திங்கள், 19 டிசம்பர், 2016

ஒரு பெண் சுயதொழில் செய்து வெற்றிபெறமுடியுமா?


ஒரு இளம்பெண் தன்னுடைய கல்லூரிபடிப்பை முடித்தவுடன் அப்பெண்ணினுடைய பெற்றோர்கள் "பொதுவாக இதன்பின்னர்பெண்கள் பிஎட் எனும் இளங்கலை கல்வியியல் பயின்று பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதுதான் நல்லது" என ஆலோசனை கூறினார்கள் ஆனால் அந்த பெண் கராத்தே கலையை கற்றிட விரும்பி அதற்கான பயிற்சியில் சேர்ந்து நன்கு கற்று அதில Black Belt பெற்றாள்.அதனை தொடர்ந்து அவளுடைய பெற்றோர்களின் வற்புறுத்தலினால் பள்ளிகளில் வேலை தேட ஆரம்பித்தாள் ஆனால் நாட்டில் வேலையின்மை பிரச்சினையாநது நாளுக்கு நாள் அதிகமாகி வேலைதான் குதிரை கொம்பாக இருந்தது.ஆயினும் இவ்வாறான நிலையில் தனியார் பள்ளிகளானது தம்முடைய பள்ளிகளில் படித்திடும்பிள்ளைகளின் பெற்றோர்களிடம் அதிகஅளவு கட்டணங்களை வசூல்செய்திடும் ஆனால் அந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குதான் மிககுறைந்த சம்பளமே வழங்கும் நிலையில் என்னசெய்வது என அவள் தடுமாறி நின்றபோது சொந்தமாக கராத்தே கலையை மாணவர்களுக்கு கற்றுதரும் ஒரு கராத்தே பள்ளியை துவங்கிடலாம் என அந்த பெண் முடிவுசெய்தாள் உடன் அவளுடைய பெற்றோர்கள் பெண்கள் அவ்வாறான சுயதொழில் எதுவும் செய்யவும் கூடவும் கூடாது செய்யவும்முடியாது என மறுத்து தடுத்தனர்

ஆனாலும் அந்த பெண்ணானவள் அவளுடைய பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி சுயமாக தொழில் செய்யவேண்டும் என்ற பேரவாவினால் ஒரு வாடகை இடத்தில் தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் கராத்தே பயிற்சி பள்ளியொன்றை ஆரம்பித்தாள் அதனை தொடர்ந்து காலப்போக்கில், அவளுடைய கல்லூரி நண்பர்களின் வாயிலாக அந்த பகுதியில் அந்தகராத்தே பள்ளி நன்கு அறிமுகமாகி அப்பள்ளியானது மிகவேகமாக வளர்ந்து அதன்மூலம் போதுமான வருமானமும் அவளுக்கு கிடைத்தது அதனால் அவளுக்கென்று சொந்த வீடு இதர அத்தியாவசி பொருட்கள் என வந்து சேர்ந்தன இவ்வாறு வாழ்வில் வெற்றி பெற்ற அந்த பெண்ணானவள்

இவளுடைய இந்த சொந்த தொழில் துவங்கிடவேண்டும் என்ற முடிவு சரியா? இன்றைய போட்டிகள் நிறைந்த வாழ்வில் வேறு துறைகளிலும் சம்பளத்திற்கான பணிவாய்ப்பினை நாடாமல் அல்லது தேடாமல் இவ்வாறு ஒரு பெண் சுயதொழில் செய்வது சரியானதா? ஒரு பெண் இவ்வாறாக சுயதொழில் செய்து வெற்றிபெறமுடியுமா? ஆகிய கேள்விகளுக்கு பார்வையாளர்களாகிய நம்முடைய பதில் என்ன?

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...