புதன், 4 ஜனவரி, 2017

மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதை தவிர்த்து மகிழ்ச்சியான வாழ்வை உறுதிபடுத்திடுக


ஒருதச்சு தொழில் செய்திடும் தச்சர் ஒருநாள்மாலை நேரத்தில் அன்றைய பணிமுடிந்து தன்னுடைய தொழிலகமான தச்சுப்பட்டறையை மூடிபூட்டிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றார் அதன்பிறகு விஷமுள்ள கருநாகபாம்பு ஒன்று மிகப்பசியோடு அவரது பட்டறைக்குள் நுழைந்தது தனக்கு எலி போன்ற இரை ஏதேனும் கிடைக்குமா என அந்த பட்டறை முழுவதும் அது தேடி அலைந்தது தச்சு பட்டறையில் எலிக்கு என்ன வேலை அதனால் கருநாகபாம்பிற்கு தேவையான உணவு கிடைக்காத விரக்தியில் அது மிகவேகமாக அலைந்து திரிந்ததால் அந்த தச்சுபட்டறையிலிருந்த இருபுறமும் வெட்டுகின்ற கூரான நீண்ட வாளில் இதனுடைய உடல் பட்டு சிறியஅளவு கீறி விட்டது இதனால் கோபம் கொண்ட அந்த கருநாகமானது மற்றவர்களை கடித்து கொல்லுகின்ற வீரமுள்ள என்னுடைய உடலையே கீறி விட்டாயா உன்னை என்னசெய்கின்றேன் பார் என கோபமாக அந்த கூர்மையானபகுதியை தன்னுடைய வாயால் கொத்தியது மூர்க்கனிடம் சண்டையிட்டால் நமக்குதானே நஷ்டம் என்பதற்கு ஏற்ப அந்த கருநாகத்தின் வாயிலும் அந்த கூர்மையான வாளின் பகுதி கீறி வாயெல்லாம் இரத்தம் கொட்டுமாறு ஆகிவிட்டது அதனால் அடே என்னிடம் நேருக்குநேர் மோதுகின்றாயா நீயா நானா என பார்த்துவிடலாம் என கோபம் மிகவும் அதிகமாகி கண்மண் தெரியாமல் தன்னுடைய நீண்ட உடலை கொண்டு அந்த இருபுறமும் கூரான வாளினை சுற்றி வளைத்து இறுக்கி நெருக்கியது முடிவு அந்த கருநாகத்தின் உடல்தான் துண்டுதுண்டாக வெட்டப்பட்டதுதவிர வாளிற்கு தீங்கு ஒன்றும் நேரவில்லை பாம்பின் சொந்த கோபமும், மூர்க்கமான செயலே அதனுடைய உயிர் போவதற்கு காரணமாகிவிட்டது ஆனால் அந்த வாளானது எப்போதும் போலவே அப்படியேதான் இருந்தது மறுநாள் காலை அந்த தச்சர் தன்னுடைய தச்சுபட்டறையை திறந்து பார்த்தபோது வாளிற்கு அருகில் துண்டுதுண்டான கருநாக பாம்பின் உடல் மட்டும் கிடந்ததை கண்ணுற்றுவுடன் அவருக்கு மிக ஆச்சர்யமாகிவிட்டது

அதேபோன்றே நம்மில் பலரும் சில நேரங்களில் தேவையில்லாத நிகழ்வுகளில் கூட குறிப்பிட்ட நபரால்தான் நமக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டது என நமக்கு கோபம் அதிகமாகி காரணமான மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதற்காக நாம் முயற்சி செய்திடுவோம் ஆயினும் நேரம் போக போக அதனுடைய பாதிப்பு நமக்கே திரும்ப ஏற்படுவதை நாம் உணராமல் அறியாமல் தெரியாமல் நமக்கு நாமே தீங்கிழைத்து கொள்வோம் அதனால் இதனை தவிர்த்து மகிழ்ச்சியான நம்முடைய வாழ்க்கையில், அவ்வாறான நிகழ்வுகளை புறக்கணித்து சமாளித்து வாழக்கற்றுக்கொள் வோம் நம்முடைய வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக ஆக்கிடுவோம் எனஉறுதிமொழி ஏற்றுக்கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...