ஒரு வயதான தந்தையும் அவருடைய மகனும் நகரத்தில் இருந்த பிரபலமான உணவகத்திற்கு உணவு உண்பதற்காக சென்றமர்ந்தனர் அந்த வயதான தந்தை மிகவும் நலிவுற்று மெலிவுற்று இருந்தார் தொடர்ந்து அவ்விருவருக்கும் தேவையான உணவுவகைகள் பரிமாற பட்டு உண்ண ஆரம்பித்தனர் வயதான தந்தை உண்ணும்போது அவருடைய உடையிலும் இலையை சுற்றியும் இரைத்துகொண்டும் சிந்தி கொண்டும் உண்டார் அதனால் அந்த உணவகத்தில் உணவு உண்ண வந்தவர்கள் அனைவரும் இந்த வயதான தந்தை உணவு உண்ணுவதை மிக அருவருப்பாக பார்த்துகொண்டிருந்தனர் இது அவருடைய மகனுக்கு மிக இக்கட்டண நிலையாகிவிட்டது இருந்தபோதிலும் வாய்திறக்காமல் அமைதியாக தன்னுடைய தந்தை உணவு உண்ணுவதற்கு தேவையான உதவியை மட்டும்செய்து வந்தான் அதனை தொடர்ந்து அவ்விருவரும் உணவு உண்டபின்னர் அந்த மகன் தன்னுடைய தந்தையை கைகழுவுமிடத்திற்கு கைத்தாங்கலாக பிடித்து அழைத்து சென்று சிந்திய அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து திரும்பியபின் உணவிற்கான தொகையை வழங்கியபிறகு தன்னுடைய தந்தை கைபிடித்து அழைத்து கொண்டு உணவகத்தின் வாயிலை நெருங்கினான் அப்போது வயதான தந்தையானவர் தம்பி உணவகத்தில் ஏதாவது விட்டுவிட்டு வந்தாயா என வினவியபோது மகன் ஒன்றும் விட்டுவிடவில்லை அப்பா என்றான் இல்லை தம்பி ஏதோ உணவகத்தில் விட்டுவிட்டவந்தது போன்று தெரிகின்றது என மீண்டும் அந்த வயதான தந்தை கூறியவுடன் மகன் அவர்களிருவரும் உணவுஉண்டஇடத்தை மீண்டும் திரும்பி பார்த்து விட்டு ஒன்றும் இல்லை அப்பா என பதில் கூறினான் இல்லை தம்பி பல்வேறு மக்களும் நடமாடும் பொது இடங்களில் ஒவ்வொரு மகனும் தன்னுடைய வயதான தந்தைக்கு எவ்வாறு பணிவிடை செய்வது பராமரிப்பது அறிவுரையை இந்த உணவகத்தில் விட்டிட்டு வந்துள்ளாய் தம்பி எனக்கூறியவுடன் அந்த உணவகத்தில் இருந்த அனைவரும் தத்தமது செயலை அப்படியே பாதியில் விட்டிட்டு அமைதியாக அவ்விருவரையும் மிக ஆவலோடு பார்த்து விடைகொடுத்து அனுப்பினர்
நீதி வயதானவர்களுக்கு தேவையான உதவியை செய்வது இளையோர்களின் அடிப்படை கடமையாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக