திங்கள், 12 டிசம்பர், 2016

முட்டாள்களிடம் நல்ல ஆலோசனைகளை கூறாதே


.ஒரு காட்டில் இருந்த மரமொன்றின் மீது பல்வோறு வகையான பறவைகள் தாங்கள் தங்குவதற்கேற்ற சிறிய கூடுகளை அமைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. மழைக்காலம் தொடங்குவதற்குமுன், அவையனைத்தும் தங்களுடைய குடியிருப்பான கூடுகளை சிறுசிறு குச்சிகளையும் இலைகளையும் கொண்டு பழுதுபார்த்ததோடுமல்லாமல். மேலும் தாங்களும் தங்களுடைய குஞ்சுகளும் பாதுகாப்பாக இருப்பதற்கான வழிவகைகளை செய்தன அதுமட்டுமல்லாது வரும் மழைகாலத்தில் வெளியில் சென்று தங்களுக்கு தேவையான இரையை தேடிடமுடியாது அதனால் நாம் இதற்காக போதுமான உணவுகளை தேடிபிடித்து கொண்டுவந்து சேமித்துவிடுவோம் என வயதுமுதிர்ந்த பறவை ஒன்று கூறியதை தொடர்ந்து அனைத்து பறவைகளும் காடு எங்கும் அலைந்து திரிந்து போதுமான உணவினை தேடிபிடித்து கொண்டுவந்து கூடுகளில் சேமித்து வைத்தன அதனால் இவைகள் எப்போதும் ஓய்வில்லாமல் உழைத்தவாறு இருந்துவந்தன விரைவாக மழைக்காலம் துவங்கி இடியுடன் கூடிய மழையும் வந்தது. அந்த மழையானது தொடர்ந்து கொட்டிகொண்டே இருந்ததால் குளிரும் நடுக்குமமாக இருந்ததால் அந்த மரத்தில் வாழ்ந்து வந்த பறவைகள் வெளியே எங்கும் செல்லாமல் பாதுகாப்பாக தத்தமது கூடுகளிலேயே தங்கியிருந்தன .

அந்த மழையானது பல நாட்கள் தொடர்ந்து பெய்துகொண்டேயிருந்தது அப்போது ஒருநாள் குரங்குஒன்று அந்த மரத்தின்கீழ் வந்துசேர்ந்தது அதுமழையில் நன்கு நனைந்து அதனுடைய உடலிலிருந்து மழைநீர் சொட்டுசொட்டாக சொட்டியவாறும் கடுங்குளிரில் பல்லெல்லாம் கிடுகிடுவென நடுங்கியவாறும் அமர்ந்து கொண்டிருந்தது மேலும் "ஸ்ஸ்ஸ்! மிகவும் கடுங்குளிர்! " என குரங்கு தனக்குத்தானே கூறிக்கொண்டது அதனை பார்த்துகொண்டிருந்த அந்த மரத்தின் வாழ்ந்துவந்த பறவைகள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன தொடர்ந்து மிகவும் பரிதாபமான அதனுடைய நிலையை பார்த்த பறவை ஒன்று"அண்ணா! ' எங்கள் சிறிய கூடுகள் நீங்கள் குளிரிலிருந்து பாதுகாப்பாக தங்குவதற்கு போதுமானதாக இல்லை. ". எனக்கூறியாது அதனை தொடர்ந்து மற்றொரு பறவையானது " இந்த மழைக்காலம் துவங்குவதற்கு முன் நீங்களும் வாழ்வதற்கு கேற்ற நல்ல பாதுகாப்பான தங்குமிடத்தை அமைத்திருந்தால் இவ்வாறு குளிரில் நடுங்கிடாமல் எங்களைபோன்று பாதுகாப்பாக இருந்திருக்கலாமே “ என அறிவுரை கூறியாது

" நான் என்ன செய்ய வேண்டும்? என என்னிடம் சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் உள்ளது! இதோபார் உங்களை என்ன செய்கிறேன்" என்று அந்த குரங்கு மிகுந்த கோபத்துடன், மரத்தின் கிளைகளில் தாவி ஏறி அம்மரத்திலிருந்த பறவைகளின் கூடுகளை பிய்த்து கிழித்து தரையில் வீசியெறிந்தது அதனால் அந்த பறவைகளும் அவைகளின் குஞ்சுகளும் மிகவும் பாதுகாப்பாற்ற ஆதரவற்ற நிலையில் அந்தமரத்தில் கீச்கீச்சென் கத்தி கொண்டு உயிர் தப்பி மழையில் நனைந்து அங்குமிங்கும் அடைக்கலம் தேடி சென்று கொண்டிருந்தன.

முட்டாள்களிடம் அவர்கள் வாழ்வதற்கான நல்ல ஆலோசனைகளை கூறினால் அதனை அவர்கள் ஒருபோதும் ஏற்கவும் மதிக்கவும் மாட்டார்கள் அதனால் அவர்களுக்கு அவ்வாறான ஆலோசனைகளை கூறாமல் இருப்பதே நமக்கு பாதுகாப்பானது என இந்த நிகழ்வின்மூலம் அறிந்து கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...