செவ்வாய், 17 ஜனவரி, 2017

சமமற்ற பங்கீடு


அரேபிய நாட்டில் முஸ்லீம் ஒருவர் இருந்தார் அவருக்கு ஒரு ஒட்டகமும் பேரிச்சை மரம் ஒன்றும் இருந்தன ஒட்டகபாலும் பேரிச்சைபழமும மட்டுமே அவர்களின் குடும்ப வருமானமாகும் அவருக்கு ஒருமனைவியும் அலி, அக்பர் ஆகிய இருபிள்ளைகளும் இருந்தனர் பிள்ளைகள் வளர்ந்துவரும்போது திடீரென அந்த கணவன் மனைவி ஆகிய தம்பதிகள் இருவரும் அகால மரணம் அடைந்தவிட்டனர் அதனால் பிள்ளைகள் தங்களுடைய பிழைப்பை பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது பெரியவன் அலி மிகவும் தந்திர சாலி பேராசைக்காரன் இளையவன் மிகவும் அன்புடையவன் அனைவரிடமும் மிக சுமுகமாக பழகுபவன் அவ்விருவரும் குடும்ப சொத்தான ஒட்டகத்தையும் பேரிச்சமரத்தையும் எப்படி பாகம் பிரிப்பது என பிரச்சினை எழுந்தபோது பெரியவன் தந்திரமாக தம்பி நான் நம்முடைய குடும்பத்தில் பெரியவன் அதனால் பேரிச்சை மரத்தின் மேல்பகுதி எனக்கும் கீழ்பகுதி உனக்கும் அதேபோன்று ஒட்டகத்தின் பின்பகுதி எனக்கும் முன்பகுதி உனக்கும் என பங்கிட்டுகொள்வோம் அந்தந்த பகுதியில் வரும் இலாப நட்டங்களை வருமான செலவுகளை அவரவர்கள் ஏற்றுகொள்ளவேண்டும் என ஒப்பந்தம் செய்தான் அதனை தொடர்ந்த இளையவன் ஒட்டகத்தி்ற்கு தேவையான குடிநீர் உணவு போன்றவற்றை அளித்து வந்தான் அவ்வாறே பேரிச்சமரத்தின் அடிமரத்தை சுற்றி பாத்தி கட்டி நன்கு நீர் பாய்ச்சி வந்தான் பெரியவன் அலி ஒட்டகத்தின் பாலை கறந்து விற்றும் பேரிச்சம் பழத்தை விற்றும் பணம் சம்பாதித்து வந்தான் ஆனால் இளையவன் அக்பருக்கு வருமானம் இல்லை செலவு மட்டுமே அதனால் அலியிடம் விற்பணை வருமானத்தை தனக்கு பங்கிட்டு தருமாறு இளையவன் அக்பர் கோரியபோது ஒப்பந்தத்தின்படி ஒட்டகத்தின் பின்பகுதியும் பேரிச்சமரத்தின் மேல்பகுதியின் வருமானமும் தன்னைத்தான் சேரும் என வாதிட்டான் இதனை கண்ணுற்ற வழிபோக்கன் ஒருவன் இளையவன் காதில் இரகசியமாக ஏதோ கூறி அவ்வாறு செயல்படுமாறு கூறினான் அதனை தொடர்ந்து மறுநாள் பெரியவன் அலி ஒட்டகத்தின் மடியில் பால்கறந்து கொண்டிருக்கும்போது இளையவன் அக்பர் ஒட்டகத்தின் முன்பகுதியை சாட்டையால் அடித்தான் அதனால் ஒட்டகம் வலிதாங்காது பால் கறந்து கொண்டிருந்த பெரியவன் அலியை தன்னுடைய காலால் எட்டி உதைத்து தள்ளியது அதனை தொடர்ந்து ஐயோ அம்மா என அடித்துபிடித்து எழுந்து ஓடினான்பெரியவன் அலி அப்போது தம்பி ஏன் அவ்வாறு ஒட்டகத்தை சாட்டையால் அடிக்கின்றாய் என பெரியவன் அலி வினவியபோது ஒப்பந்தத்தின் படி ஒட்டகத்தின் முன்பகுதியில் நான் என்னவேண்டுமானாலும் செய்து கொள்வேன் அதை நீ கேட்க முடியாது என இளையவன் அக்பர் கூறினான் இவ்வாறே மறுநாள் பெரியவன் அலி பேரிச்சமரத்தில் ஏறி பழத்தை பறித்து கொண்டிருக்கும்போது இளையவன் அக்பர் பேரிச்சமரத்தின் அடிமரத்தினை கோடாளியால் வெட்டத் துவங்கினான் உடன் பெரியவன் அலி தம்பி தம்பி நிறுத்து உன்னுடைய செயலை நான் பேராசையால் வருகின்ற வருமானத்தை இருவரும் பங்கிட்டு கொள்வதை தவிர்த்து தவறு செய்துவிட்டேன் இனிமேல் வருகின்ற வருமானத்தை இருவரும் சமமாக பங்கிட்டுகொள்வோம் அவ்வாறே அவைகளின் பராமரிப்பையும் இருவரும் சமமாக செய்திடுவோம் என திருந்தி சரிசெய்தான்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...