஒரே தாய்தகப்பனுக்கு பிறந்து ஒரேகுடும்ப சூழலில் வளர்ந்த உங்கள் இருவரில் நீமட்டும் எப்படி அனைவராலும் மதிக்கதக்க நலலதலைவனாகவும் மற்றொருவன் குடிகாரனாகவும் மாறிவிட்டீர்கள்?” என வினவியபோது, “ எங்களுடைய தந்தை மகாகுடிகாரனாக இருந்தார். எப்போதும் வீட்டிற்கு வந்துவீட்டில் உள்ளவர்களை அடித்து உதைப்பவராக வாழ்ந்துவந்ததை நான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து பார்த்து வளர்ந்து வந்தேன். அதனால், நாம் அவ்வாறில்லாமல் அனைவராலும் மதிக்கதக்க நல்லதலைவனாக வாழவேண்டும் என முடிவுசெய்து அதன்படி வாழ்ந்துவருகின்றேன்.” எனக்கூறினான்.

நாம் வாழும் சூழல் ஒன்றாக இருந்தாலும் அதனை அவரவர்கள் எவ்வாறு தங்களுக்கு முன்மாதிரியாக அதாவது அதற்கு எதிர்மறையாகவோ அல்லது நேராகவோ எடுத்து கொள்வதற்கேற்ப நல்லமனம் நல்லதையே நாடும் என்ற அடிப்படையில் அவரவர்களுடைய வாழ்க்கையும் மாறியமையும்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...