.நாம் ஒரு நேர்மறையான சிந்தனை, மற்றொரு எதிர்மறையான சிந்தனை ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினை விவரிக்கின்ற பழைய கதை ஒன்றினை கண்டிப்பாக கேள்விபட்டிருப்போம்:
அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு சூரியன் மறையாத ஆட்சிபுரி்ந்த பிரிட்டன் நாட்டின் காலணி உற்பத்தி செய்திடும் ஒரு நிறுவனமானது தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு விற்பனையாளர்களை அழைத்து அவ்விருவரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று தங்களுடைய நிறுவனத்தின் உற்பத்தி பொருளான காலணிகளின் விற்பணையை மேலும் உயர்த்துவதற்குதேவையான சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டது .
அதனை தொடர்ந்து அவ்விருவரும் ஒருவாரகாலம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றுவந்தனர் பிறகு முதல் விற்பனையாளர், "ஆப்பிரிக்க நாடுகளில் காலணிகள் எதையும் யாரும் அணியவில்லை அதனால் அங்கு காலணி விற்பதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை " என தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்தார்
இரண்டாவது விற்பனையாளர், "ஆப்பிரிக்க நாடுகளில் காலணிகள் எதையும் யாரும் அணியவில்லை அதனால் நம்முடைய நிறுவனத்தின் காலணிகளை அங்கு விற்பணை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன " என சமர்ப்பித்தார்
"ஆப்பிரிக்க நாடுகளில் யாரும் காலணிகள் அணியவில்லை" என்பதுதான் உண்மையான நிலவரமாகும் அந்த கள நிலவரத்தை முதல் விற்பணையாளர் எதிர்மறையாக சிந்தித்து "அங்கு காலணி விற்பதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை " என்றும் அதே களநிலவரத்தை நேர்மறையாக சிந்தித்து "நம்முடைய நிறுவனத்தின் காலணிகளை அங்கு விற்பணை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன " என இரண்டாவது விற்பணையாளரும் அறிக்கை சமர்ப்பித்தனர் - இந்த எளிய குறுகிய கதையானது எவ்வாறு இரண்டு வெவ்வேறு வழிகளில் ஒரே களநிலவரத்தை கருதலாம் என்பதற்கான சிறந்த உதாரனத்தை நமக்கு வழங்குகின்றது.
அதே போன்று நம்முடைய வாழ்வில் எதிர்படும் எந்தவொரு நிகழ்வையும் நேர்மறையாக சிந்தித்து நமக்கு ஏற்றவாறு அதனை பயன்படுத்தி நம்முடைய வெற்றிகரமான வாழ்வின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு தயார் செய்து கொள்வது எனவிழிப்புடன் நேர்மறையான சிந்தனையில் இருக்கவேண்டும் அதாவது எந்தவொரு நிகழ்வையும் நமக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றிகொள்ள தயாராக இருக்கவேண்டும் என நாம் அனைவரும் உறுதிமொழியேற்போம் வெற்றிபெறுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக