ஞாயிறு, 25 டிசம்பர், 2016

உண்மையான அழகு நாம் கண்களால் காணும் உடல் தோற்றத்தில் இருக்காது உள்ளத்தில் மட்டுமே இருக்கும்


முன்னொரு காலத்தில் ஒரு பணக்கார வயதான மனிதன் மிகப் பெரிய வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தார். அவருடைய உடல்நிலை நாளுக்கு நாள் தளர்ந்து பலவீனமாகிக்கொண்டே வந்ததால் அவரால் தன்னுடைய உடல்நிலையையும் தன்னுடைய பெரிய வீட்டையும் பார்த்து நன்கு பராமரித்துக்கொள்ள முடியவில்லை அதனால் அவர் தன்னுடைய பெரிய வீட்டின் சகல வேலைகளுக்கு உதவவும் தன்னை கவனித்து பராமரித்திடவும் பணியாளர் ஒருவரை பணியமர்த்திட எண்ணினார்.

அதனை தொடர்ந்து அந்த வயதான மனிதன் சங்கர் , அருணன் ஆகிய இருவர்களையும் தன்னுடைய பணியாளர்களாக நியமித்தார். அவர்களுள் சங்கர் ஒரு அழகானாகவும் ஆனால் அருணன் ஒரு அசிங்கமான தோற்றத்துடனும் இருந்தனர் அவர்கள் பணியில் சேர்ந்த அன்று அந்த வயதான மனிதன் தன்னுடைய பணியாளரில் ஒருவனாகிய சங்கரிடம் தன்னுடைய வீட்டின் சமையலறைக்கு சென்று தனக்கு ஒரு கோப்பை தேநீர் தயார்செய்து கொண்டுவருமாறு கேட்டுகொண்டார் .

அந்த வயதான மனிதன் கூறிய பணியை நிறைவேற்றுவதற்கு சங்கர் அவ்விடத்திலிருந்து சென்றபின் அகமது எனும் பணியாளர் இருக்கும் பக்கம் திரும்பி , " உன்னை பற்றி சங்கர் மிகவும் தவறாக கூறுகின்றார் அதாவது நீ ஒரு மோசமான ஆள் என்றும் நம்பிக்கைக்குரிய ஆள்அன்று என்றும் கூறுகின்றார் அது சரிதானா ?" என அந்த வயதான மனிதன் கூறினார்

இதனை தொடர்ந்து அருணன் ஒரு கணம் மட்டும் சிந்தித்த பின் "சங்கர் ஒரு மிக அழகான மனிதர் அவருடைய அகத்தில் இருப்பதே முகத்தில் வெளிப்படும் என்பதற்கேற்ப அவர் மிக அழகான தோற்றத்தை கொண்டுள்ளார் " எனக்கூறினார்

மேலும் ஒரு அழகான மனிதர் பொய் ஒன்றும் சொல்லமாட்டார் என்று அருணன் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார் அதனால் அவர் அந்த வயதான மனிதனிடம் "சங்கர் என்னைப் பற்றி தவறான கருத்தினை கொண்டுள்ளார் என்றால், கண்டிப்பாக என்னை அறியாமல் தவறு ஏதாவது என்னிடம் இருக்கும். என நினைக்கின்றேன் அதனால் அவர் கூறுவது சரியாகவும் இருக்ககூடும்"என்று கூறினார் இவ்வாறான கருத்தினை அருணன் கூறியதை தொடர்ந்து மிகவும் அசிங்கமான முகத்தோற்றத்துடன் இருந்த அருணன் எனும் பணியாளரின் உண்மையான மனித தன்மை அந்த வயதான மனிதனை கவர்ந்தது. இதற்கிடையில், சங்கர் தன்னுடைய முதலாளிக்கு ஒரு குவளை தேநீர் கொண்டு வந்தார்.

அதனை கண்ணுற்ற வயதான மனிதன் தனக்கு காலை உணவினை தயார் செய்யுமாறு அருணனிடம் கூறி அனுப்பிய பின்னர் சங்கர்இருக்கும் பக்கம் திரும்பி, "உன்னை பற்றி அருணன் மிகவும் தவறாக கூறுகின்றார் அது பற்றி நீ என்ன சொல்கிறாய்?" எனக்கூறினார் இதைக்கேள்விப்பட்ட சங்கர் கோபம் அதிகமாகி "அருணன் ஒரு பொய்யன்! ஒரு போக்கிரி!" என்றவாறு மிக மோசமான கருத்துக்களை அருணன் மீது சுமத்தி கோபமாக கூறத் தொடங்கினார்.

இதனை தொடர்ந்து அந்த வயதான மனிதன் "ஒரு அழகான தோற்றத்தைக் கொண்ட மனிதனின் உள்ளம் அழகற்று உள்ளது என்றும் ஆனால் அசிங்கமான வெளிப்புற தோற்றத்தை கொண்டவனின் உள்ளம் அழகானதாக உள்ளது அதனால் உருவத் தோற்றத்திற்கும் உள்ளத்திற்கும் தொடர்பு எதுவும் இல்லை " என்ற முடிவிற்கு வந்தார்.

.கதையின் கருத்து "உண்மையான அழகு நாம் கண்களால் காணும் உடல் தோற்றத்தில் இருக்காது உள்ளத்தில் மட்டுமே இருக்கும் நம்முடைய கண்களால் காணும் அழகான தோற்றம் என்றாவது ஒருநாள் மறைந்துவிடும் ஆனால் அகத்தின் அழகே முகத்தின் அழகாக நம்முடைய இதயத்தில் எப்போதும் தங்கிஇருக்கும்"

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...